வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. அனைத்து இலவச சலுகைகளும் தொடரும் என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

11:08 PM (IST) Jun 08
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.
10:09 PM (IST) Jun 08
கடந்த காலங்களில், பெண்கள் 14-15 வயதுக்குள் திருமணம் செய்துகொள்வதும், 17 வயதிற்குள் குழந்தை பெறுவதும் இயல்பானது என்று குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
09:26 PM (IST) Jun 08
அரபிக்கடலில் நிலை கொண்டிருக்கும் பிபர்ஜோய் என்ற 'மிக தீவிரமான புயல் அடுத்த மூன்று நாட்களில் தீவிரம் அடைய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
09:15 PM (IST) Jun 08
புதுச்சேரியின் புதிய டிஜிபியாக ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வரும் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
07:35 PM (IST) Jun 08
தனது பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.
06:35 PM (IST) Jun 08
இனியும் விவசாயிகளை ஏமாற்றிக் கொண்டிருக்காமல் உடனடியாக தமிழக அரசு மணிமுத்தாறு அணையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
06:35 PM (IST) Jun 08
மத்தியப்பிரதேசத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டிரை வயது சிறுமி 55 மணி நேரத்துக்குப் பின்னர் மீட்கப்பட்ட சிறுமி உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
04:41 PM (IST) Jun 08
கேரளாவில் உள்ள அரசு பள்ளிகளில் வேலை நாட்கள் 198ல் இருந்து 205 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
02:23 PM (IST) Jun 08
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான வருண் தேஜ், நடிகை லாவண்யா திரிபாதியை காதலிப்பதை உறுதி செய்து நிச்சயதார்த்த தேதியையும் அறிவித்துள்ளார்.
01:35 PM (IST) Jun 08
திருப்பதி கோவில் வளாகத்தில் நடிகை கீர்த்தி சனோன்-ஐ கட்டிப்பிடித்து கிஸ் அடித்த ஆதிபுருஷ் இயக்குனரை, அக்கோயிலின் தலைமை அர்ச்சகர் சாடி உள்ளார்.
12:51 PM (IST) Jun 08
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் விலகிய மணிமேகலை தற்போது மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்து இருக்கிறார்.
12:37 PM (IST) Jun 08
அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஓரிரு சிறு குறைகளும் சரி செய்யப்பட்டு அறிக்கை வழங்கப்பட்டது. தேசிய மருத்துவ ஆணைய குழுவினர் நேற்று கல்லூரிகளுக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தனர். தற்போது சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரிகளுக்கான அங்கீகார ரத்து சான்று திரும்பப் பெறப்பட்டு அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது என்றார்.
12:08 PM (IST) Jun 08
தமிழ் சினிமாவில் வருகிற ஜூன் 9-ந் தேதி டக்கர், போர் தொழில், விமானம், பெல் ஆகிய நான்கு திரைப்படங்கள் தியேட்டரிலும், கஸ்டடி திரைப்படம் ஓடிடியிலும் ரிலீஸ் ஆக உள்ளன.
11:26 AM (IST) Jun 08
ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்திற்கு திடீர் விசிட் அடித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தயாரிப்பாளர் எம்.சரவணன், எம்.எஸ்.குஹன் ஆகியோருடன் அதனை சுற்றிப்பார்த்தார்.
10:41 AM (IST) Jun 08
சென்னை மாநகராட்சியில் துணை ஆணையராக இருந்த என்னை, பட்டியலினத்தை சார்ந்தவன் என்பதால் ககன்தீப் சிங் பேடி துன்புறுத்தியதாக ஈரோடு கூடுதல் ஆட்சியர் மணீஸ் நரவனே பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
10:30 AM (IST) Jun 08
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு பெங்களூருவில் திருமணம் நடந்தது.
10:28 AM (IST) Jun 08
தென்கிழக்கு மற்றும் அதனை ஓட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள பிபோர்ஜோய் மிக தீவிர புயலாக வலுவடைந்துள்ளது. இதனால், கேரளா மற்றும் மகாராஷ்ராவில் மழை தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10:03 AM (IST) Jun 08
கவுதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் டிரைலர் அப்டேட் வெளியாகி உள்ளது.
09:36 AM (IST) Jun 08
வேலூர் சத்துவாச்சேரியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் கடந்த 2 ஆண்டுகளாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள பால் நூதன முறையில் திருடப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.
09:22 AM (IST) Jun 08
இன்ஸ்டாகிராமில் விஷ்ணுகாந்த் வெளியிட்ட ஸ்கிரீன்ஷாட்கள் அனைத்தும் எடிட் செய்யப்பட்டது எனக் கூறிய சம்யுக்தா, அவரை காம காட்டேரி என சாடி உள்ளார்.
08:38 AM (IST) Jun 08
எப்பேற்பட்ட கேடுகெட்ட பண வெறி பிடித்த தி.மு.க மூடர்கள் தமிழகத்தை ஆட்சி செய்கின்றனர் என்பதை தமிழர்கள் உணரவில்லை என்றால் தமிழகம் வருங்காலத்தில் வாழ தகுதியற்ற இடமாக மாறி விடும் என எஸ்.ஜி.சூர்யா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
08:31 AM (IST) Jun 08
தூர்தர்ஷனில் பணியாற்றிய இந்தியாவின் முதல் பெண் ஆங்கில செய்தி வாசிப்பாளரான கீதாஞ்சலி ஐயர் நேற்று காலமானார். பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த கீதாஞ்சலி, நடைபயிற்சி முடித்து வீடு திரும்பிய பின் அப்படியே சரிந்து விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
07:50 AM (IST) Jun 08
பிரதமர் மோடி 9 ஆண்டுகளாக சுற்றாத ஊரே கிடையாது. போகாத நாடே கிடையாது. மோடி வெளிநாடுகளுக்கு சென்று என்ன பெற்று வந்தார் என ஆளுநர் கேட்கிறாரோ என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாட்டில் அதிமுக அழிந்து வருகிறது.
07:49 AM (IST) Jun 08
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கோடை விடுமுறை காரணாமாக தள்ளிவைக்கப்பட்ட நிலையில், ஒரு மாதத்திற்குப் பின் இன்று விசாரணை நடைபெறுகிறது.