MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Vaiko Vs DMK: அப்பவே சொன்ன வைகோவை சேர்க்காதீங்கன்னு! கேட்டீங்களா! தலையில் அடித்துக்கொள்ளும் திமுக முன்னாள் நிர்வாகி!

Vaiko Vs DMK: அப்பவே சொன்ன வைகோவை சேர்க்காதீங்கன்னு! கேட்டீங்களா! தலையில் அடித்துக்கொள்ளும் திமுக முன்னாள் நிர்வாகி!

Vaiko: முதல்வர் விஜய்க்கு ஆதரவளித்திருக்கலாம் என மதிமுக எம்.பி. துரை வைகோ தெரிவித்த நிலையில், அவரது சந்தர்ப்பவாதத்தை முன்னாள் திமுக நிர்வாகி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கடுமையாக சாடியுள்ளார். 

3 Min read
Author : vinoth kumar
Published : Jun 02 2026, 10:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : ANI

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக வலுவான கூட்டணியை கட்டமைத்து வந்த திமுக கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியாக வெளியேறி தவெகவுடன் இணைந்துள்ளன. இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக கடந்த சில நாட்களாகவே தவெகவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Image Credit : our own

திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக சென்ற முதல்வர் விஜய்யை, திருச்சி தொகுதி எம்.பி.யும் வைகோவின் மகனுமான துரை வைகோ விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துரை வைகோ: உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டவசமானது. தனி சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் தவெகவுக்கு ஆதரவு அளித்திருக்கலாம் என்ற கருத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் தோல்வியானாலும் கூட உங்களுக்கு தனிச் சின்னம் கொடுத்த போதே அதில் போட்டியிட்டு இருக்கலாமே? இப்பொழுது வந்து துரதிஷ்டம் என்று சொன்னால் என்ன அர்த்தம்? என முன்னாள் திமுக நிர்வாகி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Related Articles

Related image1
Gold Appraiser Training: தங்க நகையின் தரம்! போலியான நகைகளை அடையாளம் காண்பது எப்படி? தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
Related image2
Tamilnadu Power Cut: எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள் முடிச்சுடுங்க! ஜூன் 03ம் தேதி நாளை தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு!
36
Image Credit : Asianet News

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: மதிமுகவினர் “நாங்கள் உதய சூரியன் சின்னத்தில் நின்றது துரதிஷ்டமாகி விட்டது. அப்படி இல்லாமல் எங்கள் சொந்தச் சின்னத்தில் நின்று ஜெயித்திருந்தால் இப்பொழுது விஜய்க்கு ஆதரவு கொடுத்து இருப்போம் “என்று கூறுகிறார். அவரிடம் ஒரு கேள்வி. சீர்காழியில் உங்கள் விரும்பும் சின்னத்தில் நிற்பதற்கான ஒரு தொகுதியைத் தானே ஸ்டாலின் கூட்டணியில் ஒதுக்கினார். நீங்கள் தான் அந்த சின்னத்தில் நாங்கள் நிற்கவில்லை உதயசூரியன் சின்னத்திலேயே நிற்கிறோம் என்று கூறினீர்கள்? உங்களுக்காக வந்து சீர்காழி தொகுதியிலும் கூட ஸ்டாலின் மனைவி பிரச்சாரம் கூட பண்ணினார். தோல்வியானாலும் கூட உங்களுக்கு தனிச் சின்னம் கொடுத்த போதே அதில் போட்டியிட்டு இருக்கலாமே? இப்பொழுது வந்து துரதிஷ்டம் என்று சொன்னால் என்ன அர்த்தம்!?

46
Image Credit : Google

உங்கள் நாவில் இருந்து வரும் சொற்களில் ஏதாவது அறம் இருக்கிறதா? நியாயம் இருக்கிறதா? தவம் இருக்கிறதா? உங்களின் சுய நேர்மையை விட எங்கே காரிய சாதகம் இருக்கிறதோ அங்கே சென்று விடுகிறீர்கள். ஏறக்குறைய 1998 இல் இருந்து 2001 இல் இருந்து பார்த்துக் கொண்டுதான் வருகிறேன். அப்பனும் பிள்ளையுமாகத்தான் முடிவு எடுக்கிறீர்கள். அப்படி முடிவெடுக்கும் பொழுது எல் கணேசனோ கண்ணப்பனோ பொன் முத்துராமலிங்கமோ அந்த காலத்திலேயே உங்களால் அழைக்கப்படவில்லையே.. நீங்கள் இரண்டு பேருமாகத்தான் முடிவெடுத்தீர்கள். விளைவாக இன்றைக்கு மதிமுகவில் வாரிசு அரசியல் உச்சத்தில் இருக்கிறது.

56
Image Credit : Asianet News

கடந்த காலத்தில் நீங்கள் பேசிய பேச்சுக்களையும் உங்களுக்காகத் தீக்குளித்து உயிர் விட்டவர்களையும் திரும்பக் கொண்டு வந்து விடுவீர்களா வைகோ? இப்படித்தான் மிகக் கேவலமாக இருக்கிறது உங்கள் வாடிக்கை. ஒவ்வொருவரும் உயிரைக் கொடுத்து உங்களுக்காக உழைத்தார்கள். எத்தனை நாட்கள்! எத்தனை ஆண்டுகள்! ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அதன் அடிப்படையில் எவ்வாறு சீரழிந்து ஒன்றுமில்லாமல் போனது!? எவ்வளவு பேர் எதிர்பார்ப்பில் இருந்து மனமொடிந்து போயிருப்பார்கள்!?

எந்தப் பலாபலனும் இல்லாமல் இளமை காலம் பொருள் அனைத்தையும் இழந்து அவர்களது அரசியல் வாழ்க்கை காற்றில் கரைந்தே போய்விட்டது.. எத்தனை பேரை உங்களுடைய சுயலாபத்திற்காக புறம் தள்ளினீர்கள். ஒதுக்கி வைத்தீர்கள் அந்த பாவம் எல்லாம் உங்களைச் சும்மா விடுமா? 10 வருடம் 20 வருடங்களுக்கு மேலாக உங்களுக்காக உழைத்து உங்கள் அருகிலேயே இருந்தவர்களுக்கு நீங்கள் என்ன நன்றி கடன் பட்டடீர்கள்! அவர்களை அண்ட விடாமல் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டு இன்றைக்கு வந்து துரதிர்ஷடம் பற்றி எல்லாம் பேசுகிறீர்கள்! வேடிக்கையாகத்தான் இருக்கிறது!! நீங்கள் ஏதோ பதவி சுகத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் நினைத்துக் கொள்ள வேண்டாம்! எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும்.

66
Image Credit : our own

எப்பொழுதும் உண்மையே பேசுவேன் என்று சொன்ன அரிச்சந்திரனும் கஷ்டப்பட்டான். நள வெண்பாவில் நளனின் கதை என்ன ஆயிற்று? புராணக் கதைகளும் இதிகாசங்களும் எல்லாவற்றிற்குமான காரண காரிய அறிவோடு அவற்றின் விளைவுகளோடும் சம்பந்தப்படுத்தி ஒரு முழுமையான பார்வையை காலம் காலமான இந்தியத் தத்துவங்கள் வழியாக இந்த மானுட சமூகத்திற்கு வழங்கி இருக்கின்றன. கடவுளை நம்பினால் என்ன? நம்பாமல் இருந்தால் என்ன? அதன் படி எல்லாவற்றுக்கும் ஒரு தீர்வு உண்டு. யாரும் அதில் இருந்து தப்ப முடியாது என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
தமிழ்நாடு
வைகோ மதிமுக
மு. க. ஸ்டாலின்
டிவி.கே. விஜய்
Latest Videos
Recommended Stories
Recommended image1
EPS: மனம் தளர வேண்டாம்! துரோகிகளின் எண்ணம் ஈடேறாது! எல்லாத்தையும் நான் பார்த்துகொள்கிறேன்.. சீனாக சீனுக்கு வரும் இபிஎஸ்..
Recommended image2
Annamalai Exit: பாஜகவை விட்டு அண்ணாமலை வெளியேற இதுதான் காரணமா? டெல்லி கூட்டத்தில் கசிந்த அதிர்ச்சி தகவல்!
Recommended image3
Mars Transit 2026: இனி இவங்களுக்குப் பொற்காலம் தான்! செவ்வாய் பெயர்ச்சியால் பணமழையில் நனையப்போகும் 3 அதிர்ஷ்டசாலி ராசிகள் எவை?
Related Stories
Recommended image1
Gold Appraiser Training: தங்க நகையின் தரம்! போலியான நகைகளை அடையாளம் காண்பது எப்படி? தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு!
Recommended image2
Tamilnadu Power Cut: எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள் முடிச்சுடுங்க! ஜூன் 03ம் தேதி நாளை தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved