ஒரு லட்சத்து 84 ஆயிரம் மதிப்புள்ள ஆடை அணிந்து விம்பிள்டன் டென்னிஸ் பார்க்க வந்த பிரியங்கா சோப்ரா ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.
Priyanka Chopra Wearing Rs.1.84 Lakh Outfit To Watch Wimbledon: பாரம்பரியமிக்க விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் கோலாகலமாக நடந்து வருகிறது. டென்னிஸ் ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு பிரபலங்களும் தங்களுக்கு பிடித்தமான வீரர். வீராங்கனைகளின் ஆட்டத்தை நேரில் பார்த்து ரசித்து வருகின்றனர். இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனாஸ் உடன் வந்து விம்பிள்டன் போட்டியை நேரில் கண்டு ரசித்தார்.
விம்பிள்டன் டென்னிஸ் பார்க்க வந்த பிரியங்கா சோப்ரா
இதனால் பிரியங்கா சோப்ராவின் புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், அவர் அணிந்து வந்திருந்த உடை இப்போது பேசுபொருளாகியுள்ளது. மற்ற டென்னிஸ் போட்டிகள் போன்று அல்லாமல் விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் வெள்ளை நிற உடை அணிந்து விளையாடுவது பாரம்பரியமாகும். பிரியங்கா சோப்ராவும் இதேபோன்று வெள்ளை நிற உடை அணிந்து வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கவர்ந்திழுத்த பிரியங்கா சோப்ரா
பிரியாங்காவின் உடை பேசுபொருளானதற்கு முக்கிய காரணம் அதன் விலை. அதாவது பிரியாங்கா அணிந்திருந்த உடையின் விலை ரூ.1,84,540 என்று தகவல்கள் கூறுகின்றன. Eldred Cotton Pique Day Dress என்று அழைக்கப்படும் இந்த உடையை பிரபல வடிவமைப்பாளரான ரால்ப் லாரன் வடிவமைப்பு செய்துள்ளார். பிரியங்கா சோப்ரா நிக் ஜோனாஸ் உடையையும் ரால்ப் லாரன் தான் வடிவமைத்து இருந்தார்.
கண்ணைக் கவரும் ஆடை
பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த ஆடை கழுத்தில் காலரும், கை இல்லாத வடிவமைப்பிலும் இருந்தது. பின் பகுதியில் பேக்லெஸ் டிசைன் மற்றும் இடுப்புப் பகுதியில் இறுக்கமாகவும், கீழ் பகுதியில் A-லைன் மாடலில் விரிந்தும் இருந்தது. மேலும் பக்கவாட்டில் பாக்கெட்டுகள், பட்டுப் போன்ற மென்மையான கோடுகள் மற்றும் முத்து போன்ற பெத்தான்கள் என மிக அழகாக இந்த ஆடை வடிவமைக்கப்பட்டு இருந்தது.
இணையத்தில் வைரல்
இந்த அழகான ஆடையில் போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா விலை உயர்ந்த பில்கரி நகைகள், வெள்ளை நிற ஸ்ட்ராபி சாண்டல்ஸ் மற்றும் ஜாக்ஸ் மேரி மேக் கிராஸ்னர் சன்கிளாஸஸ் அணிந்திருந்தார். நிக் ஜோனஸை பொறுத்தவரை நீல நிற கோட் மற்றும் க்ரீம் நிற பேண்ட் அணிந்து மற்றவர்களை வசீகரித்தார். இப்போது பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பரவி வருகின்றன.


