- Home
- இந்தியா
- டிரம்ப் சொன்னதில் நான் ஹேப்பி! இந்திய பொருளாதாரம் ஆல்ரெடி டெத்! அனல் பறக்க பேசிய ராகுல் காந்தி!
டிரம்ப் சொன்னதில் நான் ஹேப்பி! இந்திய பொருளாதாரம் ஆல்ரெடி டெத்! அனல் பறக்க பேசிய ராகுல் காந்தி!
இந்திய பொருளாதாரம் இறந்து விட்டது என டிரம்ப் சொன்னது சரிதான் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அதானிக்கு மட்டுமே வேலை செய்வதாக அவர் கூறியுள்ளார்.

Rahul Gandhi Said That The Indian Economy Is Dead
இந்திய பொருளாதாரம் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான கருத்துகளுக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்தார். பாஜக தலைமையிலான அரசு இந்தியாவின் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை அழித்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரம் இறந்து விட்டது
பிரதமர் மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தவிர மற்ற அனைவருக்கும் இந்தியாவின் பொருளாதாரம் இறந்துவிட்டது என்பது தெரியும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது 25 சதவீத வரிகள் மற்றும் அபராதங்கள் விதிக்கப்படுவதாக அறிவித்து, இந்தியா மற்றும் ரஷ்யாவின் பொருளாதாரங்கள் இறந்து விட்டன என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தான் டிரம்புக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ராகுல் காந்தி இந்த கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.
டிரம்ப் சொன்னது சரி தான்
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ''ஆம், அவர் (டிரம்ப்) சொல்வது சரிதான். பிரதமர் மற்றும் நிதியமைச்சரைத் தவிர அனைவருக்கும் இது தெரியும். இந்தியப் பொருளாதாரம் ஒரு இறந்த பொருளாதாரம் என்பது அனைவருக்கும் தெரியும். டிரம்ப் ஒரு உண்மையை கூறியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் இந்தியப் பொருளாதாரம் ஒரு இறந்த பொருளாதாரம் என்பது முழு உலகிற்கும் தெரியும்'' என்று கூறியுள்ளார்.
பாஜகவை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி
கோடீஸ்வரர் கௌதம் அதானிக்கு உதவுவதற்காக பாஜக இந்தியப் பொருளாதாரத்தை அழித்துவிட்டது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். "நமக்கு ஒரு சிறந்த வெளியுறவுக் கொள்கை இருப்பதாக வெளியுறவு அமைச்சர் உரை நிகழ்த்துகிறார். ஒருபுறம், அமெரிக்கா உங்களை துஷ்பிரயோகம் செய்கிறது.
மறுபுறம், சீனா பின்தொடர்கிறது, மூன்றாவதாக, நீங்கள் உலகம் முழுவதும் பிரதிநிதிகளை அனுப்பும்போது, எந்த நாடும் பாகிஸ்தானைக் கண்டிப்பதில்லை. அவர்கள் நாட்டை எப்படி நடத்துகிறார்கள்? நாட்டை எப்படி நடத்துவது என்று அவர்களுக்குத் தெரியவில்லை" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
அதானிக்கு வேலை செய்யும் மோடி
"பிரதமர் மோடி அதானி என்ற ஒரு நபருக்காக மட்டுமே வேலை செய்கிறார். இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அதற்கு ஏற்றபடி நடைபெறும். மேலும் பிரதமர் மோடி டிரம்ப் சொல்வதைச் சரியாகச் செய்வார். இன்று இந்தியாவின் முன் அமர்ந்திருக்கும் முக்கிய பிரச்சினை என்னவென்றால், அரசாங்கம் நமது பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கையை அழித்துவிட்டது. அவர்கள் இந்த நாட்டை தரையில் தள்ளுகிறார்கள்" என்றும் ராகுல் ராகுல் சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
மோடி மெளனம் காப்பது ஏன்?
டிரம்பின் பல கூற்றுகளுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடியின் மௌனம் குறித்து ராகுல் காந்தி கூர்மையான கேள்விகளை எழுப்பினார். "என்னுடைய முக்கிய கேள்வி என்னவென்றால், டிரம்ப் 30-32 முறை போர் நிறுத்தம் செய்ததாகக் கூறியுள்ளார். 5 இந்திய ஜெட் விமானங்கள் வீழ்ந்ததாகவும் அவர் கூறினார். டிரம்ப் இப்போது 25% வரிகளை விதிப்பதாகக் கூறுகிறார். இதற்கு பிரதமர் மோடி ஏன் பதில் அளிக்க முடியவில்லை? உண்மையான காரணம் என்ன? யார் கையில் கட்டுப்பாடு உள்ளது?" என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.