இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அஜித்குமார் லாக்கப் டெத், சென்னையை குளிர்வித்த மழை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:53 PM (IST) Jul 03
சுப்மன் கில் இரட்டை சதத்தால் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
11:31 PM (IST) Jul 03
உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சுகிறீர்களா? Google Password Checkup, Apple iCloud Keychain Monitoring போன்ற இலவச கருவிகளைப் பயன்படுத்தி உங்கள் கடவுச்சொல் பாதுகாப்பை உடனடியாகச் சரிபார்த்து, உங்கள் தரவைப் பாதுகாக்கவும்.
11:22 PM (IST) Jul 03
இரட்டை சதம் அடித்த சுப்மன் கில்லை சச்சின், யுவராஜ் சிங், அஸ்வின் ஆகியோர் பாராட்டினார்கள். இது தொடர்பாக இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.
11:19 PM (IST) Jul 03
இன்றைய "எப்போதும் இணைந்திருக்கும்" பணி கலாச்சாரத்தில், வேலை-வாழ்க்கை ஒருங்கிணைப்பு மற்றும் சமநிலை இரண்டில் எது உங்கள் நல்வாழ்வு மற்றும் உற்பத்தித்திறனுக்கு உதவுகிறது என்பதை இந்தக் கட்டுரை ஆராய்கிறது. உங்களுக்கு எது சிறந்தது என்பதைக் கண்டறியுங்கள்.
11:11 PM (IST) Jul 03
பாதுகாப்பில் அக்கறை கொண்டவர்களுக்கு, பாரத் NCAP விபத்துச் சோதனையில் 5 நட்சத்திர மதிப்பீடு பெற்ற ஐந்து மின்சார கார்கள் பற்றிய தகவல்கள் இங்கே.
11:05 PM (IST) Jul 03
கடன் அறிக்கை பிழைகளைக் குறைப்பதற்கும், கிரெடிட் ஸ்கோர் துல்லியத்தை மேம்படுத்துவதற்கும், கடன் அமைப்பில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் அனைத்து கடன் கணக்குகளுக்கும் ஒரு தனித்துவமான கடன் வாங்குபவர் ஐடியை அறிமுகப்படுத்த RBI திட்டமிட்டுள்ளது.
10:37 PM (IST) Jul 03
டெல்லி வாகன உரிமையாளர்களில் 79 சதவீதம் பேர் பழைய வாகனங்களுக்கு எரிபொருளைத் தடை செய்யும் அரசாங்கத்தின் புதிய விதியை எதிர்க்கின்றனர் என்று ஒரு புதிய கணக்கெடுப்பு வெளிப்படுத்துகிறது.
10:30 PM (IST) Jul 03
மைக்ரோசாஃப்ட், கூகுள், அமேசான் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் 2025-லும் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்கின்றன. பொருளாதார சவால்கள் AI-யால் உந்தப்பட்ட மறுசீரமைப்புகள் காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான வேலைகள் காலியாகியுள்ளன.
10:16 PM (IST) Jul 03
ChatGPT 2022 முதல் இந்தியர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது, இருப்பினும் OpenAI இன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், மாயத்தோற்றங்களுக்கு ஆளாகும் தன்மை காரணமாக எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்துகிறார்.
10:06 PM (IST) Jul 03
உங்கள் Google சேமிப்பகம் நிரம்பிவிட்டதா? டேட்டாவை இழக்காமல் இடத்தை காலி செய்ய, Google One Storage Manager பயன்படுத்துவது முதல் டெலிகாம் கிளவுட் ஆஃபர்கள் வரை பல பயனுள்ள வழிகளை இந்த வழிகாட்டி வழங்குகிறது.
10:00 PM (IST) Jul 03
ஒரு லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள ஆடை அணிந்து விம்பிள்டன் டென்னிஸ் பார்க்க வந்த பிரியங்கா சோப்ரா ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.
09:53 PM (IST) Jul 03
வாகனம் ஓட்டும்போது அல்லது அதனுள் அமர்ந்து புகைபிடிப்பது சட்டப்படி குற்றம். மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படலாம். டெல்லியில் முதல் முறை ₹500, இரண்டாம் முறை ₹1500 வரை அபராதம். CNG காரில் புகைபிடிப்பது உயிருக்கு ஆபத்தாகவும் முடியும்.
08:32 PM (IST) Jul 03
ஜனவரி-ஜூன் 2025 இல் இந்தியாவின் கார் விற்பனையில் மாருதி வேகன் ஆர் 1.01 லட்சம் யூனிட்டுகளுடன் முதலிடத்திலும், ஹூண்டாய் கிரெட்டா 1 லட்சம் யூனிட்டுகளுடன் நெருக்கமாகவும் உள்ளது.
08:15 PM (IST) Jul 03
விராட் கோலியை ஓவர்டேக் செய்த சுப்மன் கில் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு சாதனைகளை பார்ப்போம்.
07:34 PM (IST) Jul 03
கோவிட் தடுப்பூசிகளுக்கும் திடீர் இதய நிறுத்த மரணங்களுக்கும் இடையே எந்தத் தெளிவான தொடர்பும் இல்லை என்று அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) நிபுணர் மருத்துவர்கள் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
07:21 PM (IST) Jul 03
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த சுப்மன் கில் சேனா நாடுகளில் இரட்டை சதம் அடித்த முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.
06:36 PM (IST) Jul 03
அதிகரித்து வரும் மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, டெல்லி அரசு பழைய கார்களை ஓட்டுவதற்குத் தடை விதித்துள்ளது. இதனால், முதல் தலைமுறை டொயோட்டா ஃபார்ச்சூனர் முதல் டாடா சஃபாரி டைகோர் வரை 10 பிரபலமான கார்கள் டெல்லியில் ஓட்ட முடியாது.
06:28 PM (IST) Jul 03
06:15 PM (IST) Jul 03
வாஸ்து சாஸ்திரத்தின் படி மருதாணி செடியை வீட்டில் வளர்க்கலாமா? கூடாதா? என்று இந்த பதிவில் பார்க்கலம்.
06:05 PM (IST) Jul 03
உங்களது முகம் இயற்கையாகவே பளபளக்க கீழே கொடுக்கப்பட்ட பானங்களில் ஒன்றை தினமும் இரவு தூங்கும் முன் குடியுங்கள்.
05:53 PM (IST) Jul 03
05:49 PM (IST) Jul 03
திடீரென வரும் மழையால் உங்களின் லெதர் ஷூ நனைந்து ஈரமாகி விட்டது என்றால், அதை நீண்ட காலம் பாதுகாப்பதற்கு சில முக்கியமான விஷயங்களை செய்ய வேண்டும். லெதர் ஷூ ஈரத்தால் வீணாகி விடாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
05:44 PM (IST) Jul 03
Tata Harrier EV இன் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. ₹21.49 லட்சம் ஆரம்ப விலையில், Tataவின் சக்திவாய்ந்த மின்சார காரான இது புதிய அம்சங்களுடன் வருகிறது.
05:34 PM (IST) Jul 03
குழந்தைகளின் வளர்ச்சியில் பெற்றோர்களின் நடத்தை ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நேர்மையான முறையில் வளர்க்க வேண்டும் என்றால் தங்கள் நடத்தையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.
05:31 PM (IST) Jul 03
விம்பிள்டன் 2025ல் நடப்பு சாம்பியனான கார்லோஸ் அல்காரஸ் 2வது சுற்றில் எளிதில் வெற்றி பெற்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
05:15 PM (IST) Jul 03
அக்குள் துர்நாற்றத்தால் பயணம், அலுவலகம் போன்ற இடங்களில் பிரச்சனைகளை சந்திக்கிறீர்கள் என்றால் அதற்கு நாம் செய்யும் சில தவறுகள் தான் காரணம் என டாக்டர்கள் சொல்கிறார்கள். இந்த தவறான லைஃப்ஸ்டையிலை மாற்றினால் நல்ல தீர்வு கிடைக்கும்.
05:11 PM (IST) Jul 03
05:07 PM (IST) Jul 03
இன்றைய காலகட்டத்தில், ரீல்ஸ் பார்ப்பது என்பது பலரின் பொழுதுபோக்காக மாறிவிட்டது. அளவுக்கு அதிகமாக ரீல்ஸ் பார்ப்பதால் பல்வேறு உடல்நல மற்றும் மனநல பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ரீல்ஸ் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பார்க்கலாம்.
04:44 PM (IST) Jul 03
காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்க மனசே இல்லாமல் சோர்வாக, தூக்கமாக உணரும் பிரச்சனை பெரும்பாலானவர்களுக்கு உண்டு. அதிலும் மழைக்காலத்தில் கேட்கவே வேண்டாம். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட்டு சுறுசுறுப்பாக நாளை துவங்க இதோ சூப்பர் டிப்ஸ்.
04:39 PM (IST) Jul 03
உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகரித்தால் மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படலாம். மருத்து மாத்திரைகளுடன் பின்வரும் குறிப்புகளை பின்பற்றினால் எளிதில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க முடியும்.
04:19 PM (IST) Jul 03
லிவர்பூல் எஃப்சி கால்பந்து வீரர் 28 வயதான டியாகோ ஜோட்டா ஸ்பெயினில் கார் விபத்தில் பலியானார். மற்றொரு கால்பந்து வீரரான அவரது சகோதரரான ஆண்ட்ரே சில்வாவும் விபத்தில் உயிரிழந்தார்.
04:16 PM (IST) Jul 03
அடிக்கடி வறண்டு, சுருண்டு கொண்டு இருக்கும் தலைமுடியை சரி செய்ய கஷ்டப்படுறீங்களா? தக்காளியை பயன்படுத்தி இப்படி ஹேர் மாஸ்க் போட்டு பாருங்கள். நம்ப முடியாத அளவிற்கு உங்கள் தலைமுடி அழகாகவும், மென்மையாகவும் மாறி விடும். இது விலையும் குறையும்.
04:16 PM (IST) Jul 03
தலாய் லாமா தனது மறுபிறவியை அங்கீகரிக்கும் அதிகாரம் தான் நிறுவிய அறக்கட்டளைக்கு மட்டுமே உண்டு என அறிவித்து, சீனாவின் தலையீட்டை நிராகரித்துள்ளார். சீனா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
04:14 PM (IST) Jul 03
குழந்தைகளுக்கு ஏற்படும் கண் பார்வை பிரச்சனைகளை எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை இங்கு காணலாம்.
04:08 PM (IST) Jul 03
சமீப காலமாக சில பாடி பில்டர்கள் உடற்பயிற்சியின் போது அல்லது அதற்குப் பிறகு திடீரென மரணம் அடைந்து வரும் செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணங்களுக்குப் பின்னால் உள்ள பொதுவான காரணங்கள் மற்றும் தீர்வுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
03:54 PM (IST) Jul 03
மழைக்காலத்தில் வீட்டில் ஈக்களின் தொல்லை அதிகமாக இருந்தால் அவற்றை விரட்டுவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
03:51 PM (IST) Jul 03
கடந்த சில வாரங்களாக சன் டிவி சீரியல்களுக்கு விஜய் டிவி டஃப் கொடுத்து வந்த நிலையில் இந்த வாரம் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது.
03:48 PM (IST) Jul 03
வீட்டில் பகல் நேரங்களில் ஈக்கள் சுற்றிக் கொண்டு பெரும் தொந்தரவாக இருக்கும். இதற்கு எளிய தீர்வு உள்ளது. எவ்வளவோ மருந்துகள் தெளித்தும் ஈக்களை ஒழிக்க முடியாமல் சோர்ந்து விட்டீர்கள் என்றால், ஈக்களை விரட்டும் இந்த ஹோம் கேர் டிப்ஸ் உங்களுக்கானது தான்.
03:42 PM (IST) Jul 03
நெல்லையில் ரம்புட்டான் பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்த 5 வயது சிறுவனின் தொண்டையில் பழத்தின் விதை சிக்கியதால் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
02:46 PM (IST) Jul 03
மகாநதி முதல் சின்ன மருமகள் வரை விஜய் டிவியில் இந்த வார டிஆர்பி பட்டியலில் டாப் 5 இடம்பிடித்த சீரியல்கள் என்னென்ன என்பதை இந்த பட்டியலில் பார்க்கலாம்.