- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- tomato hair mask: தக்காளி ஹேர் மாஸ்க்: வறண்ட, சுருண்ட கூந்தலுக்கு சூப்பரான மேஜிக் டிப்ஸ்
tomato hair mask: தக்காளி ஹேர் மாஸ்க்: வறண்ட, சுருண்ட கூந்தலுக்கு சூப்பரான மேஜிக் டிப்ஸ்
அடிக்கடி வறண்டு, சுருண்டு கொண்டு இருக்கும் தலைமுடியை சரி செய்ய கஷ்டப்படுறீங்களா? தக்காளியை பயன்படுத்தி இப்படி ஹேர் மாஸ்க் போட்டு பாருங்கள். நம்ப முடியாத அளவிற்கு உங்கள் தலைமுடி அழகாகவும், மென்மையாகவும் மாறி விடும். இது விலையும் குறையும்.

தக்காளி ஹேர் மாஸ்கின் நன்மைகள்
தக்காளியில் உள்ள அமிலத்தன்மை, கூந்தலின் சமநிலையை சீராக்கி, கூந்தலை மென்மையாக்கி இயற்கையான பளபளப்பை அளிக்கிறது. தக்காளியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள், உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, முடி வளர்ச்சியை தூண்டும். இதனால் கூந்தல் அடர்த்தியாக வளர உதவும்.
தக்காளியின் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் பொடுகு தொல்லையை குறைக்கும். இதனால் அரிப்பு நீங்கி, உச்சந்தலையின் ஆரோக்கிம் மேம்படும் இதன் மூலம், கூந்தல் உதிர்வை குறைத்து கூந்தல் வலுப்பெறும்.
தக்காளியில் உள்ள நீர்ச்சத்து வறண்ட உச்சந்தலைக்கு தேவையான ஈரப்பதத்தை அளித்து, வறட்சி காரணமாக ஏற்படும் பிரச்சனைகளை குறைக்கும். தக்காளியில் உள்ள சத்துக்கள் கூந்தலுக்கு ஒரு புத்துணர்ச்சியையும், புத்துயிர்ப்பையும் அளிக்கும். இதனால் கூந்தல் ஆரோக்கியமாக காட்சியளிக்கும்.
தக்காளியே ஒரு இயற்கையான கண்டிஷனர் போல செயல்பட்டு, கூந்தலை மென்மையாகவும், சிக்கல் இல்லாமலும் மாற்றும். கடைகளில் விற்கப்படும் ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக, வீட்டில் இருந்தே கிடைக்கும் தக்காளி மாஸ்க் ஒரு பாதுகாப்பான தீர்வாகும்.
தக்காளி ஹேர் மாஸ்க் தயாரித்தல்:
தேவையான பொருட்கள்: நடுத்தர அளவு தக்காளி - 1, ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி, தேன் - 1 தேக்கரண்டி
தயாரிக்கும் முறை : தக்காளியை நன்கு கழுவி, சிறு துண்டுகளாக வெட்டி, மிக்சியில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் மென்மையான கூழாக அரைத்துக் கொள்ளவும். தக்காளி கூழில் உள்ள விதைகளையும், தோலையும் நீக்க ஒரு மெல்லிய துணியைப் பயன்படுத்தி வடிகட்டிக் கொள்ளலாம். இது கூந்தலில் மாஸ்க் எளிதாக பரவ உதவும். வடிகட்டிய தக்காளி கூழுடன் ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். ஒரு மென்மையான பேஸ்ட் போல இருக்கும்.
பயன்படுத்தும் முறை:
கூந்தல் சுத்தமாக இருப்பது முக்கியம். தேவைப்பட்டால், மாஸ்க் போடுவதற்கு முன் கூந்தலை அலசி, சற்று ஈரமாக வைத்துக் கொள்ளலாம். தயாரித்த தக்காளி ஹேர் மாஸ்க்கை உச்சந்தலையிலிருந்து ஆரம்பித்து, கூந்தலின் நுனி வரை நன்கு தடவவும். அனைத்து பகுதிகளிலும் மாஸ்க் பரவுமாறு உறுதிப்படுத்தவும். மாஸ்க் தடவிய பின், விரல் நுனிகளால் உச்சந்தலையை மெதுவாக மசாஜ் செய்யவும். இது இரத்த ஓட்டத்தை தூண்டி, ஊட்டச்சத்துக்கள் உச்சந்தலையில் நன்கு சேர உதவும்.பின்னர் 20-30 நிமிடங்கள் கழித்து மிதமான ஷாம்பூ மற்றும் குளிர்ந்த நீரால் கூந்தலை நன்கு அலசவும். மாஸ்க் முற்றிலும் நீங்கும் வரை அலசுவது முக்கியம். கண்டிஷனர் பயன்படுத்த தேவையில்லை, ஏனெனில் தக்காளி மாஸ்க் கூந்தலை மென்மையாக்கும்.
உணவும் கூந்தல் ஆரோக்கியமும்:
உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு வெளியில் பூசும் மாஸ்க்குகள் மட்டும் போதாது. உள்ளிருந்து ஊட்டச்சத்துக்களை பெறுவதும் மிக முக்கியம். முட்டை, பருப்பு வகைகள், பயறுகள், சிக்கன் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவும். இவை முடி வளர்ச்சிக்கு அவசியம். மேலும், சிட்ரஸ் பழங்கள், கீரைகள், கேரட் போன்ற வைட்டமின் ஏ, சி, இ நிறைந்த உணவுகளை சேர்க்கவும். இவை கூந்தலுக்கு பளபளப்பை அளிக்கும். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும், கூந்தல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
பயனுள்ள குறிப்புகள்:
தினமும் கூந்தலை அலசினால், இயற்கையான எண்ணெய் நீங்கி, கூந்தல் இன்னும் வறண்டு சுருளலாம். வாரத்திற்கு 2-3 முறை அலசுவது போதும். கூந்தலை அலசும்போது முடிந்தவரை குளிர்ந்த நீரை பயன்படுத்தவும். இது கூந்தலின் வெளிப்புற அடுக்கை மூடி, ஈரப்பதத்தை தக்கவைத்து, சுருட்டை குறைக்கும்.
ஒவ்வொரு முறை ஷாம்பு பயன்படுத்திய பிறகும், கூந்தலின் நடுப்பகுதியிலிருந்து நுனி வரை கண்டிஷனர் பயன்படுத்துவது முக்கியம். குளித்த பிறகு கூந்தலை டவல் கொண்டு வேகமாக தேய்க்காமல் மெதுவாக துணியால் ஒற்றி எடுக்கவும் அல்லது பழைய பருத்தி டி-ஷர்ட் கொண்டு கூந்தலை உலர்த்தவும். கூந்தல் ஈரமாக இருக்கும்போது, பெரிய பற்கள் கொண்ட சீப்பைப் பயன்படுத்தி சிக்கலை நீக்கவும்.
வெளியில் செல்லும்போது சூரியன் மற்றும் காற்றின் பாதிப்பிலிருந்து கூந்தலை பாதுகாக்க ஹேர் சீரம் அல்லது லேசான எண்ணெய் பயன்படுத்தலாம்.