இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

12:05 AM (IST) Aug 01
சிவகாசி படத்தில் இடம் பெற்ற தேர்தல் பிரச்சார சீனை காப்பி அடிச்சு ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் கார்த்திகை தீபம் சீரியல் ஒளிபரப்பு செய்துள்ளது.
10:58 PM (IST) Jul 31
மைக்ரோசாஃப்ட் கணிப்பின்படி, பத்திரிகை, மக்கள் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் AI வேலைவாய்ப்புகளை மாற்றியமைக்கலாம். எந்த வேலைகள் ஆபத்தில் உள்ளன, எவை பாதுகாப்பானவை என்பதை அறிக.
10:52 PM (IST) Jul 31
Vivo T4R இந்தியாவில் அறிமுகம்! குவாட்-கர்வ் AMOLED டிஸ்ப்ளே, Dimensity 7400 பிராசஸர், 50MP கேமராவுடன் ரூ. 17,499 முதல். வாங்க 5 முக்கிய காரணங்கள்!
10:45 PM (IST) Jul 31
OPPO K13 Turbo சீரிஸ்: உள்ளமைக்கப்பட்ட கூலிங் ஃபேன், 7,000mAh பேட்டரி மற்றும் வேப்பர் சேம்பர் கொண்ட அசாதாரண செயல்திறன் கொண்ட கேமிங் ஸ்மார்ட்போன்.
10:40 PM (IST) Jul 31
Moto G86 5G இந்தியாவில் ₹18,000-க்கு கீழ் அறிமுகம்! 6,720mAh பேட்டரி, 50MP கேமரா, Dimensity 7400 பிராசஸர், 120Hz AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. சிறப்பம்சங்களை அறிக.
10:37 PM (IST) Jul 31
Madharaasi First Single Salambala Song Released : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக தயாராகி வரும் மதராஸி படத்தில் இடம் பெற்ற முதல் சிங்கிள் சலம்பல பாடல் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது.
10:32 PM (IST) Jul 31
பயனுள்ள நெட்வொர்க்கிங் டிப்ஸ்களுடன் தொழில் வாய்ப்புகளைப் பெறுங்கள்! LinkedIn-ஐப் பயன்படுத்தி, உண்மையான தொடர்புகளை உருவாக்கி, உங்கள் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவது எப்படி என அறிக.
10:31 PM (IST) Jul 31
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்டில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆனார். அவரை ரசிகர்கள் விளாசித் தள்ளி வருகின்றனர்.
10:24 PM (IST) Jul 31
BSNL ஆகஸ்டில் 5G சேவையை அறிமுகப்படுத்தலாம் எனத் தகவல். இது Airtel, Jio, Vi போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக அமைந்து, மலிவான சேவை மூலம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10:16 PM (IST) Jul 31
இன்ஸ்டாகிராம் லைவ் ஸ்ட்ரீமிங்கிற்கு இனி 1,000 ஃபாலோயர்கள் அவசியம். இந்த மாற்றம் ஏன் கொண்டுவரப்பட்டது மற்றும் டீனேஜர்களுக்கான புதிய பாதுகாப்பு அம்சங்கள் என்னவென்று அறிக.
10:09 PM (IST) Jul 31
OpenAI நிறுவனம் ChatGPT-இல் 'ஸ்டடி மோட்' அறிமுகம் செய்துள்ளது. இது நேரடி பதில்களுக்குப் பதிலாக படிப்படியாக வழிகாட்டி, விவாதம் மூலம் கற்றலை மேம்படுத்துகிறது. தேர்வுத் தயாரிப்பு இனி எளிதாகும்.
10:02 PM (IST) Jul 31
Top 5 No Apologies Zodiac Signs : ஜோதிடத்தின் படி, சிலர் தங்கள் தவறுகளை விரைவாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்பார்கள். ஆனால் மற்றவர்களுக்கு, மன்னிப்பு கேட்பது தங்கள் உயிரை இழப்பது போல் கடினம். அந்த ராசியினர் யாரென்று பார்க்கலாம்.
09:08 PM (IST) Jul 31
செங்கோட்டையன் அல்லது எஸ் பி வேலுமணியை முதல்வர் ஆக்குவதே பாஜகவின் திட்டம் என்று அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
08:25 PM (IST) Jul 31
நெல்லை இளைஞர் கவின் ஆவணக்கொலையை கண்டித்து திருமாவளவன் தலைமையில் விசிகவினர் போராட்டம் நடத்தினார். ஆணவப்படுகொலையை தடுக்க தனிச்சட்டம் வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
08:01 PM (IST) Jul 31
Pandian Stores 2 Serial Raji Revealed Her Marriage Secrets : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சிரீயலில் இன்றைய எபிசோடில் ராஜீ தனக்கு எப்படி திருமணம் நடந்தது என்பது பற்றி வெளிப்படையாக பேசுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
07:02 PM (IST) Jul 31
Astrological Effects of Solar Eclipse 2025 : 2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் வரும் செப்டம்பர் மாதம் நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணத்தால் சில ராசிகள் அதிகளவில் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.
07:01 PM (IST) Jul 31
எண் கணிதத்தின்படி, ஒருவரது பிறந்த தேதியை வைத்து ஆகஸ்ட் மாதம் அவர்களுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
06:51 PM (IST) Jul 31
முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? என்பதற்கு ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார். மேலும் பாஜக செய்தது தவறு என்றும் தனக்கும் சுயமரியாதை உண்டு எனவும் ஒபிஎஸ் தெரிவித்துள்ளார்.
06:18 PM (IST) Jul 31
எலுமிச்சை, ஆப்பிள், வாழைப்பழம் ஆகிய மூன்றுமே உடலுக்கு ஆரோக்கியத்தை தரக் கூடியவை. அதிக சத்துக்கள் நிறைந்தவை தான். ஆனால் இவை மூன்றில் எது பெஸ்ட் என சமீபத்தில் ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆச்சரியம் தரும் அந்த முடிவு இது தான்.
05:57 PM (IST) Jul 31
நடிகை ரம்யா பாண்டியன் ஒரு வீடியோவில் கல் உப்பை வைட்டமின் டி-க்கு பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார். இது விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில் இது உண்மையா என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
05:52 PM (IST) Jul 31
பாஜகவை விட்டு விலகிய ஓபிஎஸ் இன்று 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
05:23 PM (IST) Jul 31
நெயில்பாளிஷை அதிக நாட்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அது காய்ந்து போய் விடும். அதை பயன்படுத்த முடியாது தூக்கி போட்டு விடாதீர்கள். மீண்டும் புதுப்பித்து பயன்படுத்த ஐடியா இருக்கு. இது தெரிந்தால், இது தெரியாம போச்சே என நீங்களே நினைப்பீர்கள்.
05:08 PM (IST) Jul 31
தலைமுடி அடர்த்தியாக, கருகருவென வளருவதற்கு நெல்லிக்காய் எண்ணெய்யை குறிப்பிட்ட முறைகளில் தொடர்ந்து பயன்படுத்துவது சிறப்பு. இந்த எண்ணெய் உடலுக்கு குளிர்ச்சியையும், பித்தத்தால் ஏற்படும் நரையையும், இளநரையையும் தடுக்கும் ஆற்றல் மிக்கதாகும்.
04:56 PM (IST) Jul 31
ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் வீட்டில் செய்ய வேண்டிய முக்கிய வழிபாடு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
04:51 PM (IST) Jul 31
தும்மல் வருவது இயற்கையான ஒரு செயல்பாடு ஆகும். சிலர் நாகரீகம் என நினைத்து தும்மல் வரும் போது அதை அடக்கிக் கொள்ள முயற்சி செய்வார்கள். இப்படி தும்மலை அடக்குவதால் மிகப் பெரிய ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
04:50 PM (IST) Jul 31
ஆகஸ்ட் 4 ஆம் தேதி புதிய டிஜிட்டல் மென்பொருளை வெளியிட தபால் துறை தயாராகி வருவதால், குறிப்பிட்ட இடங்களில் உள்ள தபால் நிலையங்கள் வாடிக்கையாளர் பரிவர்த்தனைகளுக்கு மூடப்படும்.
04:40 PM (IST) Jul 31
இந்திய பொருளாதாரம் இறந்து விட்டது என டிரம்ப் சொன்னது சரிதான் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அதானிக்கு மட்டுமே வேலை செய்வதாக அவர் கூறியுள்ளார்.
04:33 PM (IST) Jul 31
ஜியோ, ஏர்டெல், விஐ ஆகியவற்றுக்கு இடையேயான வரம்பற்ற ப்ரீபெய்ட் திட்டங்களின் போட்டி தீவிரமடைந்துள்ளது. ஜியோ, ஏர்டெல் ஆகியவை ஒரே விலையில் கணிசமான டேட்டா, OTT சலுகைகளை வழங்குகின்றன, அதே நேரத்தில் VI வார இறுதி ரோல்ஓவர் போன்ற சிறப்பு அம்சங்களைவழங்குகிறது.
04:24 PM (IST) Jul 31
இந்தியாவின் டாப் 5 பாதுகாப்பான கார்கள் 2025: 'பாரத் NCAP' (Bharat New Car Assessment Programme) சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்ற டாப் 5 கார்கள் இவை.
04:18 PM (IST) Jul 31
சருமம் பளபளப்பாக மாறுவதற்கு மஞ்சள், கடலைமாவு என எத்தனையோ பொருட்களை பயன்படுத்தியும் எதுவும் நீங்கள் எதிர்பார்த்த பலனை தரவில்லை என்றால், காபி தூளை இந்த முறைகளில் பயன்படுத்திப் பாருங்க. வாவ் என ஆச்சரியப்படும் அளவிற்கு மாற்றம் கிடைக்கும்.
04:04 PM (IST) Jul 31
Karthigai Deepam 2 Today Episode Karthik Raja Plan : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் சிவனாண்டியிடமிருந்து மக்களை காப்பாற்ற சாமுண்டீஸ்வரி என்னவெல்லாம் செய்கிறார் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
03:51 PM (IST) Jul 31
பாண்டிராஜ் இயக்கத்தில் முதன்முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த தலைவன் தலைவி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சரிந்துள்ளது.
03:49 PM (IST) Jul 31
அசைவம் சமைத்த பாத்திரத்தை கழுவிய பிறகும் மீண்டும் வாடை வீசுகிறது என்றால், சில நிமிடங்களில் அதை போக்க சிம்பிள் டிப்ஸ் இங்கே பார்க்கலாம்.
03:36 PM (IST) Jul 31
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட்டில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. கருண் நாயருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
03:34 PM (IST) Jul 31
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 6 வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
03:33 PM (IST) Jul 31
ஜோதிடத்தின்படி சில மாதங்களில் பிறந்தவர்களுக்கு பணக்கார்களாகும் யோகம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த மாதங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
03:20 PM (IST) Jul 31
உத்திரப்பிரதேசத்தில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தபோது பெண் ஒருவர் கல்லீரலில் கருவுற்றிருப்பது தெரியவந்தது. அதன் பின்னணியை இங்கு காணலாம்.
03:02 PM (IST) Jul 31
ஐசிஐசிஐ வங்கி இப்போது UPI பணம் செலுத்துதலுக்கான பரிவர்த்தனைகளுக்கு பரிவர்த்தனை கட்டணங்களை வசூலிக்கப் போகிறது. இந்தப் புதிய விதி ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரலாம். முன்னதாக, யெஸ் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கியும் இதைச் செய்துள்ளன.
02:37 PM (IST) Jul 31
தூத்துக்குடியை சேர்ந்த கவின்குமார், நெல்லையில் காதலியின் சகோதரரால் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், கவினின் காதலி சுபாஷினி பரபரப்பு வீடியோ வெளியிட்டு, பெற்றோரை தண்டிக்க வேண்டாம்.
02:35 PM (IST) Jul 31
தலைவன் தலைவி படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தக் குற்றச்சாட்டு வந்திருப்பது சந்தேகத்தை எழுப்புவதாக விஜய் சேதுபதி கூறி உள்ளார்.