- Home
- Sports
- Sports Cricket
- IND vs ENG: இரட்டை சதம் அடித்த முதல் கேப்டன்! ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்த சுப்மன் கில்!
IND vs ENG: இரட்டை சதம் அடித்த முதல் கேப்டன்! ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்த சுப்மன் கில்!
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்த சுப்மன் கில் சேனா நாடுகளில் இரட்டை சதம் அடித்த முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

India vs England 2nd Test: Shubman Gill Double Century Sets Many Records
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டை இழந்து 310 ரன்கள் எடுத்திருந்தது. நிதானமாக விளையாடி சதம் அடித்த கேப்டன் சுப்மன் கில் ரவீந்திர ஜடேஜா களத்தில் இருந்தனர். இன்று 2ம் நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில், இவர்கள் இருவரும் தொடர்ந்து சிறப்பாக விளையாடினார்கள்.
இந்திய அணி சிறப்பான தொடக்கம்
பவுண்டரிகளாக விளாசி துரிதமாக ரன்கள் சேகரித்தனர். நன்றாக விளையாடிய ஜடேஜா அரை சதம் அடித்தார். இதனைத் தொடர்ந்து சுப்மன் கில்லும் 150 ரன்களை கடந்து இங்கிலாந்து டெஸ்ட்டில் 150 ரன்களை கடந்த 2வது இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்தார். உணவு இடைவேளைக்கு முன்பாக ரவீந்திர ஜடேஜா அவுட் ஆனார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் 137 பந்துகளில் 10 பவுண்டரி, 1 சிக்சருடன் 89 ரன்கள் எடுத்து ஜோஷ் டங்கின் பவுன்ஸ் பந்தில் கேட்ச் ஆனார்.
சுப்மன் கில் இரட்டை சதம்
6வது விக்கெட்டுக்கு சுப்மன் கில், ஜடேஜா ஜோடி 200க்கும் அதிகமான ரன்கள் சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் களமிறங்கிய நிலையில், மறுபக்கம் தனது டிரேட் மார்க் ஷாட்களால் பவுண்டரிகள், சோயிப் பஷிர் பந்தில் சிக்சர்களை பறக்க விட்ட சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலாவது இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
நிதானமாகவும், தேவைப்படும்போது அதிரடியாகவும் விளையாடிய சுப்மன் கில் 311 பந்துகளில் 21 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 200 ரன்கள் அடித்தார். இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் முதல் இரட்டை சதம் அடித்த இந்திய கேப்டன், சேனா நாடுகள் முதல் இரட்டை சதம் அடித்த ஆசிய கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்தார்.
சுப்மன் கில்லின் மலைக்க வைக்கும் சாதனை
வாஷிங்டன் சுந்தரும் சூப்பர் பேட்டிங்
மறுமுனையில் வாஷிங்டன் சுந்தரும் கில்லுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய அவர் பின்பு அதிரடியாக பவுண்டரிகள், சிக்சரை விளாசினார். இப்போது வரை இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 503 ரன்கள் எடுத்துள்ளது. பிட்ச் பேட்டிங்குக்கு மிகவும் சாதகமாக இருப்பதால் இந்திய வீரர்கள் சிரமமின்றி ரன்கள் சேர்த்தனர். முதல் டெஸ்ட் போட்டியில் சதம் (137 ரன்கள்) விளாசிய சுப்மன் கில், 2வது டெஸ்ட்டில் இரட்டை சதம் விளாசி இருக்கிறார்.
சுப்மன் கில்லின் சாதனை
சேனா (SENA) நாடுகள் எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் முதல் இரட்டை சதம் அடித்த ஆசிய கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும் இங்கிலாந்து மண்ணில் 23 ஆண்டுகளுக்கு பிறகு இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் சுப்மன் கில் பெற்றுள்ளார்.
சுனில் கவாஸ்கர் சாதனை முறியடிப்பு
கடைசியாக ராகுல் டிராவிட் 2002ம் ஆண்டு இங்கிலாந்தில் இரட்டை சதம் அடித்திருந்தார். மேலும் இங்கிலாந்து மண்ணில் அதிகப்பட்ச தனிநபர் ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்த சுப்மன் கில் (229 ரன்), சுனில் கவாஸ்கரின் (221 ரன்) சாதனையை தகர்த்தெறிந்துள்ளார். ஏற்கெனவே டி20யில் சதமும், ஓடிஐயில் இரட்டை சதமும் அடித்துள்ள சுப்மன் கில் இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.