Published : May 06, 2025, 07:08 AM IST

Tamil News Live today 06 May 2025: நேற்று பிறந்தவர்கள் எல்லாம் அடுத்த முதல்வர் என்கிறார்கள்: மு.க.ஸ்டாலின்

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம்,  அதிமுக,  இன்றைய ஐபிஎல் போட்டி,  முதல்வர் ஸ்டாலின், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Tamil News Live today 06 May 2025: நேற்று பிறந்தவர்கள் எல்லாம் அடுத்த முதல்வர் என்கிறார்கள்: மு.க.ஸ்டாலின்

11:27 PM (IST) May 06

நேற்று பிறந்தவர்கள் எல்லாம் அடுத்த முதல்வர் என்கிறார்கள்: மு.க.ஸ்டாலின்

திமுக அரசு ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதாகவும், தமிழகத்தில் ஏழாவது முறையாக ஆட்சியை அமைக்கும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திராவிட மாடல் ஆட்சி இந்தியாவிற்கே முன்மாதிரியாகவும், பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்வதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் படிக்க

10:47 PM (IST) May 06

மனித மேம்பாட்டு குறியீட்டில் இந்தியா 130வது இடம்

இந்தியா மனித மேம்பாட்டு குறியீட்டு தரவரிசை 2023ல் 130வது இடத்திற்கு உயர்ந்துள்ளது. மக்களின் ஆயுட்காலம், கல்வி மற்றும் வருமானத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களால் இது சாத்தியமாகியுள்ளது.

மேலும் படிக்க

10:14 PM (IST) May 06

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி; பாகிஸ்தானை நிமிட நேரத்தில் தாக்கும்!!

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனையில் 800 கிமீ தூரம் வரை தாக்கும் திறன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது. இந்த மேம்படுத்தப்பட்ட திறன், பாகிஸ்தானுக்குள் உள்ள எந்தவொரு ராணுவ தளத்தையும் குறிவைக்கும் திறனை இந்தியாவுக்கு அளிக்கிறது, இது பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துகிறது.

மேலும் படிக்க

09:52 PM (IST) May 06

நமது நீர்வளங்கள் இனி நம் நலன்களுக்கே பயன்படுத்தப்படும்: பிரதமர் மோடி

பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தியதைத் தொடர்ந்து, இந்தியாவின் நீர்வளங்கள் இனி அதன் சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீரில் உள்ள பாக்லிஹார் அணையின் கதவுகள் மூடப்பட்டன, ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட நீர் வெளியேற்றம் தொடர்கிறது.

மேலும் படிக்க

09:35 PM (IST) May 06

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டால் ரூ.1.5 லட்சம் வரை இலவச சிகிச்சை

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விபத்து நடந்த ஏழு நாட்களுக்குள் நியமிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற, ஒரு நபருக்கு விபத்துக்கு ரூ.1.5 லட்சம் வரை காப்பீடு வழங்கும் நாடு தழுவிய இலவச சிகிச்சை திட்டத்தை அரசாங்கம் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க

08:39 PM (IST) May 06

அமெரிக்காவை விட்டு வெளியேறினால் 1,000 டாலர் உதவித்தொகை: டிரம்ப் அறிவிப்பு

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் தாமாகவே முன்வந்து நாட்டை விட்டு வெளியேறினால், 1000 டாலர் உதவித்தொகை வழங்குவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணச் செலவுகளையும் கவனித்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

08:33 PM (IST) May 06

கோடையில் பனங்கற்கண்டை இப்படி சாப்பிட்டு பாருங்க

கோடை கால வெப்பத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து காக்கும் உணவுகளில் ஒன்று பனங்கற்கண்டு. குளிர்காலத்தில் மட்டுமின்றி கோடை காலத்திலும் இதை சரியான முறையில் உணவில் பயன்படுத்தி வந்தால் அளவில்லாத ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும்.

மேலும் படிக்க

08:32 PM (IST) May 06

Explainer: இந்தியா - பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தம்; இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்!

இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் விஸ்கி, கார்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் பொருளாதார ரீதியாக பெரும் பலன்களைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

08:23 PM (IST) May 06

இந்த 5 எண்ணெய்களை சாப்பிட்டால் உடலுக்கு ஆபத்து

சமையலுக்கு பல வகையான எண்ணெய்களை நாம் பயன்படுத்துகிறோம். ஆனால் சில எண்ணெய்களை கண்டிப்பாக சமையலுக்கு பயன்படுத்தவே கூடாது. அப்படி பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டு விடும். மறந்தும் கூட சமையலுக்கு பயன்படுத்தக் கூடாத 5 எண்ணெய்கள் இவைகள் தான்

மேலும் படிக்க

08:08 PM (IST) May 06

அரிசிக்கு மாற்றாக எடுத்துக் கொள்ள வேண்டிய 5 உணவுகள்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மாற்றாக யோசிப்பவர்கள் அரிசிக்கு மாற்றான உணவுகளை தான் அதிகம் தேடுவது உண்டு. அப்படி தேடுபவர்கள் வெள்ளை அரிசிக்கு பதிலாக வேறு என்னென்ன தானியங்களை உணவாக எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

07:49 PM (IST) May 06

வாக்கிங் செல்வதற்கு முன் இந்த தவறை மட்டும் செய்துடாதீங்க

வாக்கிங் செல்வது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு வாக்கிங் செல்வதற்கு முன்பும், அதற்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் மிக மிக முக்கியம். நீங்களும் தினமும் காலையில் வாக்கிங் செல்பவர் என்றால் சில தவறுகளை கண்டிப்பாக செய்து விடாதீர்கள். இது உங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், வாக்கிங் சென்றதன் முழு பலனும் கிடைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் படிக்க

07:36 PM (IST) May 06

Mock Drill - தமிழ்நாட்டில் எங்கு போர் ஒத்திகை? இந்தியா முழுவதும் முழு பட்டியல்!!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா நாடு தழுவிய Mock drill போர் ஒத்திகை நடத்துகிறது. இது சிவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் 244 சிவில் பாதுகாப்பு மாவட்டங்களில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் எங்கு போர் ஒத்திகை நடக்கிறது என்று பார்க்கலாம்.
 

மேலும் படிக்க

07:30 PM (IST) May 06

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினமும் இதை மட்டும் பண்ணுங்க

ஆரோக்கியமான வாழ்க்கையை தான் அனைவரும் விரும்புவார்கள். அதுவும் கஷ்டமே இல்லாமல் எளிமையான, ஈஸியான முறையில் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும் என்றால் யார் தான் வேண்டாம் என்பார்கள்? டாக்டரிடமே செல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தினசரி என்ன செய்ய வேண்டும் என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

07:29 PM (IST) May 06

நாளை போர்க்கால ஒத்திகை: தமிழகத்தில் எங்கே நடக்கிறது?

காஷ்மீர் தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் நாளை 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெற உள்ளது. இந்த ஒத்திகையின் போது எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கச் செய்யப்படும் மற்றும் பொதுமக்களுக்கான பாதுகாப்பான இடங்கள் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் சென்னையில் இந்த ஒத்திகை நடக்க உள்ளது.

மேலும் படிக்க

07:04 PM (IST) May 06

மொறு மொறுப்பான 4 வித்தியாசமான தோசை வகைகள்

வழக்கமான தோசை சாப்பிட்டு போர் அடித்து விட்டது என நினைத்தால், வித்தியாசமாக இப்படி தோசை செய்து பாருங்க. மொறு மொறு என்றும், வித்தியாசமான சுவையுடனும் இருக்கும் இந்த தோசைக்கும் யாரும் நோ சொல்ல மாட்டார்கள். தோசை பிடிக்காதவர்கள் கூட இந்த தோசைக்கு அடிமையாகி விடுவார்கள்.

மேலும் படிக்க

06:43 PM (IST) May 06

பெட்ரோல் பங்குகளுக்கு தலைவலியாக மாறிய UPI மோசடிகள்

தமிழ்நாட்டில் பெட்ரோல் பங்க்களை வாடிக்கையாளர்கள் மோசடி செய்து பணத்தை மீட்டு வருகின்றனர். இதனால் பெட்ரோல் பங்க்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அவர்களின் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. இந்த மோசடிகள் குறித்து டீலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க

06:12 PM (IST) May 06

பெருஞ்சீரகத்தை இப்படி சாப்பிட்டால் உடம்பு கூல் ஆகுமா?

பெருஞ்சீரகம் செரிமானத்திற்கு நல்லது என அனைவருக்கும் தெரியும். ஆனால் கோடை காலத்தில் பெருஞ்சீரகம் சாப்பிட்டால் உடலை கூலாக பாதுகாக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? உண்மை தான். சில எளிய முறைகளில் பெருஞ்சீரகத்தை பயன்படுத்தினால் வெயில் எவ்வளவு அதிகமாக அடித்தால் நீங்கள் கூலாக இருக்கலாம்.

மேலும் படிக்க

05:39 PM (IST) May 06

மற்ற அணிகள் அழைத்தும் ஆர்சிபியை விட்டு செல்லாதது ஏன்? மனம் திறந்த விராட் கோலி!

மற்ற அணிகள் அழைத்தும் ஆர்சிபியை விட்டு செல்லாதது ஏன்? என்பது குறித்து விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார்.

மேலும் படிக்க

05:38 PM (IST) May 06

அரசு ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணம் ரூ.20,000! அரசாணை வெளியீடு!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு பண்டிகை செலவுகளை சமாளிக்க உதவும்.

மேலும் படிக்க

05:21 PM (IST) May 06

சோபிதா கர்ப்பமாக இருக்கிறாரா? வைரலாகும் நாக சைதன்யாவின் முதல் குழந்தை!

நடிகர் நாக சைதன்யா, சமந்தாவுடனான விவாகரத்திற்குப் பிறகு சோபிதா துலிபாலாவை மணந்தார். சோபிதா கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் தவறானது என குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

மேலும் படிக்க

05:10 PM (IST) May 06

ரோகித் சர்மாவை இம்பேக்ட் வீரராக களமிறக்குவது ஏன்? மும்பை இந்தியன்ஸ் விளக்கம்!

ரோகித் சர்மாவை இம்பேக்ட் வீரராகப் பயன்படுத்துவதற்கான காரணங்கள் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி விளக்கம் அளித்துள்ளது.
 

மேலும் படிக்க

04:46 PM (IST) May 06

தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் சரண்யா யார் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பாஜக பெண் பிரமுகர் சரண்யா தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். சொத்து பிரச்சினை காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க

04:35 PM (IST) May 06

Met Gala 2025: கண்ணைப் பறித்த ஷாருக்கானின் பல கோடி ரூபாய் கைக்கடிகாரம்!!

மெட் காலா 2025 இல் சப்யசாச்சி உடையில் ஷாருக்கான் அறிமுகமானார். அவரது படேக் பிலிப் கைக்கடிகாரத்தின் விலை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மேலும் படிக்க

04:15 PM (IST) May 06

ஒரே நாளிலை 2வது முறை தங்கம் விலை உயர்வு! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

சர்வதேச பொருளாதாரச் சூழலால் தங்கம் விலை இன்று இரண்டு முறை உயர்ந்துள்ளது. சென்னையில் சவரன் ரூ.1,600 உயர்ந்து ரூ.72,800 ஆகவும், கிராம் ரூ.9,100 ஆகவும் விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க

04:14 PM (IST) May 06

1xBet போட்டி: ரூ.363,500 பரிசுத்தொகை வழங்கப்பட்டது

IPL உத்வேகத்துடன் 1xBet நடத்திய பிக் இண்டியன் கேசினோ லீக் வெற்றிகரமாக நிறைவடைந்தது. 14,000 பேர் பங்கேற்ற இந்தப் போட்டியில் ரூ.3,63,500 பரிசுத் தொகை வழங்கப்பட்டது. உத்தராகண்ட் வெற்றியாளருக்கு ரூ.1.5 லட்சம் கிடைத்தது.

மேலும் படிக்க

04:12 PM (IST) May 06

இந்தியாவுக்கு ஆதரவாக நாங்கள் எதையும் செய்வோம்: அமெரிக்கா சபாநாயகர் மைக் ஜான்சன்!!

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் மைக் ஜான்சன் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க

03:57 PM (IST) May 06

போர்க்காலத்தில் இந்த விரைவுச்சாலைகளில் போர் விமானங்கள் தரையிறங்க முடியும்

இது இந்தியாவின் முதல் CAT II ILS அமைப்பு கொண்ட விமான தளமாகும், இது குறைந்த வெளிச்சத்திலும் தரையிறங்க வழிவகுக்கிறது. இந்தியாவில் சுமார் ஒரு டஜன் நெடுஞ்சாலைகளில் போர் விமானங்கள் தரையிறங்க முடியும்.

மேலும் படிக்க

03:55 PM (IST) May 06

பீரங்கித் தாக்குதலில் இருந்து எப்படி தப்பிப்பது? பள்ளிகளில் போர் பாதுகாப்பு ஒத்திகை!

எல்லைப் பகுதிகளில் நிலவும் பதற்றம் காரணமாக, ஜம்முவில் உள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு போர் மற்றும் மோதல் நேரங்களில் உயிர் பிழைப்பது குறித்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மேலும் படிக்க

03:49 PM (IST) May 06

தண்ணீரில் ஊற வைத்து மட்டுமே சாப்பிடக் கூடிய '5' உணவுகள்

சாப்பிடும் எப்போதுமே தண்ணீரில் ஊற வைக்க வேண்டிய 5 உணவுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

மேலும் படிக்க

03:47 PM (IST) May 06

விஜய் கையில் நாட்டை ஒப்படைப்பதா? தளபதியை வெளுத்து வாங்கி பிரகாஷ் ராஜ்

நடிகர்கள் பவன் கல்யாண் மற்றும் விஜய் அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். இருவருக்கும் அரசியல் பார்வை மற்றும் நாட்டின் பிரச்சினைகள் குறித்த புரிதல் இல்லை என்கிறார். அவர்களின் திரைப்பிரபலமே அரசியல் பிரவேசத்திற்கு காரணம் என்றும் விமர்சிக்கிறார்.

மேலும் படிக்க

03:35 PM (IST) May 06

வைரமுத்துவின் கவிதையை பட்டி டிங்கரிங் பார்த்து உருவாக்கப்பட்ட அஜித்தின் சூப்பர் ஹிட் பாடல்!

கவிஞர் வைரமுத்து தான் எழுதிய கவிதை ஒன்றை அஜித் படத்தின் பாடலுக்காக மாற்றியமைத்து அந்த பாடலும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அது என்ன பாடல் என்பதை பார்க்கலாம்.

மேலும் படிக்க

03:33 PM (IST) May 06

அடேங்கப்பா!! நயன்தாரா ஹேண்ட் பேக் விலை இத்தனை லட்சமா? தலை சுற்ற வைக்கும் விலை!!

நடிகை நயன்தாராவின் விலையுர்ந்த ஹேண்ட் பேக் குறித்த சிறப்பு தகவல்களை இங்கு காணலாம்.   
 

மேலும் படிக்க

03:26 PM (IST) May 06

2026ல் Bye Bye Stalin!திமுக ஆட்சியில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த சம்பவங்கள்! லிஸ்ட் போட்ட இபிஎஸ்!

கடந்த 24 மணி நேரத்தில் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்களை அவர் சுட்டிக்காட்டி, ஸ்டாலின் மாடல் அரசை நம்பி எந்தப் பயனும் இல்லை என்றும், மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

03:15 PM (IST) May 06

கோவையில் நாயை ஏவி சிறுமியை கடிக்க செய்த கொடூர பெண்.! சிறையில் அடைத்த போலீஸ்

கோவையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை நாய் கடித்ததில் பலத்த காயம். -நாயின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்

மேலும் படிக்க

02:59 PM (IST) May 06

இந்தியாவில் அதிக குற்றங்கள் நிகழும் டாப் 10 மாநிலங்கள்! தமிழ்நாடு லிஸ்ட்ல இருக்கா?

இந்தியாவில் அதிக குற்றங்கள் நடக்கும் டாப் 10 மாநிலங்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிக்க

02:55 PM (IST) May 06

10 நாட்கள் முன்னதாகவே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! குளு குளு நியூஸ் சொன்ன வானிலை மையம்!

தமிழகத்தில் கத்திரி வெயில் சுட்டெரிக்கும் நிலையில், தென்மேற்கு பருவமழை மே 13ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க

02:52 PM (IST) May 06

திடீரென வெடித்த வெஸ்டர்ன் டாய்லெட்.! படுகாயம் அடைந்த இளைஞர்- நடந்தது என்ன.?

கிரேட்டர் நொய்டாவில் கழிவறை இருக்கை வெடித்து இளைஞர் படுகாயமடைந்தார். மீத்தேன் வாயு வெடிப்பு சந்தேகிக்கப்படுகிறது, அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

மேலும் படிக்க

02:25 PM (IST) May 06

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப் 5 SUV கார்கள்

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 5 SUV கார்களின் பட்டியல் இங்கே. ஹூண்டாய் கிரெட்டா முதலிடத்திலும், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

மேலும் படிக்க

02:19 PM (IST) May 06

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் TVK-வா? லீக்கான தகவல்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படத்தில் தளபதியின் பெயர் என்ன என்பது குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

மேலும் படிக்க

02:12 PM (IST) May 06

பாகிஸ்தான் லால் மசூதியில் மதகுரு எழுப்பிய கேள்வி; மக்கள் மவுனம்!!

லால் மசூதியில் இந்தியாவுக்கு எதிரான போருக்கு ஆதரவு கேட்ட மதகுருவுக்கு மக்களிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இது  பாகிஸ்தானில் மாறிவரும் மனநிலையின் அறிகுறியா?

மேலும் படிக்க

More Trending News