- Home
- Astrology
- Astrology: இந்த மாதங்களில் பிறந்தவர்கள் இளம் வயதிலேயே பணக்காரர் ஆகிடுவாங்களாம்.. நீங்க பிறந்த மாதம் இருக்கா?
Astrology: இந்த மாதங்களில் பிறந்தவர்கள் இளம் வயதிலேயே பணக்காரர் ஆகிடுவாங்களாம்.. நீங்க பிறந்த மாதம் இருக்கா?
ஜோதிடத்தின்படி சில மாதங்களில் பிறந்தவர்களுக்கு பணக்கார்களாகும் யோகம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த மாதங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

இளம் வயதிலேயே பணக்காரராக வாய்ப்பு உள்ளவர்கள்
பணம் என்பது வெறும் காகிதமோ நாணயமோ அல்ல. அது நம் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளையும், விருப்பங்களையும் பூர்த்தி செய்வதற்கு உதவும் ஒரு சாதனமாகும். மனிதர்களாக பிறந்த பலருக்கும் பணக்காரனாக வேண்டும் என்கிற ஆசை இருக்கும். உணவு, உடை, இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைகளுடன், மருத்துவ அவசர நிலைகள், விரும்பியதைச் செய்வது, விரும்பிய இடங்களுக்கு செல்வது, விரும்பிய வாழ்க்கையை வாழும் சுதந்திரம் ஆகியவை கிடைக்கிறது. பணம் நம் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துகிறது. சிறந்த கல்வி, சிறந்த மருத்துவ வசதிகள், பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு ஆகியவற்றை அனுபவிக்க பணம் மிகவும் அவசியம். ஒவ்வொருவரும் பணக்காரனாக வேண்டும் என்கிற ஆசை கொண்டுள்ளனர். ஆனால் ஜோதிடத்தின்படி சில மாதங்களில் பிறந்தவர்களுக்கு இளமையிலேயே பணக்காரராகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஏப்ரல் மாதம்
குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் 40 வயதாகும் முன்னராகவே அதிர்ஷ்டம் அவர்களை தேடி வரும் என்றும், அதிர்ஷ்டத்துடன் அவர்கள் தனித்திறமை, உழைப்பு ஆகியவை அவர்களின் கனவை நிறைவேற்ற உதவும் என்றும் கூறப்படுகிறது. இந்த பதிவில் எந்த மாதங்களில் பிறந்தவர்கள் 40 வயதிற்கு முன்னதாக பணக்காரர் ஆவார்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். சவாலான காரியத்தை எடுத்து அதில் வெற்றி பெறுவதை குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் வெற்றிக்காக ஒருபோதும் காத்திருப்பதில்லை. வெற்றியை நோக்கி உத்வேகத்துடன் செயல்படுவார்கள். அவர்களுக்கு இயற்பிலேயே தலைமை குணங்கள் இருக்கும். தங்களுடைய அயராத உழைப்பு மற்றும் இலட்சியத்திற்காக அவர்கள் எந்த காரியத்தையும் செய்வார்கள். தனது அசட்டு தைரியத்தால் தயக்கமின்றி செயல்பட்டு 40 வயதிற்கு முன்னதாகவே பணக்காரர் ஆகிவிடுகிறார்கள்.
ஜூன் மாதம்
ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் பொதுவாக சிறந்த தகவல் தொடர்பு திறன், அறிவுக்கூர்மை மற்றும் தகவல்களை சேகரிக்கும் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் வியாபாரம் மற்றும் வணிகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவார்கள். சிறந்த முதலீட்டாளர்களாகவும், பணத்தை பாதுகாப்பதில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். நிதி மேலாண்மையில் சிறந்து விளங்கி செல்வத்தை சேர்ப்பார்கள். ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் எப்போதும் ஒன்றை ஆழமாக சிந்தித்து, அதை சரியான வழிகளில் செயல்படுத்துவார்கள். செல்வத்தை பெருக்கும் புத்திசாலித்தனம் அவர்களிடம் இயல்பிலேயே இருக்கிறது. ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் இளம் வயதிலேயே கோடீஸ்வரர் ஆகிவிடுகிறார்கள்.
அக்டோபர் மாதம்
அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் பொதுவாக திறமையும், வசீகரமும் கொண்டவர்கள். அவர்கள் தன்னம்பிக்கை மற்றும் மற்றவர்களை வழி நடத்துவதில் சிறந்து விளங்குகின்றனர். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் ஒருவருக்கு கீழே தொழில் செய்வதை விட தான் முதலாளியாக இருந்து பணம் ஈட்ட வேண்டும் என்கிற ஆர்வம் கொண்டிருக்கின்றனர். எனவே அவர்கள் வியாபாரம் மற்றும் வணிகத்தில் சிறந்து விளங்குகின்றனர். மற்றவர்களுடன் இணைவதிலும் நட்பை வளர்த்துக் கொள்வதிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த உறவுகளின் மூலமாக எப்படி லாபத்தை உண்டாக்குவது என்பது அவர்களுக்கு கைவந்த கலை வெற்றி அடைவது குறித்து அவர்களுக்கு இருக்கும் தீராத வேட்கை காரணமாக கடுமையாக உழைக்கின்றனர். இந்த கடுமையான உழைப்பு அவர்களை பணம் சேர்க்க தூண்டுகிறது. இதன் காரணமாக அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் இளம் வயதிலேயே பணக்காரர்களாக மாறுகின்றனர்.
டிசம்பர் மாதம்
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் பொதுவாக புத்திமான்களாகவும், பொறுமைசாலிகளாகவும் இருக்கின்றனர். இவர்களிடம் சுய ஒழுக்கம் அதிகமாக காணப்படுகிறது. கடினமாக உழைத்து தனது இலக்கை அடைய வேண்டும் என்கிற ஆர்வம் கொண்டிருப்பர். ஒருபோதும் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள். தங்களது கனவுகளில் மட்டுமே உறுதியாக இருப்பார்கள். தேவையற்ற கவனச்சிதறல்கள் அவர்களை ஒன்றும் செய்யாது. வணிகம், தொழில், வேலை, நிதி விஷயங்களில் சிறப்பாக செயல்படுவதால் நீண்ட கால வெற்றியை உருவாக்குகின்றனர். மேலும் நன்றாக வாழ வேண்டும் என்கிற ஆசை அவர்களை பணம் சேர்க்க தூண்டுகிறது. அவர்களின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும் 40 வயதை அடைவதற்கு முன்பே அவர்களை பணக்காரர்களாக மாற்றுகின்றன.
(பொறுப்பு துறப்பு: மேற்குறிப்பிடப்பட்டுள்ள கட்டுரை இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள், ஜோதிட கணிப்புகள் மற்றும் எண் கணிதத்தின் அடிப்படையிலானவை மட்டுமே. இதன் நம்பகத்தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. நிஜ வாழ்க்கையில் ஒருவரின் வெற்றிக்கு கடின உழைப்பு, விடாமுயற்சி, தனிப்பட்ட திறமைகளே முக்கிய காரணம். இந்த ஜோதிட கருத்துக்கள் ஒரு வழிகாட்டுதலாக மட்டுமே இருக்கலாம். ஆனால் உங்கள் வெற்றியையும், நீங்கள் பணக்காரராக மாறப்போவதையும் நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். பணம் என்பது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு கருவி மட்டுமே. உண்மையில் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் சரியான திட்டமிடல், விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவை அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்)

