MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Sani Peyarchi 2026: மார்ச் 6 சனி பெயர்ச்சி.! இந்த 4 ராசிகளுக்கு கண்டம்.! உங்கள் ஜாதகமே தலைகீழாக மாறப்போகுது.! சனி பகவான் வச்சி செய்யப்போறார்.!

Sani Peyarchi 2026: மார்ச் 6 சனி பெயர்ச்சி.! இந்த 4 ராசிகளுக்கு கண்டம்.! உங்கள் ஜாதகமே தலைகீழாக மாறப்போகுது.! சனி பகவான் வச்சி செய்யப்போறார்.!

Sani Peyarchi 2026 Palangal : வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 2026 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் சனி பெயர்ச்சி பற்றியும், இந்த சனி பெயர்ச்சியால் அதிக பாதிப்புக்கு உள்ளாகும் ராசிகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Mar 05 2026, 10:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Sani Peyarchi 2026 Palangal
Image Credit : Asianet News

Sani Peyarchi 2026 Palangal

ஜோதிடத்தில் சனி பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் கர்ம காரகன் என்றும் நீதிமான் என்றும் அழைக்கப்படுகிறார். அவரவர் செய்த வினைப்பயனுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார். பஞ்சாங்கத்தின்படி சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு மார்ச் 6 அதிகாலை 8:31 மணியளவில் இடம் பெயர்கிறார். அவரின் இந்த பெயர்ச்சி காரணமாக சில ராசிகளுக்கு சவாலான காலகட்டம் காத்திருக்கிறது. அது குறித்து இங்கு காணலாம்.

26
மீனம்
Image Credit : AI Generated

மீனம்

மீன ராசியின் முதல் வீட்டில் சனி பகவான் பெயர்ச்சியாக இருப்பதால் மீன ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியின் காலம் தொடங்குகிறது. இந்த காலகட்டத்தில் உடல்நலத்தில் அதிக அக்கறை தேவைப்படலாம். தேவையற்ற அலைச்சல்கள், மன அழுத்தம், மன உளைச்சல், பதற்றம், வேலைப் பளு போன்றவை அதிகரிக்கலாம். குடும்ப உறுப்பினர்களிடையே தகராறுகள் நீடிக்கலாம். எனவே பேச்சில் நிதானம் அவசியம். முதலீடுகளில் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனை தேவை.

Related Articles

Related image1
மார்ச் 5 உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்.! இந்த ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டம், பணவரவு உண்டாகும்.!
Related image2
Sani Peyarchi 2026: மார்ச் 6 முதல் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் சனி பகவான்.! 6 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப் போறாராம்.!
36
மேஷம்
Image Credit : AI Generated

மேஷம்

மேஷ ராசிக்கு ஏழரை சனியின் முதல் கட்டமான விரய சனி தொடங்குகிறது. இதன் காரணமாக தேவையற்ற செலவுகள், மருத்துவச் செலவுகள் அதிகரிக்கக்கூடும். பணப் பரிமாற்றங்களின் பொழுது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நிதி இழப்புகள், பொருளாதார நெருக்கடிகளை சந்திக்க நேரிடலாம். இதன் காரணமாக மன அழுத்தமும் அதிகரிக்கக்கூடும். வேலையில் தடை, எடுக்கும் காரியங்களில் பின்னடைவு, முயற்சிகளில் தோல்வி ஆகியவை வந்து நீங்கும்.

46
கும்பம்
Image Credit : AI Generated

கும்பம்

கும்ப ராசிக்கு ஏழரை சனியின் கடைசி கட்டமான பாத சனி தொடங்குகிறது. இதன் காரணமாக கால்கள் தொடர்பான உபாதைகள் வந்து நீங்கலாம். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் கூட பெரிதாவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஏழரை சனியின் பிடி தளரத் தொடங்குவதால், உங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் மெதுவாக கிடைக்கத் தொடங்கும். இந்த காலகட்டத்தில் நேர்மையாகவும், உண்மையாகவும் இருந்தால் சனி பகவானின் முழுமையான ஆசி கும்ப ராசிக்கு கிடைக்கும்.

56
சிம்மம்
Image Credit : AI Generated

சிம்மம்

சிம்ம ராசிக்கு தற்போது அஷ்டம சனியின் காலம் தொடங்குகிறது. இதன் காரணமாக எதிலும் தடைகள், தாமதங்கள் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடியலாம். வாகனங்களில் செல்லும் பொழுது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அரசு ரீதியான காரியங்களில் கவனமாக இருக்கவும். தேவையற்ற வம்பு வழக்குகளில் தலையிட வேண்டாம். சிலர் சிறிய பிரச்சனைகளுக்கு கூட நீதிமன்ற வழக்குகளை சந்திக்கக்கூடும். எனது இந்த காலகட்டத்தில் பொறுமையும், நிதானமும் அவசியம்.

66
சனி பெயர்ச்சி பரிகாரங்கள்
Image Credit : AI Generated

சனி பெயர்ச்சி பரிகாரங்கள்

சனி பகவானின் தாக்கத்தை குறைக்க சில எளிய வழிமுறைகளை பின்பற்றலாம். சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். மாற்றுத்திறனாளிகள் அல்லது ஏழைகளுக்கு தயிர் சாதம் வழங்குவது நல்லது. ஏழை மாணவர்களின் கல்விக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அனுமன் வழிபாடு அல்லது விநாயகர் வழிபாடு செய்வது சனி பகவானின் தாக்கத்தை குறைக்கும். திருநள்ளாறு அல்லது குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
சனிப்பெயர்ச்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
கும்ப ராசியில் சக்தி வாய்ந்த யோகம்.! மார்ச் 15 வரை தொழிலில் கொடிகட்டி பறக்கப்போகும் 4 ராசிகள்.!
Recommended image2
மார்ச் 5 உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்.! இந்த ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டம், பணவரவு உண்டாகும்.!
Recommended image3
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.! திருமணத்திற்குப் பின் அவர்கள் வாழ்க்கையே மாறும்.!
Related Stories
Recommended image1
மார்ச் 5 உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்.! இந்த ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டம், பணவரவு உண்டாகும்.!
Recommended image2
Sani Peyarchi 2026: மார்ச் 6 முதல் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் சனி பகவான்.! 6 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப் போறாராம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved