- Home
- Tamil Nadu News
- தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் சரண்யா யார் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!
தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் சரண்யா யார் தெரியுமா? வெளியான அதிர்ச்சி தகவல்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் பாஜக பெண் பிரமுகர் சரண்யா தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். சொத்து பிரச்சினை காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பாஜக பெண் பிரமுகர்
Pattukottai BJP Saranya Murder! தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் பாலன் (45). இவரது மனைவி சரண்யா (35). பாஜக பிரமுகர். நேற்று இரவு சரண்யா அடையாளம் தெரியாத நபர்களால் தலை துண்டித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கணவர் இறந்த நிலையில் இரண்டாவது திருமணம்
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்: மதுரையை சேர்ந்த சரண்யாவுக்கும், சண்முகசுந்தரம் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு சாமுவேல் (15), சரவணன் (13) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு சண்முகசுந்தரம் உயிரிழந்ததை அடுத்து பட்டுக்கோட்டை, கழுகபுலிகாடு கிராமத்தைச் சேர்ந்த பாலன் (45) என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
சரண்யா தலை துண்டித்து கொடூர கொலை
தொடர்ந்து இருவரும் குடும்பத்துடன் உதயசூரியபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அதே பகுதியில் ஜெராக்ஸ் மற்றும் டிராவல்ஸ் நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்றிரவு வழக்கம் போல பாலன் கடையை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பின்னர் சரண்யாவும் தனது கடையை பூட்டிக் கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் சரண்யாவை மடக்கி தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் சரிந்து விழுந்த சரண்யாவை தலையை துண்டித்து கொடூரமாக படுகொலை செய்தனர்.
அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசியவர்
இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் பாஜக நிர்வாகி சரண்யா கொலை வழக்கில் கபிலன், குகன், பார்த்திபன் ஆகிய 3 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதில் கபலின் என்பவர் சரண்யாவின் கணவர் பாலனின் முதல் மனைவியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சொத்து பிரச்சனை காரணமாக இந்த நடைபெற்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட சரண்யா யார் என்ற விவரங்கள் வெளியாகியுள்ளன. அதாவது கடந்த 2022ம் ஆண்டு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது செருப்பு வீசியவர் என்பது குறிப்பிடத்தக்கது.