Breaking: மூணாறில் வேன் கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி; 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்

தோண்டிமலை என்னும் இடத்தின் அருகே மணப்பெண் சென்ற வேனுக்கு பின்னால் அவரது உறவினர்கள் சென்ற வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த 50 அடி ஆழ பள்ளத்திற்குள் கவிழ்ந்தது.

Munnar Van Accident: At least 3 killed; More than 50 people injured

மூணாறில் நடைபெற உள்ள திருமண நிகழ்விற்காக மணப்பெண்ணின் உறவினர்கள் சென்ற வேன் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து மூன்று பேர் பலி. 15க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள லட்சுமி எஸ்டேட்டைச் சேர்ந்தவர் அருண்.இவருக்கும் திருநெல்வேலி மாவட்டம் பாலமடை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த ஜான்சி என்பவருக்கும், நாளை காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் மூணாறு லட்சுமி எஸ்டேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற உள்ளது.

இதற்காக இன்று பிற்பகலில் மணப்பெண் மற்றும் மணப்பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இரண்டு வேன்களில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மூணாறு நோக்கி சென்றனர்.

வாகனம் இன்று மாலை 6.30 மணி அளவில் தமிழக கேரள எல்லையான போடிமெட்டு பகுதியில் இருந்து கேரள பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த போது தோண்டிமலை என்னும் இடத்தின் அருகே மணப்பெண் சென்ற வேனுக்கு பின்னால் அவரது உறவினர்கள் சென்ற வேன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த 50 அடி ஆழ பள்ளத்திற்குள் கவிழ்ந்தது.

இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்பு! தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

வேனிற்குள் இருந்தவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட அப்பகுதி வழியாக சென்றோர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.இதில் வேனில் பயணம் செய்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது.

மேலும் பதினைந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு,ஆம்புலன்ஸ் வாகனங்களின் மூலமாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதில் ஒரு சிலரின் உடல்நிலை மேலும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

திருமண நிகழ்விற்கு சென்றபோது நடந்த விபத்தில் மூன்று பேர் பலியாகி, 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த சம்பவம் திருமண வீட்டாரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த விபத்தில் மணப்பெண் முன்னாள் சென்ற வேனில் சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios