Published : Jul 06, 2025, 06:59 AM ISTUpdated : Jul 06, 2025, 10:54 PM IST

Tamil News Live today 06 July 2025: TNPL 2025 - திண்டுக்கல் டிராகன்ஸை பந்தாடி திருப்பூர் தமிழன்ஸ் அணி சாம்பியன்! முதல் கோப்பையை தட்டித் தூக்கியது!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, மழைக்கு வாய்ப்பு, அரசியல், முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:54 PM (IST) Jul 06

TNPL 2025 - திண்டுக்கல் டிராகன்ஸை பந்தாடி திருப்பூர் தமிழன்ஸ் அணி சாம்பியன்! முதல் கோப்பையை தட்டித் தூக்கியது!

டிஎன்பிஎல் 2025 தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

 

Read Full Story

10:53 PM (IST) Jul 06

உங்கள் கிரெடிட் கார்டை ரொம்ப நாளா பயன்படுத்தாம இருக்கீங்களா? இதை மறக்காம தெரிஞ்சிக்கோங்க

தற்போது கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரிடமும் கிரெடிட் கார்டு உள்ளது. கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதில் சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

Read Full Story

10:43 PM (IST) Jul 06

புதிய விஷன் SXT கான்செப்ட் SUV-ஐ அறிமுகப்படுத்தும் Mahindra நிறுவனம்

மஹிந்திரா புதிய விஷன் SXT கான்செப்ட் SUV-ஐ ஆகஸ்ட் 15, 2025 அன்று அறிமுகப்படுத்துகிறது. இது ICE மற்றும் EV பவர்டிரெய்ன்களுடன் வரக்கூடும்.
Read Full Story

10:34 PM (IST) Jul 06

பார்க்கவே அவ்ளோ அழகு! ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் SV பிளாக் எடிஷன்

லேண்ட் ரோவர் நிறுவனம், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் SV பிளாக் எடிஷனை குட்வுட் விழாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதிநவீன இன்ஜின், அம்சங்கள் மற்றும் ஸ்டைலான தோற்றத்துடன் விரைவில் இந்த SUV வெளியாகவுள்ளது.
Read Full Story

08:35 PM (IST) Jul 06

ஒரே நேரத்தில் 2 பைக்குகள்! மாஸ் காட்டும் Bajaj - மிஸ் பண்ணிடாதீங்க

பஜாஜ் நிறுவனம் தனது பிரபலமான டோமினார் 400 மற்றும் 250 பைக்குகளின் 2025 மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய அம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன், இந்த பைக்குகள் நீண்ட பயணங்களை இன்னும் வசதியாக மாற்றும். 

Read Full Story

08:02 PM (IST) Jul 06

ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த டாப் 5 வீரர்கள்!

இந்திய கேப்டன் சுப்மன்  2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 269, 2வது இன்னிங்சில் 161 எடுத்து சாதனை படைத்தார். டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிலர் மட்டுமே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அது குறித்து விரிவாக பார்ப்போம்.

Read Full Story

07:55 PM (IST) Jul 06

New Tata Punch 2025 - இந்தியாவிலேயே பாதுகாப்பான கார்! மாதம் ரூ.7200 போதும்!

இந்தியாவின் அதிக பாதுகாப்பான மற்றும் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றான Tata Punch 2025 மாடலை மாதாந்திர சுலபத்தவணையில் பெறுவதற்கான வழிகளை தெரிந்து கொள்வோம்.

Read Full Story

06:38 PM (IST) Jul 06

கை நிறைய சம்பாதிக்க சூப்பர் வாய்ப்பு! தமிழக அரசு வழங்கும் 5 நாள் பயிற்சி!

தமிழ்நாடு அரசு, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கிறது. ஜூலை 10 முதல் 14 வரை சென்னையில் நடைபெறும்.

Read Full Story

05:50 PM (IST) Jul 06

Mouth Odour - வாய் துர்நாற்றம் இனி இல்லை.. இதோ எளிய வீட்டு மருத்துவக் குறிப்புகள்

வாய் துர்நாற்றம் என்பது பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை. வாய் துர்நாற்றத்தை போக்க உதவும் சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

05:31 PM (IST) Jul 06

அஜித்குமார் தம்பி நவீனுக்கு என்ன ஆச்சு! மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதியால் பரபரப்பு!

திருப்புவனம் அருகே கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில், அவரது தம்பி நவீன்குமாரும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸ் தாக்குதலால் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
Read Full Story

05:26 PM (IST) Jul 06

Children Eye Health - குழந்தைகளின் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 5 எளிய டிப்ஸ்

குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு கண் ஆரோக்கியமும் முக்கியம். கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஐந்து எளிய மற்றும் பயனுள்ள குறிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

05:14 PM (IST) Jul 06

சூரியனின் புதிய முகம் - நாசாவின் PUNCH திட்டம்

நாசாவின் PUNCH திட்டம் சூரியனின் வெளிப்புற வளிமண்டலம் மற்றும் சூரியக் காற்றை ஆய்வு செய்யும் நான்கு சிறிய செயற்கைக்கோள்களின் தொகுப்பாகும். விண்ணில் செலுத்தப்பட்ட சில வாரங்களில் அரிய "வானவில்" காட்சியின் படங்களை அனுப்பி சாதனை படைத்துள்ளது.

Read Full Story

04:56 PM (IST) Jul 06

Medical Checkup for Women - 50 வயதை கடந்த பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்

50 வயதை கடந்த பெண்கள் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

 

Read Full Story

04:56 PM (IST) Jul 06

3 முக்கிய வங்கிகளுக்கு ஆப்பு வைத்த RBI! வாடிக்கயாளர்கள் பணத்த எடுப்பத்கும், செலுத்துவதற்கும் கட்டுப்பாடு

RBI மூன்று வங்கிகளுக்கு கடன், வைப்புத்தொகை மற்றும் பிற வங்கி வணிகங்களைச் செய்வதிலிருந்து தடைசெய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களையும் பாதிக்கும். இந்த வங்கிகளில் ஏதேனும் ஒன்றில் உங்களுக்கு கணக்கு இருக்கிறதா என்று கண்டுபிடிப்போம்?

Read Full Story

04:32 PM (IST) Jul 06

அடுத்த 2 அல்லது 3 நாட்களில்! வானிலை மையம் சொன்ன முக்கிய அப்டேட்!

மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

Read Full Story

03:42 PM (IST) Jul 06

ஹோட்டல் தொழிலில் கொடிகட்டி பறக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார் யார் தெரியுமா?

 

ஹோட்டல் தொழிலை வெற்றிகரமாக நடத்தி வரும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யார்? யார்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

Read Full Story

03:20 PM (IST) Jul 06

5G போன் வாங்கணுமா? Poco M6 Plus இப்போ சலுகை விலையில் கிடைக்குது!

Poco M6 Plus 5G இப்போது ரூ.10,999 குறைந்த விலையில் கிடைக்கிறது. சக்திவாய்ந்த செயலி, பெரிய டிஸ்ப்ளே மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட இந்த போன், பட்ஜெட் விலையில் 5G இணைப்பை வழங்குகிறது.
Read Full Story

03:13 PM (IST) Jul 06

ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி அரசு இல்லத்தைக் காலி செய்யாததால் சர்ச்சை

ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்யாததால் சர்ச்சை எழுந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிக காலம் தங்கியுள்ளதால், நீதிமன்ற நிர்வாகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

Read Full Story

03:10 PM (IST) Jul 06

Food for Better Sleep - தூக்கம் வராமல் கஷ்டப்படுறீங்களா? இந்த உணவுகளை சாப்பிட்டு பாருங்க

சமீப காலமாக மெக்னீசியம் குறித்த பதிவுகள் சமூக வலைதளங்களில் அதிகரித்துள்ளன. பலரும் மெக்னீசியம் ஹேஷ்டக்கை பயன்படுத்தி பதிவிட்டு வருகின்றனர். மெக்னீசியம் உடல்நலத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

01:57 PM (IST) Jul 06

ரயில் முன் பாய்ந்த ஆர்டிஓ, ஆசிரியை தம்பதி! என்ன காரணம்? வெளியான பரபரப்பு தகவல்!

நாமக்கல்லில் ஆர்டிஓ அலுவலக ஊழியர் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி ஆசிரியை பிரமிளா ஆகியோர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். கடன் சுமை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Read Full Story

01:51 PM (IST) Jul 06

Gwada Negative Blood Group - உலகில் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டும் அரிய ரத்த வகை கண்டுபிடிப்பு..!

உலகிலேயே ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டும் ‘க்வாடா நெகட்டிவ்’ என்கிற அரிய இரத்த வகை கண்டறியப்பட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

01:41 PM (IST) Jul 06

உலகின் மிகவும் சமத்துவமான சமூகங்களில் ஒன்றாக இந்தியா - உலக வங்கி அறிக்கை!

உலக வங்கியின் தரவுகளின்படி, வருமான சமத்துவத்தில் இந்தியா உலக அளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. வறுமை ஒழிப்பு, நிதிச் சேவைகளுக்கான அணுகல் மற்றும் நேரடிப் பலன் பரிமாற்றங்கள் போன்ற அரசின் முயற்சிகள் இந்த முன்னேற்றத்திற்கு உந்துதலாக அமைந்துள்ளன.
Read Full Story

01:37 PM (IST) Jul 06

Toll Tax - சுங்கச்சாவடி கட்டணங்களில் 50% குறைப்பு.. யார் யாருக்கு கிடைக்கும்?

உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணங்கள் 50% குறைக்கப்படும். இந்த மாற்றம் தினசரி பயணிகள் மற்றும் வணிகங்களுக்கு நிதிச் சுமையைக் குறைக்கும், சாலைப் பயன்பாட்டை மேம்படுத்தும்.
Read Full Story

01:09 PM (IST) Jul 06

Best Selling Car - அதிகம் விற்பனையாகும் கார் இதுதான்.. இந்திய மக்களின் பேவரைட் கார் எது?

2025 ஜனவரி முதல் ஜூன் வரை இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காராக இது மாறியுள்ளது, 1.01 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி ஹூண்டாய் க்ரெட்டாவை முந்தியுள்ளது.

Read Full Story

01:03 PM (IST) Jul 06

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் எக்ஸ் கணக்கு திடீர் முடக்கம்! விளக்கம் கோரும் அரசு!

சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. இது 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பான சட்டப்பூர்வ கோரிக்கையின் பேரில் நடந்ததாக எக்ஸ் தெரிவிக்க, இந்திய அரசு புதிய கோரிக்கை எதுவும் விடுக்கவில்லை என்கிறது.
Read Full Story

12:47 PM (IST) Jul 06

என்னால தூங்க முடியல.. ராணுவத்தில் இருந்து வந்த BTS V கொடுத்த ஷாக் தகவல்!

இராணுவ சேவையிலிருந்து திரும்பிய பிறகு, BTS உறுப்பினர் V தூக்கமின்மையால் அவதிப்படுவதாகக் கூறியுள்ளார். சிறிய சத்தங்கள் கூட தன்னைத் தொந்தரவு செய்வதாக கூறியுள்ளார்.

Read Full Story

12:33 PM (IST) Jul 06

திருச்செந்தூர் கோவில் புனரமைப்புக்கு ரூ.206 கோடி நன்கொடை அளித்த சிவ் நாடார்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் சீரமைப்புப் பணிகளுக்காக சிவ் நாடாரின் 'வாமா சுந்தரி அறக்கட்டளை' ரூ. 206 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. இந்த நன்கொடை கோவில் பராமரிப்பு க்கு பெரும் உதவியாக இருக்கும்.

Read Full Story

12:27 PM (IST) Jul 06

Diabetes - சர்க்கரை நோய் வந்துடுச்சா.. கவலை வேண்டாம்.. இந்த 5 விஷயங்களை கவனியுங்கள்

சர்க்கரை நோயாளிகள் ஐந்து முக்கியமான விஷயங்களில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Read Full Story

11:32 AM (IST) Jul 06

Growing a Beard is Safe? தாடி வளர்ப்பு மீது அதிக ஆர்வம் கொண்டவரா? இதை படியுங்க முதலில்

தாடி வளர்ப்பு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

 

Read Full Story

11:19 AM (IST) Jul 06

5G Network - போனில் 5ஜி வேகம் இல்லையா? உடனே இதைச் செய்யுங்க பாஸ்..!

உங்கள் 5G ஸ்மார்ட்போனில் 5G வேகம் இல்லையா? கவலை வேண்டாம், இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் தொலைபேசியில் 10 மடங்கு வேகமான 5G வேகத்தை அனுபவிக்கலாம்.

Read Full Story

10:41 AM (IST) Jul 06

புதிய கட்சி தொடங்கிய எலான் மஸ்க் - டிரம்ப்புக்கு சவால் விடும் 'அமெரிக்கா கட்சி'

டிரம்பின் முன்னாள் கூட்டாளியான எலான் மஸ்க், அமெரிக்காவின் ஒற்றைக் கட்சி முறைக்கு சவால் விடும் நோக்குடன் 'அமெரிக்கா கட்சி'யைத் தொடங்கியுள்ளார். டிரம்பின் 'ஒன் பிக், பியூட்டிஃபுல் பில்' மசோதாவை எதிர்த்ததை அடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Read Full Story

10:24 AM (IST) Jul 06

Pet Disease - நீங்க Pet Lover ஆ? செல்லப்பிராணிகளால் மனிதர்களுக்கு இவ்வளவு நோய்கள் ஏற்படும் தெரியுமா?

செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு சில வகை நோய்கள் ஏற்படலாம். அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

09:47 AM (IST) Jul 06

திருச்செந்தூரில் நாளை குடமுழுக்கு - 113 கோயில்களில் ஒரே நாளில்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 113 கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெறும்.
Read Full Story

09:39 AM (IST) Jul 06

PAN - உங்கள் முதலீட்டை மறந்துவிட்டீர்களா? பான் நம்பர் இருந்தா போதும்.!

உங்கள் பான் எண்ணைப் பயன்படுத்தி உங்கள் அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளையும் எளிதாகக் கண்காணிக்கலாம். ஒருங்கிணைந்த கணக்கு அறிக்கை (CAS) மற்றும் SEBI இன் MITRA மூலம் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

Read Full Story

09:14 AM (IST) Jul 06

தென்னிந்திய நடிகர்களின் சொத்து மதிப்பு... நம்பர் ஒன் யாருன்னு தெரியுமா?

தற்போது பான் இந்தியா படங்கள் காரணமாக படத்தின் பட்ஜெட் உயர்வதோடு மட்டுமல்லாமல், நடிகர்களின் சம்பளமும் உயர்ந்து கொண்டே வருகிறது. தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் டாப் 5 பட்டியலை இங்கு பார்க்கலாம்.

Read Full Story

09:14 AM (IST) Jul 06

பாமக நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணி நீக்கம் - ராமதாஸ் அதிரடி அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவைக் கலைத்து, அன்புமணி ராமதாஸை நீக்கி, 21 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை அறிவித்துள்ளார்.

Read Full Story

09:03 AM (IST) Jul 06

ஜூலை 7ஆம் தேதி அரசு விடுமுறையா? தமிழக அரசு விளக்கம்

ஜூலை 7, 2025 அன்று மொஹரம் பண்டிகைக்காக தமிழக அரசு விடுமுறை என சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. மொஹரம் பண்டிகை ஜூலை 6, 2025 ஞாயிற்றுக்கிழமை வருவதால், திங்கட்கிழமை விடுமுறை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Story

07:42 AM (IST) Jul 06

Rajdoot 350 - ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக வரும் ராஜ்தூத் 350.. விலை, மைலேஜ் எவ்வளவு?

சின்னமான ராஜ்தூத் மோட்டார் சைக்கிள் பிராண்ட் புதிய ராஜ்தூத் 350 மாடலுடன் மீண்டும் வருகிறது. ரெட்ரோ வசீகரம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை இணைக்கும் இந்த பைக், முழுமையான டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், LED ஹெட்லேம்ப்கள் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

Read Full Story

07:41 AM (IST) Jul 06

இன்னும் 2 நாள் லீவு இருக்கு! குஷியில் பள்ளி மாணவர்கள்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய ஜூலை 19ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read Full Story

More Trending News