ஜூலை 7ஆம் தேதி அரசு விடுமுறையா? தமிழக அரசு விளக்கம்
ஜூலை 7, 2025 அன்று மொஹரம் பண்டிகைக்காக தமிழக அரசு விடுமுறை என சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் தவறானது என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. மொஹரம் பண்டிகை ஜூலை 6, 2025 ஞாயிற்றுக்கிழமை வருவதால், திங்கட்கிழமை விடுமுறை இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொஹரம் பண்டிகை
மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அன்று தமிழக அரசு விடுமுறை என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் தவறானது என தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் பிரிவு (TN Fact Check) விளக்கமளித்துள்ளது.
தலைமை காஜி அறிவிப்பு என்ன?
சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் இந்தத் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தமிழக அரசின் உண்மை கண்டறியும் பிரிவு (TN Fact Check) தனது 'X' பக்கத்தில் தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு தலைமை காஜி வெளியிட்ட அறிவிப்பையும் பகிர்ந்துள்ளது.
ஜூலை 7ஆம் தேதி விடுமுறையா?
"கடந்த 26-06-2025 அன்று மொஹரம் மாத பிறை காயல்பட்டினத்தில் காணப்பட்டது. அதன்படி, 27-06-2025 தேதி மொஹரம் மாத முதல் பிறையாக ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது. எனவே, யொமே ஷஹாதத் (தியாகத் திருநாள்) ஞாயிற்றுக்கிழமை 06-07-2025 அன்று வருகிறது" என்று தலைமை காஜியின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திங்ட்கிழமை விடுமுறை இல்லை
மொஹரம் பண்டிகை ஒரு வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 6) அன்று வருவதால், ஜூலை 7, 2025 திங்கட்கிழமை அரசு விடுமுறை இல்லை எனவும் TN Fact Check தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, பொதுமக்கள் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.