- Home
- உடல்நலம்
- Honey Benefits : தேன் யூஸ் பண்றதுக்கு முன்னால இந்த '5' விஷயங்களை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..
Honey Benefits : தேன் யூஸ் பண்றதுக்கு முன்னால இந்த '5' விஷயங்களை கண்டிப்பாக தெரிஞ்சுக்கோங்க..
தேனில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆனால் தேனைப் பயன்படுத்துவதற்கு முன்பு சில விஷயங்களை அவசியம் தெரிந்துகொள்ளுங்கள். அதுகுறித்து இங்கு காணலாம்.

Honey Benefits
தேனில் பல நன்மைகள் உள்ளன. இதில் ஊட்டச்சத்துக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும். இத்தகைய சூழ்நிலையில், தேனை பயன்படுத்துவதற்கு முன் சில விஷயங்களை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். அவை என்னவென்று இந்த பதிவில் காணலாம்.
நோய்களைத் தடுக்கிறது
தேனில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது காய்ச்சல், சளி, தொண்டை வலியை நீக்குகிறது.
சர்க்கரை வேண்டாம்
சர்க்கரைக்குப் பதிலாக தேனைப் பயன்படுத்தலாம். இரண்டிலும் இனிப்பு ஒரே மாதிரியாக இருந்தாலும், தேனில் நன்மைகள் அதிகம்.
தேநீரில் கலந்து குடிக்கலாம்
பதப்படுத்தப்படாத தேனை தேநீர் அல்லது வெந்நீரில் கலந்து குடிக்கலாம். அதே சமயம், தேன் சேர்க்கும்போது தண்ணீரை அதிகமாக சூடாக்கக் கூடாது.
காயங்களை ஆற்ற உதவுகிறது
பதப்படுத்தப்படாத தேனில் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இது காயங்கள் எளிதில் ஆற உதவுகிறது.

