House Fly Control Tips : வெறும் 2 கற்பூரம்! ஈக்கள் தொல்லையே இனி இருக்காது
மழைக்காலத்தில் வீட்டில் ஈக்களின் தொல்லை அதிகமாக இருந்தால் அவற்றை விரட்டுவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

மழைகாலத்தில் வீட்டிலிருந்து ஈக்களை விரட்ட
மழைகாலத்தில் ஈக்கள் தொல்லை ஏற்படுவது சகஜம்தான். ஆனால் இது நமக்கு எவ்வளவு எரிச்சலூட்டும் என்பது அனைவருக்கும் தெரியும். எவ்வளவுதான் வீட்டை சுத்தமாக வைத்தாலும் வீட்டில் ஈக்களின் தொல்லை அதிகமாகவே இருக்கும். ஈக்கள் நம்மை கடிக்காத ஆனால் அதை பல நோய்களை உண்டாக்கும் கிருமிகளை பரப்பும். ஏனெனில் இதை குப்பைகள் மற்றும் திறந்தவெளி கிடக்கும் மலங்கள் மீது திரிந்து விட்டு வீட்டுக்குள் உணவு பொருட்கள் மொய்க்கும். இதை நினைத்தாலே அருவருப்பு வந்துவிடும். இதன் மூலமாக தான் காலரை டைபாய்டு வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. எனவே வீட்டிலிருந்து ஈக்களை நொடியில் விரட்ட சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்று இங்கு பார்க்கலாம்.
உப்பு மற்றும் வினிகர் கலந்து நீர் :
நீங்கள் வீடு துடைக்கும் தண்ணீரில் உப்பு மற்றும் வினிகர் கலந்து வீட்டை நன்றாக துடைக்க வேண்டும் . வினிகரிலிருந்து வரும் கடுமையான வாசனை மற்றும் உப்பின் சுத்திகரிப்பு பண்புகள் ஈக்களை வீட்டை விட்டு விரட்டி விடும். இந்த குறிப்பு ஈக்களை வீட்டிலிருந்து விரட்டுவது மட்டுமல்ல, கண்ணுக்கு தெரியாத பாக்டீரியாக்கள் பூச்சிகளில் இருந்து வீட்டை பாதுகாக்கும்.
கற்பூரம் மற்றும் பிரியாணி இலை :
கற்பூரம் மற்றும் பிரியாணி இலையில் இருந்து வரும் கடுமையான வாசனை ஈக்குளுக்கு பிடிக்காது. எனவே நீங்கள் கற்பூரத்தை எரிக்கும் போது அதனுடன் பிரியாணி இலையையும் சேர்த்து எரித்து அதன் புகையை வீடு முழுவதும் பரப்பவும். இவை இரண்டிலும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், அவை வீட்டிலிருந்து ஈக்களை விரட்டுவது மட்டுமல்லாமல், தொற்று நோய்களிலிருந்தும் உங்களை பாதுகாக்கும்.
அத்தியாவசிய எண்ணெய்கள் :
லாவண்டர், லெமன் கிராஸ், பெப்பர்மின்ட், யூகலிப்டஸ் போன்ற அத்தியாவாசியை எண்ணெய்கள் வீட்டிலிருந்து ஈக்களை விரட்டிக்க உதவும். இந்த எண்ணெய்களில் இருந்து வரும் மென்மையான நறுமணம் ஈக்களுக்கு பிடிக்காது என்பதால், இதை உங்களது வீட்டின் பெட்ரூம், ஹால், சமையலறை கொஞ்சம் எல்லா இடங்களிலும் தெரிவித்தால் ஈக்கள் வீட்டிற்குள் வராது.
முக்கிய குறிப்பு :
- வீட்டிற்குள் ஈக்கள் வராமல் தடுக்க முதல் மற்றும் முக்கியமான விஷயம் வீட்டை சுத்தமாக வைப்பதாகும். வீட்டை சுத்தமாக வைத்தால் ஈக்கள் தொல்லை இருக்காது.
- ஈக்கள் வீட்டிற்குள் வருவதை தவிர்க்க வீட்டில் உள்ள குப்பை தொட்டியை மூடி வைப்பது தான் நல்லது. முக்கியமாக அதை அவ்வப்போது காலியாக வைக்கவும்.
- அழுக்கு பாத்திரங்களை உடனடியாக கழுவி விடுங்கள். உணவு பொருட்களை எப்போதுமே மூடி வைக்கவும்.
- ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் கொசு திரைகளை போடவும். வீட்டை சுத்தி தண்ணீர் தேங்கி இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் அழுக்கு நீரில் தான் ஈக்கள் இனப்பெருக்கம் செய்யும்.