விளையாட்டுத் துறையில் சாம்பியன்களின் உண்மையான வலிமை பதக்கங்களில் மட்டும் இல்லை என விளையாட்டு வீரர்களுடனான கலந்துரையாடலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விளையாட்டு துறையில் சாதனை புரிந்த இளம் வீரர், வீராங்கனைகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடலை மேற்கொண்டார். இந்த கலந்துரைாடலின் முழு தொகுப்பை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “விளையாட்டு வீரர்களின் உண்மையான வலிமை பதக்கங்களால் மட்டும் கிடையாது. அவர்களிடம் இருக்கும் ஒழுக்கம், அழுத்தத்தைக் கையாளும் விதம், விடா முயற்சி என அனைத்தும் இணைந்தது தான்.

இங்கு வந்திருப்பவர்கள் வெறும் விளையாட்டை மட்டும் விளையாடவில்லை. நம் தமிழ்நாட்டின் எதிகால மரபை உருவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் தான் இளைஞர்கள் மீது எனக்கு எப்பொழுதும் தனி நம்பிக்கை உண்டு.

எப்பொழுதும் டென்ஷன் தான்

நான் 14 வயதிலேயே அரசியலுக்கு வந்துவிட்டேன். அப்பொழுதில் இருந்தே டென்ஷன் தான். ஏதாவது அழுத்தமான நேரம் வரும் போது புத்தகங்கள் படிப்பேன். பாட்டு கேட்பேன், டிவி பார்ப்பேன் இல்லையென்றால் நடைபயிற்சி செல்வேன்.

தோனியை மிகவும் பிடிக்கும்

தோனியின் கேப்டன்ஷிப் எனக்கு மிகவும் பிடிக்கும். எவ்வளவு டென்ஷன் ஏற்பட்டாலும் தோனி பொறுமையாக நடந்து கொள்வார். எளிய குடும்பத்தில் இருந்து வந்ததாலும், இந்திய அணிக்கு முதல் உலகக்கோப்பையைப் பெற்றுத் தந்ததாலும் கபில் தேவையும் மிகவும் பிடிக்கும். கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், தோனி வரை எனக்கு பலரையும் பிடிக்கும்.

Scroll to load tweet…

நான் ஒரு ஆப் ஸ்பின்னர்

கிரிக்கெட்டில் நான் ஒரு ஆப் ஸ்பின்னர். பள்ளிப் பருவத்தில் கிரிக்கெட்டில் பைத்தியமாக இருந்திருக்கிறேன். தெருக்களில் கிரிக்கெட் விளையாடும் போது கருணாநிதிக்கு நான் பௌலிங் போட்டிருக்கேன். மேலும் ஒரு மேட்சில் சிம்பு உட்பட மூவரை விக்கெட் எடுத்துள்ளேன்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.