- Home
- Sports
- Sports Cricket
- 'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!
தன்னை உருவக்கேலி செய்த விவகாரத்தில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார். இது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

டெம்பா பவுமா பும்ரா சர்ச்சை
கடந்த மாதம் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் நடந்த இந்தியா-தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டியின்போது, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா களத்தில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து குறித்து தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா மனம் திறந்துள்ளார்.
டெம்பா பவுமா தலைமையில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா டெஸ்டின் போது, ஜஸ்பிரித் பும்ரா சம்பந்தப்பட்ட ஒரு தருணம் தவறான காரணங்களுக்காக கவனத்தை ஈர்த்தது.
பவுமாவை பாடி ஷேமிங் செய்த பும்ரா, ரிஷப் பண்ட்
அதாவது முதல் நாள் ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமாவை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்ததாக நம்பிய பும்ரா, நடுவரிடம் முறையிட்டார், ஆனால் கள நடுவர் அதை நிராகரித்தார். இந்த முடிவு குறித்து உறுதியாகத் தெரியாததால், விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட்டிடம் டிஆர்எஸ் எடுப்பது குறித்து பும்ரா ஆலோசித்தார்.
வீரர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களின் உரையாடல் குறித்த ஒரு கிளிப் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த உரையாடலின்போது, பும்ரா பவுமாவை "பவுனா" (குள்ளமானவர்) என்று குறிப்பிட்டதாகத் தோன்றியது, இது ஆன்லைனில் விமர்சனத்தையும் விவாதத்தையும் தூண்டியது.
மனம் திறந்த டெம்பா பவுமா
தனது ESPNcricinfo கட்டுரையில், தன்னைப் பற்றி 'ஏதோ' சொல்லப்பட்ட ஒரு சம்பவம் நடந்ததாக பவுமா கூறினார். பின்னர், மூத்த இந்திய வீரர்களான ரிஷப் பன்ட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா மன்னிப்பு கேட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த நேரத்தில் அந்த கருத்தை தான் கேட்கவில்லை என்றும், தனது அணியின் ஊடக மேலாளரிடம் சரிபார்த்த பின்னரே அது பற்றித் தெரிந்து கொண்டதாகவும் பவுமா குறிப்பிட்டார்.
மன்னிப்பு கேட்ட பும்ரா, ரிஷப் பண்ட்
"என் பக்கத்தில் இருந்து, அவர்கள் தங்கள் மொழியில் என்னைப் பற்றி ஏதோ சொன்ன ஒரு சம்பவம் நடந்தது எனக்குத் தெரியும். நாள் முடிவில், இரண்டு மூத்த வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா வந்து மன்னிப்பு கேட்டனர். மன்னிப்பு கேட்கப்பட்டபோது, அது எதைப் பற்றியது என்று எனக்குத் தெரியவில்லை, அந்த நேரத்தில் நான் அதைக் கேட்கவில்லை.
பின்பு மேனேஜரிடம் இது பற்றி கேட்டு அறிந்து கொண்டேன். களத்தில் நடக்கும் சம்பவங்கள் களத்திலேயே விடப்பட்டாலும், பேசப்பட்ட வார்த்தைகள் மறக்கப்படுவதில்லை. இதுபோன்ற தருணங்கள் நீடித்த பகையை உருவாக்குவதை விட, உந்துதலாகவே அமைகின்றன'' என்று தெரிவித்தார்.

