MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திருச்செந்தூரில் நாளை குடமுழுக்கு: 113 கோயில்களில் ஒரே நாளில்!

திருச்செந்தூரில் நாளை குடமுழுக்கு: 113 கோயில்களில் ஒரே நாளில்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 113 கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெறும்.

2 Min read
Author : SG Balan
| Updated : Jul 06 2025, 09:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஒரே நாளில் 113 கோயில்களில் குடமுழுக்கு
Image Credit : stockPhoto

ஒரே நாளில் 113 கோயில்களில் குடமுழுக்கு

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா நாளை (திங்கட்கிழமை) கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஒரே நாளில் தமிழகத்தில் உள்ள 113 கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை செய்துள்ளது.

25
திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம்
Image Credit : stockPhoto

திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம்

குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, மூலவர், பார்வதி அம்பாள், கரிய மாணிக்க விநாயகர், வள்ளி, தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்பிரகாரத்தில் யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், ராஜகோபுர அடிவாரத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள யாகசாலை மண்டபத்தில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கி, தினமும் காலை, மாலை என ஒவ்வொரு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த இரண்டு நாட்களாக தங்க முலாம் பூசப்பட்ட மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை உள்பட விமான கோபுர கலசங்கள் விமானதளத்திற்கு கொண்டுவரப்பட்டு, அதில் வரகு நிரப்பப்பட்டு மீண்டும் அந்தந்த சுவாமி விமானத்தில் பொருத்தப்பட்டன. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 ஆம் கால யாகசாலை பூஜையும், மாலையில் 11 ஆம் கால யாகசாலை பூஜையும் நடைபெறுகின்றன. நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 12 ஆம் கால யாகசாலை பூஜை நடைபெறும்.

Related Articles

Related image1
முருக பக்தரா நீங்கள்? திருச்செந்தூர் கும்பாபிஷேகம் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய செய்தி!சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு!
Related image2
திருச்செந்தூர் முருகன் கோவில் அற்புதங்கள் : இதுவரை வெளிவராத ரகசிய தகவல்கள்
35
பக்தர்களுக்கான விரிவான ஏற்பாடுகள்
Image Credit : our own

பக்தர்களுக்கான விரிவான ஏற்பாடுகள்

நாளை (திங்கட்கிழமை) காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு மகா குடமுழுக்கு நடைபெறுகிறது. அதேநேரத்தில் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் மற்றும் அனைத்து பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

பக்தர்கள் எவ்வித நெருக்கடியும் இன்றி விழாவைக் காணும் வகையில் கோவில் கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தை பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் நேரலையில் காணும் வகையில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் மீது புனிதநீர் தெளிப்பதற்காக 20 ட்ரோன்கள் தயார் நிலையில் உள்ளன.

45
கும்பாபிஷேகம் முடிந்த பிறகு...
Image Credit : our own

கும்பாபிஷேகம் முடிந்த பிறகு...

பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதற்காக திருச்செந்தூரில் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. குடமுழுக்கு முடிந்தவுடன் மூலவர் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் தொடர்பான பூஜைகள் நடைபெற உள்ளதால், நாளை பகலில் பக்தர்களுக்கு தரிசனம் இல்லை. கும்பாபிஷேகம் முடிந்து தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜையில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

55
அன்னதானம் வழங்கப்படும் இடங்கள்
Image Credit : Google

அன்னதானம் வழங்கப்படும் இடங்கள்

கும்பாபிஷேகம் முடிந்தவுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டி. பி. சாலையில் உள்ள செந்திலாண்டவர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி சாலை, திருநெல்வேலி சாலை, மற்றும் பரமன்குறிச்சி சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையங்களில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
தமிழ்நாடு
ஆன்மீகம்
கோவில் நிகழ்வுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தமிழக அரசியலில் ட்விஸ்ட்.. புதிய கட்சி தொடங்கினார் சசிகலா.. எம்.ஜி.ஆர், ஜெ., படங்களுடன் கொடி!
Recommended image2
26 வயது அபிராமி இருந்த அந்த கோலம்! நேரில் பார்த்த கணவருக்கு நடந்த அதிர்ச்சி.! போலீஸ் விசாரணையில் பகீர்!
Recommended image3
21 தான் தர முடியும்.. இஷ்டம்னா இருங்க இல்லைனா.. கெத்து காட்டும் திமுக.. புலம்பும் கதர்சட்டைகள்!
Related Stories
Recommended image1
முருக பக்தரா நீங்கள்? திருச்செந்தூர் கும்பாபிஷேகம் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய செய்தி!சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு!
Recommended image2
திருச்செந்தூர் முருகன் கோவில் அற்புதங்கள் : இதுவரை வெளிவராத ரகசிய தகவல்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved