இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், கடும் உறைபனி, தங்கம் விலை, சினிமா, ஜோதிடம், இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

03:57 PM (IST) Dec 24
இந்தியாவில் 2.5 லட்சத்திற்கும் அதிகமான மின்சார கார்களை விற்பனை செய்து டாடா மோட்டார்ஸ் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. எதிர்காலத்தில் சியரா EV, அவின்யா போன்ற புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
03:53 PM (IST) Dec 24
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும், அதிகாலையில் பனிமூட்டம் காணப்படும்.
03:49 PM (IST) Dec 24
தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது இல்லத்தில் பெரியாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
03:44 PM (IST) Dec 24
லிபிய ராணுவத்தின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் முகமது அல்-ஹத்தாத், துருக்கியில் இருந்து நாடு திரும்பும் வழியில் விமான விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் அவருடன் சேர்த்து மேலும் நான்கு முக்கிய ராணுவ அதிகாரிகளும் பலியாகியுள்ளனர்.
03:38 PM (IST) Dec 24
தருமபுரியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் மணிவண்ணன், சிறையில் திடீரென உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
03:36 PM (IST) Dec 24
சாம்சங் நிறுவனத்தின் பிரீமியம் ஃபோனான Galaxy S25 Ultra, க்ரோமாவின் ஆண்டு இறுதி விற்பனையில் மிகப்பெரிய தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த சலுகை ஜனவரி 4, 2026 வரை க்ரோமா ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் செல்லுபடியாகும்.
03:28 PM (IST) Dec 24
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டின் “How India Instamarted 2025” அறிக்கை, இந்தியர்களின் ஆன்லைன் ஷாப்பிங் பழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
03:23 PM (IST) Dec 24
பழனிவேல் மற்றும் சரவணன் இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒன்று சேர்ந்துள்ளனர். அது என்ன என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
03:17 PM (IST) Dec 24
இஷான் கிஷனின் இந்த அதிரடி சதம், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் ஒரு இந்தியரால் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக சதமாகும். அருணாச்சல பிரதேசத்திற்கு எதிராக பீகார் கேப்டன் சகிபுல் கனி 32 பந்துகளில் அடித்த சதத்திற்கு அடுத்தபடியாக இது அமைந்துள்ளது.
03:17 PM (IST) Dec 24
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (DRDO) உருவாக்கப்பட்ட அடுத்த தலைமுறை ஆகாஷ் (Akash-NG) ஏவுகணையின் சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. இந்த ஏவுகணை வான்வழி அச்சுறுத்தல்களைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது.
02:52 PM (IST) Dec 24
அமெரிக்காவின் பயம் காரணமாக நிக்கோலஸ் மதுரோவால் தூங்க முடியவில்லை. அவர் தனது பாதுகாப்பை கியூப ஏஜெண்டுகளிடம் ஒப்படைத்துள்ளார்.
02:47 PM (IST) Dec 24
ஐஸ் கட்டியை வைத்து அடிபிடித்த பாத்திரத்தை சுலபமாக சுத்தம் செய்வது எப்படியென்று இந்த பதிவில் காணலாம்.
02:23 PM (IST) Dec 24
2026 புத்தாண்டு ஸ்மார்ட்போன் சந்தையில் ரூ. 10,000 முதல் ரூ. 25,000 வரையிலான பட்ஜெட் பிரிவில் AI மற்றும் 5G அம்சங்களுடன் பல புதிய மாடல்கள் அறிமுகமாகின்றன. அவற்றின் கேமரா, பேட்டரி மற்றும் செயல்திறன் போன்ற சிறப்பம்சங்களுடன் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.
02:08 PM (IST) Dec 24
ரேவதிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி வைத்து கார்த்திக் எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஆனால், சாமுண்டீஸ்வரி மட்டும் ரொம்பவே ஹேப்பி.
02:00 PM (IST) Dec 24
தமிழக மக்களுக்கு எது சிறந்தது? எங்களுக்கு எது சிறந்தது? என்பதை ஆராய்ந்து பார்த்து முடிவெடுப்போம். நாங்கள் எந்த கூட்டணியில் இருந்தாலும் ஆண்டிப்பட்டியில் அமமுக தான் போட்டியிடும்.
01:47 PM (IST) Dec 24
ஆடு வளர்ப்பு தொழிலை திட்டமிட்டு செய்தால் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டலாம். அரசு வழங்கும் 50% மானியம், நபார்டு கடன் திட்டங்கள், சரியான பராமரிப்பு முறைகள் மூலம் இளைஞர்களும் பெண்களும் இந்தத் தொழிலில் எளிதாக வெற்றி பெற முடியும்.
01:40 PM (IST) Dec 24
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், ஆம்னி பேருந்துகளுக்கு நிகராக 130 புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றில், 34.30 கோடி ரூபாய் மதிப்பிலான 20 அதிநவீன குளிர்சாதன வால்வோ சொகுசு பேருந்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
01:38 PM (IST) Dec 24
மூத்த தமிழறிஞரும், பன்னாட்டு தமிழ் நடுவம் அமைத்தவருமான அரு கோபாலன் (அருகோ) உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவு, தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
01:25 PM (IST) Dec 24
விஜய்க்கு எதிராக தமிழக பாஜகவினர் பேசக்கூடாது என டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
01:17 PM (IST) Dec 24
நெருங்குகிறது 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல். பெருகுகிறது நமக்கு மக்கள் ஆதரவு. பெருகுகிறது பெருகுகிறது புரட்சித்தலைவர், புரட்சித் தலைவியின் ஆசிகள் நமக்கு இருக்கிறது.
01:04 PM (IST) Dec 24
ஜாதகத்தில் கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் ஏற்படும் தோஷங்கள் வாழ்வில் தடைகளை உருவாக்கும். ஒன்பது கிரகங்களின் தோஷங்களை நீக்கி, நற்பலன்களைப் பெற உதவும் எளிய மற்றும் சக்திவாய்ந்த ஆன்மீகப் பரிகாரங்களை இந்தக் கட்டுரை விவரிக்கிறது.
01:02 PM (IST) Dec 24
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த உணவு பொருட்களை விற்பனை செய்ய மதி உணவுத் திருவிழா சென்னை பெசன்ட் நகரில் நடைபெறுகிறது. 235க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகளுடன் நடைபெறும் இவ்விழா டிசம்பர் 28 வரை நீட்டிப்பு.
12:56 PM (IST) Dec 24
தொங்கும் தொப்பையை குறைக்க சில பழக்கங்களை தினமும் காலையில் செய்யுங்கள். அவை என்னவென்று இங்கு காணலாம்.
12:31 PM (IST) Dec 24
அயோத்தி ராமர் கோயிலுக்கு, கர்நாடக பக்தர் ஒருவர் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள, ரத்தினங்கள் பதித்த புதிய ராமர் சிலையை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
12:21 PM (IST) Dec 24
மலப்புரம் இளைஞர் ஒருவர் போலி இன்ஸ்டாகிராம் ஐடி மூலம் இளம்பெண்ணுடன் பழகி, திருமண ஆசை காட்டி ஆபாச படங்களை பெற்றுள்ளார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அந்த படங்களை இளம்பெண்ணின் தோழிக்கு அனுப்பியுள்ளார்.
12:21 PM (IST) Dec 24
ஞானம் யாருக்கும் தெரியாமல் ரேணுகாவுக்கு போன் செய்து எச்சரிக்கை மூலம் கடை திருப்பி விழாவிற்கு போக வேண்டாம் என்று எச்சரிக்கை படுத்துகிறார் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
12:15 PM (IST) Dec 24
ஈகோ மற்றும் எதிர்மறை எண்ணங்களால் பிரிந்த உறவுகளை மீண்டும் இணைக்க ஆன்மீகத்தில் சக்திவாய்ந்த வழிகள் உள்ளன. எளிய பரிகாரங்கள் மூலம், உங்கள் மீது கோபத்தில் இருப்பவரின் மனதை மாற்றி, அவரை உங்களிடம் உருகிப் பேச வைக்க முடியும்.
12:09 PM (IST) Dec 24
‘’நீங்கள் எத்தனை சொன்னாலும் இந்த தடவை ஜோசப் விஜய் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவார். ஜோசப் விஜய் கர்த்தரால் உயர்த்தப்படுவார். இந்த தடவை ஜோசப் விஜய் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவார்’’
11:39 AM (IST) Dec 24
இந்திய இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் வெறும் 36 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார். 14 வயதில் டி வில்லியர்ஸ் சாதனையை தூள் தூளாக்கி மாஸ் காட்டியுள்ளார்.
11:17 AM (IST) Dec 24
நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும் காலையில் வெறும் வயிற்றில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய சில உணவுகளின் பட்டியல் இங்கே.
10:58 AM (IST) Dec 24
Higher Education Department: தமிழ்நாடு உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை, அறிவியல் பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான 2025-26ஆம் ஆண்டு பணியிட மாறுதல் பொது கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
10:36 AM (IST) Dec 24
சனி பகவானின் சாதகமான சஞ்சாரத்தால் ஐந்து ராசிகளுக்கு 'கோடீஸ்வர யோகம்' கிடைக்கப் போகிறது. இந்த 'பொங்கு சனி'யின் அருளால், இந்த ராசியினர் தொழில், உத்தியோகம் மற்றும் சொத்துக்கள் மூலம் எதிர்பாராத பொருளாதார உச்சத்தை அடைவார்கள்.
10:34 AM (IST) Dec 24
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), LVM3 ராக்கெட் மூலம் AST SpaceMobile-இன் ப்ளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
10:13 AM (IST) Dec 24
அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு மன அழுத்தம் தரும் வகையில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, குறிப்பாக தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
10:07 AM (IST) Dec 24
2025 நவம்பர் மாதத்தில் இந்திய இருசக்கர வாகன சந்தை 22.5% வளர்ச்சி கண்டது, இதில் முதல் 10 மாடல்கள் 13.26 லட்சம் யூனிட்கள் விற்பனையாகின. இந்த பட்டியலை விரிவாக இங்கு காண்போம்.
09:54 AM (IST) Dec 24
சர்வதேச பொருளாதார மாற்றங்களால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 1,02,400 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,44,000 ஆகவும் உயர்ந்துள்ளது.