Reels Addict : அதிகமாக ரீல்ஸ் பார்ப்பீர்களா? உங்களுக்கு இந்த ஆபத்துக்கள் ஏற்படலாம்
இன்றைய காலகட்டத்தில், ரீல்ஸ் பார்ப்பது என்பது பலரின் பொழுதுபோக்காக மாறிவிட்டது. அளவுக்கு அதிகமாக ரீல்ஸ் பார்ப்பதால் பல்வேறு உடல்நல மற்றும் மனநல பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ரீல்ஸ் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பார்க்கலாம்.

What happens when you watch too many reels
அதிகமாக ரீல்ஸ் பார்க்கும் குழந்தைகளுக்கு Attention Deficit Hyperactivity Disorder என்கிற குறைபாட்டிற்கான அறிகுறிகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு கவனம் செலுத்தும் ஆற்றல், நினைவாற்றல் குறைவதாக கூறப்பட்டுள்ளது. மொபைல் திரையை அதிக நேரம் பார்ப்பதால் கண்கள் வறண்டு போதல், கண் எரிச்சல், தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இரவில் அதிக நேரம் ரீல்ஸ் பார்ப்பதால் தூக்கமின்மை ஏற்படும். இதன் காரணமாக கண் கருவளையம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வு
தொடர்ந்து ரீல்ஸ் பார்ப்பதால் மன அழுத்தம், பதட்டம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ரீல்ஸில் காட்டப்படும் வாழ்க்கை முறையை பார்த்து, தன்னுடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டு பலரும் கற்பனை உலகில் வாழ்கின்றனர். இது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. இரவில் அதிக நேரம் ரீல்ஸ் பார்ப்பதால் தூக்கமின்மை ஏற்படும். தூக்கமின்மை காரணமாக உடல் சோர்வு, மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இது பிற்காலத்தில் பல உடல்நலக் கேடுகளை உருவாக்கலாம்.
உடல் இயக்கம் குறைந்து போதல்
அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து ரீல்ஸ் பார்ப்பதால் உடல் பருமன், முதுகு வலி, கழுத்து வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். உடல் இயக்கம் குறைந்து உடல் பருமன் அதிகரிப்பதால் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். தொடர்ந்து ரீல்ஸ் பார்ப்பதால் சமூக உறவுகளில் பாதிப்பு ஏற்படும். நேரத்தை வீணாக்குவதால் உற்பத்தித் திறன் குறையும். தொடர்ந்து சமூக ஊடகங்களில் மூழ்கி இருப்பதால், தனிமை மற்றும் மனச்சோர்வு ஏற்படலாம்.
ரீல்ஸ் பார்ப்பதை குறைப்பதற்கான வழிகள்
ரீல்ஸ் பார்ப்பதற்கு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி கொள்ளுங்கள். ரீல்ஸ் பார்க்கும் போது அடிக்கடி கண்களுக்கு ஓய்வு கொடுங்கள். இரவில் தூங்குவதற்கு முன் ரீல்ஸ் பார்ப்பதை தவிர்க்கவும். உடற்பயிற்சி, யோகா போன்ற ஆரோக்கியமான பழக்கங்களை மேற்கொள்ளுங்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள்.
முன்னுதாரணமாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்
ரீல்ஸ் பார்ப்பதை குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். வருங்கால சந்ததியை நல்ல முறையில் வளர்க்க வேண்டுமானால் முதலில் நீங்கள் உதாரணமாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் பிறருக்கும் பகிருங்கள்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

