Mock Drill in Chennai: என்னவெல்லாம் நடக்கும்.? பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்.?
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியா போர் ஒத்திகை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. மே 7 அன்று பல மாநிலங்களில் சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது,

Mock Drill in India - India Pakistan War
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில்,
இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது. இதற்காக இந்தியா ஏவுகனை சோதனையை தீவிரப்படுத்தி வருகிறது. இதே போல பாகிஸ்தானும் பல நூறு கிலோ மீட்டர் சென்று தாக்கும் வகையிலான சோதனையில் இறங்கியுள்ளது.
Mock drill in Chennai
எனவே எந்த நேரத்திலும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா போர் அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் திங்களன்று பல மாநிலங்களுக்கு மே 7 அன்று சிவில் பாதுகாப்பு ஒத்திகை நடவடிக்கைகளை நடத்த உத்தரவிட்டுள்ளது. ஒத்திகையின் போது, விமானத் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்படும். எதிரித் தாக்குதலின் போது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான பயிற்சி பொதுமக்களுக்கு அளிக்கப்படும். தாக்குதல் ஏற்பட்டால், மின்தடை, முக்கியமான ஆலைகள் மற்றும் நிறுவனங்களை மறைத்தல் மற்றும் மக்களை வெளியேற்றுதல் ஆகியவற்றைப் பயிற்சி செய்யப்படும். தமிழ்நாட்டில் சென்னையில் நாளை போர் ஒத்திகை நடக்கிறது.
போர் ஒத்திகையின் போது மாநிலங்கள் என்ன செய்ய வேண்டும்?
1- விமானத் தாக்குதல் எச்சரிக்கை சைரன்களை இயக்குதல்.
2- இந்திய விமானப்படையுடன் ஹாட்லைன் அல்லது ரேடியோ தொடர்பு இணைப்பை இயக்குதல்.
3- கட்டுப்பாட்டு அறை மற்றும் நிழல் கட்டுப்பாட்டு அறையைச் செயல்படுத்துதல்.
4- எதிரித் தாக்குதலின் போது தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பொதுமக்கள், மாணவர்கள் போன்றவர்களுக்குப் பயிற்சி அளித்தல்.
மின் தடைகள், பதுங்கு குழிகள் தயார் செய்தல்
5- சிவில் பாதுகாப்பு சேவைகள், குறிப்பாக மருத்துவமனைகள், தீயணைப்பு, மீட்பு சேவை, கிடங்கு போன்றவற்றைச் செயல்படுத்துதல்.
6- மின்தடை செய்தல்.
7- முக்கியமான தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் பிற இடங்களை மறைத்தல்.
8- மக்களை மீட்டு வெளியேற்றும் திட்டத்தைப் புதுப்பித்தல். அதைப் பயிற்சி செய்தல்.
9- பதுங்கு குழிகள், அகழிகள் போன்றவற்றைச் சுத்தம் செய்தல்.
ஏன் இந்த போர் ஒத்திகை நடவடிக்கை?
1- விமானத் தாக்குதல் எச்சரிக்கை அமைப்பு எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறது என்பதைப் பார்ப்பது.
2- கட்டுப்பாட்டு அறை மற்றும் நிழல் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாட்டை மதிப்பிடுவது.
3- எதிரித் தாக்குதலின் போது தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்களுக்குப் பயிற்சி அளிப்பது.
4- மின்தடை செய்வதற்கான தயார்நிலையைச் சரிபார்ப்பது.
5- முக்கியமான ஆலைகள் மற்றும் இடங்களை விரைவாக மறைக்கும் திறனைச் சரிபார்ப்பது.
6- வார்டன் சேவைகள், தீயணைப்பு, மீட்புப் பணிகள் மற்றும் கிடங்கு மேலாண்மை உள்ளிட்ட சிவில் பாதுகாப்பு சேவைகளின் செயல்திறனைச் சரிபார்ப்பது.
7- தாக்குதல் ஏற்பட்டால், ஒரு இடத்திலிருந்து பொதுமக்களை வெளியேற்றும் தயார்நிலையைச் சரிபார்ப்பது.