- Home
- Tamil Nadu News
- Tamilnadu Heavy Rain: தமிழகத்தில் இன்று முதல் ருத்தரதாண்டவம் ஆடப்போகும் பெய் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? முக்கிய அப்டேட்!
Tamilnadu Heavy Rain: தமிழகத்தில் இன்று முதல் ருத்தரதாண்டவம் ஆடப்போகும் பெய் மழை! எந்தெந்த மாவட்டங்களில்? முக்கிய அப்டேட்!
Rain: தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனிடையே தென்மேற்கு பருவமழை ஜூன் 4-ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஜூன் 6 வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைஎச்சரிக்கை.

சுட்டெரிக்கும் கோடை வெயில்
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் காலை 7 மணி முதலே வெயில் சுட்டெரித்து வருவதால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சு நடுங்குகின்றனர். அந்த அளவுக்கு அனல் காற்று வீசி வருகிறது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. நேற்று வேலூர் - 104, சென்னை மீனம்பாக்கம் - 104, கரூர் பரமத்தி - 103, தஞ்சாவூர் - 102, சென்னை நுங்கம்பாக்கம் - 101, பாளையங்கோட்டை - 101, திருச்சி - 101, திருத்தணி - 101, நாமக்கல் - 100, மதுரை விமான நிலையம் - 100 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.
வெயிலை தணித்த கோடை மழை
கோடை வெயில் அதிகபட்சமாக இருந்தாலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. நேற்று திருப்பத்தூர், திருப்பூர், கரூர், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.
தென்மேற்கு பருவமழை
இந்நிலையில் தென்மேற்கு பருவமழை குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது. அதாவது தென்மேற்கு பருவமழை கேரளப்பகுதிகளில் ஜூன் 04ம் தேதி வாக்கில் துவங்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும்.
ஜூன் 5ம் கனமழை பெய்யும் மாவட்டங்கள்
அதேபோல் ஜூன் 5ம் தேதி தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
ஜூன் 6ம் இடி மின்னலுடன் பலத்த மழை
ஜூன் 6ம் தேதி தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர். நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசா முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும் குறைபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

