பாமக நிர்வாகக் குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி அறிவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவைக் கலைத்து, அன்புமணி ராமதாஸை நீக்கி, 21 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை அறிவித்துள்ளார்.

அன்புமணியை நீக்கிய ராமதாஸ்
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவை கலைத்து, அதில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்கி, அந்தக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், 21 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவையும் அவர் அறிவித்துள்ளார்.
பாமக உட்கட்சிப் பூசல்
பாமகவில் கடந்த சில நாட்களாகவே நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே உட்கட்சிப் பூசல் நிலவி வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், இன்று (ஜூலை 6, 2025) ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதிய தலைமை நிர்வாகக் குழு
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 21 பேர் கொண்ட தலைமை நிர்வாகக் குழுவில், பாமகவின் மூத்த தலைவர்களான ஜி.கே.மணி, அருள், ஏ.கே.மூர்த்தி ஆகியோர் முக்கிய இடங்களைப் பிடித்துள்ளனர். அன்புமணி ராமதாஸ் இடம்பெற்றிருந்த முந்தைய தலைமை நிர்வாகக் குழு கலைக்கப்பட்டு இந்த புதிய குழு அறிவிக்கப்பட்டுள்ளது.
பூம்புகாரில் பாமக மகளிர் மாநாடு
இந்தக் கூட்டத்தில் ஆகஸ்டு 10ஆம்ஐ தேதி பூம்புகாரில் நடைபெறும் மகளிர் மாநாடு குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, 8ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பாமக மாநில செயற்குழு கூட்டம் ஓமந்தூரில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
பாமகவில் அதிகாரப் போட்டி
இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் பாமகவில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டி மேலும் வலுப்பெற்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். கட்சிக்குள் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.