காஷ்மீர் தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் நாளை 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெற உள்ளது. இந்த ஒத்திகையின் போது எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கச் செய்யப்படும் மற்றும் பொதுமக்களுக்கான பாதுகாப்பான இடங்கள் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் சென்னையில் இந்த ஒத்திகை நடக்க உள்ளது.

காஷ்மீர் தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், நாடு முழுவதும் நாளை 259 இடங்களில் போர்க்கால ஒத்திகை நடைபெற உள்ளது. இந்த ஒத்திகை தமிழ்நாட்டில் சென்னையில் நடக்க உள்ளது.

போர்க்கால ஒத்திகை:

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இதன் விளைவாக, மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் நாளை போர்க்கால தயார்நிலை ஒத்திகைகளை நடத்துமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

எச்சரிக்கை சைரன்கள்:

போர் நேரங்களில், இந்திய எல்லைப் பகுதிகளில் வெளிநாட்டு போர் விமானங்கள் ஊடுருவினால் எச்சரிக்கை சைரன்கள் ஒலிப்பது வழக்கம். நாளைய பயிற்சியின்போது, இந்த சைரன்கள் கண்டிப்பாக ஒலிக்கச் செய்யப்பட வேண்டும். பொதுமக்களுக்கான பாதுகாப்பான இடங்கள் முன்னரே அறிவிக்கப்பட வேண்டும். சைரன் ஒலிக்கும்போது அந்த இடங்களுக்கு மக்கள் எப்படி பாதுகாப்பாகச் செல்வது என்பதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட வேண்டும்.

259 இடங்களில் ஒத்திகை:

மத்திய உள்துறை அமைச்சகம் இந்த நாடு தழுவிய போர் ஒத்திகை எங்குெல்லாம் நடைபெறும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 259 இடங்களில் இந்த ஒத்திகை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், தமிழ்நாட்டில் இருந்து சென்னை மாநகரம் மட்டும் இடம்பெற்றுள்ளது. சென்னையில், கல்பாக்கம், மீனம்பாக்கம் போன்ற முக்கியமான பகுதிகளில் இந்த ஒத்திகை நடத்தப்பட வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரு (நகர்ப்புறம்), கொச்சி, திருவனந்தபுரம், புதுச்சேரி ஆகிய இடங்களும் இதில் அடங்கும். நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த போர் ஒத்திகை நடைபெற உள்ளது.