தண்ணீரில் ஊற வைத்து மட்டுமே சாப்பிடக் கூடிய '5' உணவுகள்
சாப்பிடும் எப்போதுமே தண்ணீரில் ஊற வைக்க வேண்டிய 5 உணவுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

Foods You Must Always Be Soak Before Eating
நாம் ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டால் போதாது. ஆம், நாம் எடுத்துக் கொள்ளும் உணவுகளை ஆரோக்கியமான முறையில் எடுத்துக் கொள்கிறோமா என்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அதாவது நாம் சமைக்கும் முறை மற்றும் சாப்பிடும் முறை இவை இரண்டும் மிகவும் முக்கியம். அதை சரியாக பின்பற்றினால் மட்டுமே சாப்பிடும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும். அந்தவகையில், நாம் சில பொருட்களை ஊற வைத்து தான் சமைத்து சாப்பிடுவோம். சிலவற்றை அப்படியே சாப்பிடுகிறோம். ஆனால் நாம் சாப்பிடும் சில உணவுகளை ஊற வைக்காமல் சாப்பிடக் கூடாது. ஊற வைத்து சாப்பிட்டால் தான் அதன் முழு பலன்களையும் பெற முடியும் தெரியுமா? அப்படி சாப்பிடும் முன் ஊற வைக்க வேண்டிய சில உணவு பொருட்கள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
1. தானியங்கள்:
அரிசி, குயினோவா, ஓட்ஸ் போன்ற தானியங்களை ஊறவைத்து பிறகு சமைத்து சாப்பிட்டால், ஊட்டச்சத்துக்களை முழுமையாக பெறலாம். இது செரிமானத்தை மேம்படுத்தும், ஊட்டச்சத்து உறிஞ்சுகளை அதிகரிக்கும் மற்றும் பைடிக் அமிலத்தை உடைக்கும். இது தவிர ஊற வைப்பதன் மூலம் சமைக்கும் நேரம் குறையும், கழுவும் போது குப்பைகள் மற்றும் அசுத்தங்கள் அகற்றப்படுகின்றன. இதனால் அதிக சத்தான மற்றும் எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு கிடைக்கும்.
2. நட்ஸ்கள் மற்றும் விதைகள்:
பாதாம், வால்நட், ஆளி விதைகள் போன்றவற்றை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக, இரவு தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலை சாப்பிட வேண்டும். இதனால் அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு, நார்ச்சத்து அதிகரிக்கிறது. அதுபோல அவற்றின் புரதம் ஜீரணிக்க எளிதாகிறது. வயிற்று வெப்பம் குறைகிறது மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்தும்.
3. பச்சை இலை காய்கறிகள்:
கீரை, காலே போன்ற சில இலை காய்கறிகளை சாப்பிடும் முன் தண்ணீரில் ஊற வைப்பது மிகவும் நன்மை பயக்கும். அப்படி ஊறவைக்கும் போது இலைகளில் படிந்திருக்கும் அழுக்கு, மணல் மற்றும் பிற அசுத்தங்கள் அகற்றப்படுகின்றன. இதனால் சுத்தம் பண்ணா மற்றும் ஆரோக்கியமான உணவு சாப்பிட முடியும். முக்கியமாக சத்தான கீரைகளின் ஒட்டுமொத்த தரத்தையும் மேம்படுத்தும்.
4. பருப்பு வகைகள்:
பருப்பு வகைகளை சமைப்பதற்கு முன் ஊற வைக்க வேண்டு.ம் இதனால் அவற்றின் அமைப்பு மென்மையாகிறது, சமைக்கும் நேரம் குறையும், பைட்டிக் அமிலம் மற்றும் நொதி தடுப்பான்களை நீக்கி, அவற்றை எளிதாக செரிமானமாக்குகிறது.
5. கொண்டைக்கடலை:
கொண்டைக்கடலையை சமைக்கும் முன் ஊற வைத்தால் அவற்றின் ஊட்டச்சத்து நன்மைகள் முழுமையாக பெற முடியும் மற்றும் சமைக்கும் நேரம் குறையும். கூடுதலாக ஜீரணிக்க எளிதாகிறது, வீக்கம் மற்றும் அசெளகரியத்தின் அபாயம் குறையும்.