- Home
- Lifestyle
- Pregnancy in Liver : கல்லீரலில் கர்ப்பமா? உபியில் வினோதம்! வயிற்று வலி என ஸ்கேன் செய்தபோது காத்திருந்த அதிர்ச்சி
Pregnancy in Liver : கல்லீரலில் கர்ப்பமா? உபியில் வினோதம்! வயிற்று வலி என ஸ்கேன் செய்தபோது காத்திருந்த அதிர்ச்சி
உத்திரப்பிரதேசத்தில் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்தபோது பெண் ஒருவர் கல்லீரலில் கருவுற்றிருப்பது தெரியவந்தது. அதன் பின்னணியை இங்கு காணலாம்.

பெண்கள் கருவுற்றிருப்பதை சில அறிகுறிகள் வைத்து கண்டறியலாம். அவர்களின் மாதவிடாய் தள்ளிப் போவது, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல அறிகுறிகள் தென்படும். உபியில் வித்தியாசமாக ஒரு பெண்ணுக்கு பயங்கரமான வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் புலந்த்ஷகர் என்ற பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண் சமீப நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதியுற்றுள்ளார். வலியின் காரணத்தை அறிய அவருக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. இதில் வியத்தகு உண்மைகள் தெரிய வந்துள்ளன.
எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்தபோது அந்தப் பெண்ணின் கல்லீரலின் வலது மடலில் அவருக்கு கருத்தரித்திருப்பது தெரிய வந்தது. அவர் 12 வார வயதுள்ள உயிருள்ள கருவை சுமந்துகொண்டிருக்கிறார். நீங்கள் படித்தது சரிதான்.. அவர் கல்லீரலில் தான் கருவுற்றுள்ளார். இது உண்மையில் அரிதிலும் அரிதான விஷயம். இதை ஹெபாட்டா எக்டோபிக் கர்ப்பம் என்பார்கள். இது கருவுற்ற பெண்ணுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்.
கல்லீரலில் கர்ப்பம் என்றால் என்ன?
பெண்களின் கருப்பைக்கு வெளியில் உள்ள கருமுட்டைக் குழாய்க்குள் கருவுறுதலை எக்டோபிக் கர்ப்பமாகும். இதுவே கல்லீரலில் ஏற்பட்டால் கல்லீரல் எக்டோபிக் கர்ப்பம் என்பார்கள். கருத்தரித்த பின் அந்த கரு ஆரோக்கியமாக வளர கருவுக்கு கருப்பை அவசியம். கல்லீரல் கருத்தரித்தலில் அதற்கு வாய்ப்பில்லை. இதனால் கருவின் இயல்பான வளர்ச்சி தடுக்கப்படும்.
கல்லீரலில் கர்ப்பம் தரிப்பது ஏன்?
கல்லீரல் எக்டோபிக் கர்ப்பத்திற்கு முறையற்ற கருவுற்ற முட்டை இயக்கம் காரணமாக இருக்கலாம்.
கரு கருப்பைக்குச் செல்லாமல் வயிற்றுப் பகுதிக்குள் செல்வதால் ஏற்படலாம்.
சேதமான ஃபலோபியன் குழாய் கருவை கருப்பைக்குச் செல்லவிடாமல் தடையை உண்டாக்கும்.
சில அறுவை சிகிச்சைகளும் காரணமாக இருக்கலாம்.
ஐவிஎப் (IVF) செயல்முறையில் கூட இதுபோன்ற கருப்பைக்கு வெளியே நிகழும் எக்டோபிக் கர்ப்பம் வரக் கூடும்.
ஆனாலும் கல்லீரல் எக்டோபிக் கர்ப்பத்திற்கான குறிப்பிட்ட காரணங்கள் எதுவும் உறுதியாக இல்லை. இது அரிதிலும் அரிதாக நிகழக் கூடியது.