- Home
- Cinema
- அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்; சிவனாண்டிக்கு செக் மேட் வைத்த கார்த்திக் - கார்த்திகை தீபம் 2 டுடே சீன்!
அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்; சிவனாண்டிக்கு செக் மேட் வைத்த கார்த்திக் - கார்த்திகை தீபம் 2 டுடே சீன்!
Karthigai Deepam 2 Today Episode Karthik Raja Plan : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் சிவனாண்டியிடமிருந்து மக்களை காப்பாற்ற சாமுண்டீஸ்வரி என்னவெல்லாம் செய்கிறார் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கார்த்திக் ராஜா, சாமுண்டீஸ்வரி
Karthigai Deepam 2 Today Episode Karthik Raja Plan : கார்த்திகை தீபம் 2 சீரியலானது நாளுக்கு நாள் சுவாரஸ்யமாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. மக்களை காப்பாற்றவே அவர்களுக்காகவே சாமுண்டீஸ்வரி பஞ்சாயத்து தேர்தலில் நின்றார். அவர் சிவனாண்டியை எதிர்த்து போட்டியிடுகிறார். மேலும், அவருக்கான தேர்தல் சின்னமாக குங்குமசிமிழ் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், சிவனாண்டிக்கு குப்பைத் தொட்டி ஒதுக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை தீபம் 2 இன்றைய எபிசோடு
இதிலேயே தோல்வி அடைந்த சிவனாண்டி தேர்தல் வாக்குறுதியாக ஆண்களுக்கு சரக்கு கொடுத்தார். இதைப் பற்றி தெரிந்து கொண்ட சாமுண்டீஸ்வரி அவர்களது மனைவிமார்களை வைத்தே சிவனாண்டிக்கு கெட்ட பெயர் பெற்று கொடுத்தார். இதைத் தொடர்ந்து 2ஆவது முறையாக கல்யாண வீட்டிற்கு செல்கிறேன் என்ற பெயரில் சாவு வீட்டிற்கு சென்றார். அதோடு கார்த்திகை தீபம் 2 சீரியலில் நேற்றைய எபிசோடு முடிந்தது.
இதைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் எந்த மாதிரியான சுவாரஸ்யமான காட்சிகள் நடைபெறும் என்பது பற்றி பார்க்கையில் சாமுண்டீஸ்வரிக்கு எதிராக தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தமிழே தெரியாத நடிகையை இறக்கி சிவனாண்டி மற்றும் முத்துவேல் இருவரும் வாக்கு சேகரிக்க திட்டமிடுகின்றனர்.
கார்த்திகை தீபம் 2
எப்படியோ நடிகை வரும் விஷயம் அறிந்து அவரை பார்க்க ஊர்க்காரர்கள் அனைவரும் பரபரப்பாக காத்துக் கொண்டிருக்கின்றனர். கார்த்திக் தமிழ் தெரியாத நடிகை என்பதால் இதை சாதகமாக பயன்படுத்தி மயில்வாகனத்தை வைத்து வைத்து அந்த நடிகை படிக்க இருந்த லெட்டரை மாற்றி வைக்கிறான். பிறகு இந்த நடிகை அந்த லெட்டரில் இருப்பதை அப்படியே படிக்க அதில் சாமுண்டீஸ்வரியை பாராட்டியும் சிவனாண்டியை விமர்சித்தபடியும் இருக்கிறது.
பிறகு தனது மாமியாரான000 பரமேஸ்வரி ஊருக்கு வர பாட்டி அவளை சாப்பிட வீட்டுக்கு கூப்பிட சாமுண்டீஸ்வரி முடியாது என மறுக்க ஊர்க்காரர்கள் போயிட்டு சாப்பிடுங்க என்று சொல்கின்றனர். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கார்த்திகை தீபம் 2 சீரியல்.