- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- இயற்கையா முகம் பளபளக்கனுமா? இரவு தூங்கும் முன் இந்த பானங்களில் '1 குடிங்க
இயற்கையா முகம் பளபளக்கனுமா? இரவு தூங்கும் முன் இந்த பானங்களில் '1 குடிங்க
உங்களது முகம் இயற்கையாகவே பளபளக்க கீழே கொடுக்கப்பட்ட பானங்களில் ஒன்றை தினமும் இரவு தூங்கும் முன் குடியுங்கள்.

முகம் பளபளக்க இரவில் குடிக்க வேண்டிய பானங்கள்
முகம் அழகாகவும், பளபளப்பாகவும் இருக்க யாருடன் விரும்ப மாட்டார்கள். அதுவும் குறிப்பாக பெண்கள் பற்றி சொல்லவா வேண்டும்? இதற்காக பல விளைவு இருந்த கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவை சருமத்திற்கு நன்மைக்கு பதிலாக தீங்கு தான் விளைவிக்கும். இத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தினமும் இரவு தூங்கும் முன் ஒரு சில பானங்களை குடித்து வந்தால் நிச்சயம் உங்களது முகம் இயற்கையாகவே பளபளக்கும். இது தவிர முகத்தில் சுருக்கங்கள் வருவதையும் தடுக்க உதவும். அவை என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சீரக நீர் :
சீரக நீரானது கொழுப்பை குறைக்க உதவுகிறது. இது செரிமான பண்புகளையும் கொண்டுள்ளன. இந்த நீரை தினமும் குடித்து வந்தால் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும் மற்றும் பல சரும பிரச்சனைகளை குறைக்கும்.
இலவங்கப்பட்டை நீர்:
தினமும் இரவு தூங்கும் முன் இலவங்கப்பட்டை நீரை குடியுங்கள். இந்த நீரானது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். இதுதவிர உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் ஃபோலேட்டை வழங்கும். இவை ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் இந்த நீரானது சருமம் தொடர்பான பிரச்சனைகளை குறைத்து, முகத்தை பளபளப்பாக வைக்க உதவும்.
வெந்தய நீர் :
இரவு தூங்கும் முன் வெந்தய நீரை குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தப்படும் மற்றும் கொழுப்பை கரைத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும். முக்கியமாக இந்த நீரானது உங்களது சருமத்தை இயற்கையாகவே இளமையாகவும், அழகாகவும், பளபளப்பாகவும் வைக்கும்.
சோம்பு நீர் :
இரவு தூங்கும் முன் சோம்பு நீரை தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த நீரானது வயிற்றை குளிர்விக்கும், நல்ல தூக்கத்தை வழங்கும் மற்றும் முகத்திற்கு இயற்கையான பளபளப்பை கொடுக்கும்.