Zodiac Signs : 2025ன் கடைசி சூரிய கிரகணம்: 4 ராசிகள் சைலண்டா இருந்தா தான் வண்டி ஓடும்!
Astrological Effects of Solar Eclipse 2025 : 2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் வரும் செப்டம்பர் மாதம் நிகழ்கிறது. இந்த சூரிய கிரகணத்தால் சில ராசிகள் அதிகளவில் பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்
2025 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் வரும் செப்டம்பர் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிகழ்கிறது. இந்த கிரகணம் ஒரு வளைய சூரிய கிரகணமாகும். இந்த சூரிய கிரகணத்தின் வானியல் விளைவுகள் இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா மற்றும் தெற்கு பசிபிக் பெருங்கடலின் ஒரு சில பகுதிகளில் காணப்படும். ஆனால் இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்றாலும் கூட இந்த கிரகணத்தின் விளைவுகள் பொதுவாக அனைத்து ராசிகளிலும் காணப்படும். அப்படி இந்த கிரகணத்தால் 4 ராசிகள் அதிகளவில் பாதிக்கப்படக் கூடும் என்று கூறப்படுகிறது.
இந்த கிரகணம் எந்த ராசிகளை பாதிக்கும்?
செப்டம்பர் 21, 2025 அன்று நிகழும் சூரிய கிரகணம் கன்னி ராசியிலும் உத்திர ஃபல்குனி நட்சத்திரத்திலும் நிகழ்கிறது. எனவே, இதன் தாக்கம் குறிப்பாக கன்னி ராசிக்காரர்கள் மீது இருக்கும். இது தவிர, மிதுனம், மீனம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இப்போது அறிவுறுத்தப்படுகிறது.
கன்னி ராசி பாதிக்கப்படுமா?
சூரிய கிரகணத்தால் கன்னி ராசியினருக்கு மன அழுத்தம் ஏற்படக் கூடும். அதோடு, தன்னம்பிக்கை குறையும், வேலையில் தடை தாமதம் ஏற்படக் கூடும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் குழப்பம் ஏற்படும். அதனால், இந்த தருணங்களில் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. மேலும், பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்பட வேண்டும்.
மிதுனம் ராசிக்கு சூரிய கிரகணம் என்ன செய்யும்?
2025 செப்டம்பர் 21ல் நிகழும் சூரிய கிரகணம் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். மேலும், குடும்ப விஷயங்களில் குறிப்பாக கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மை அளிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற சர்ச்சைகளில் இருந்து விலகி இருங்கள்.
சூரிய கிரகணம் மீனம் ராசியை பாதிக்குமா?
தொழில் மற்றும் நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்கச் செய்யும், குழப்பமான சூழ்நிலை நிலவக் கூடும். வேலையில் பதற்றம் ஏற்படக் கூடும். சற்று கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். வரவை விட செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பு குறையும்.
தனுசு ராசியை என்ன செய்யும்?
தனுசு ராசியினர் இப்போது தான் சனியின் பாதிப்பிலிருந்து விலகி வந்திருக்கும் நிலையில் வரும் 21 செப்டம்பரில் நிகழும் சூரிய கிரகணம் தனுசு ராசியினரை சட்ட சிக்கலில் சிக்க வைக்கும். ஆவணங்களில் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும். வேலையில் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்.