நிர்மலா சீதாராமன் மகளுக்கு திருமணம்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மகளுக்கு பெங்களூருவில் திருமணம் நடந்தது.
 

 Nirmala Sitharaman daughter Vangmayi get marriedin bengaluru

மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த  தலைவருமான நிர்மலா சீதாராமன் மகள் வாங்மயிக்கு பெங்களூருவில் திருமணம் நடந்தது. பெங்களூருவில் உள்ள தனியார் ஹோட்டலில் வாங்மயி, மனமகன் ப்ரதீக் ஆகியோருக்கு எளிய முறையில் நடைபெற்ற இந்த திருமணத்துக்கு, நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

உடுப்பி அதமாரு மடத்தின் விஸ்வபிரிய தீர்த்த சுவாமிகள், ஈசபிரிய தீர்த்த சுவாமிகள் மணமக்களை வாழ்த்தி, கிருஷ்ணர் கோவில் பிரசாதம் வழங்கி ஆசீர்வாதம் செய்தனர். வழக்கமாக அரசியல் தலைவர்கள் பல கோடி ரூபாய் செலவு செய்து தங்களது பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிலையில், மத்திய நிதியமைச்சரது மகளின் திருமணம் எளிய முறையில் நடைபெற்றது கவனம் ஈர்த்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமன், 2014 முதல் 2016 வரை ஆந்திர மாநிலத்தில் இருந்தும், அதற்கு பிறகு 2016ஆம் ஆண்டு முதல் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். மேலும் 2014 முதல் 2017 ஆம் ஆண்டு வரை மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சராகவும், 2017-19 வரை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்த அவர், 2019 ஆம் ஆண்டு முதல் மத்திய நிதியமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும்? இந்திய வானிலை மையம் சொன்ன தகவல்..

நிர்மலா சீதாராமனின் கணவர் பரகல பிரபாகர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இந்த தம்பதிக்கு வாங்மயி என்ற ஒரு மகள் இருக்கிறார். அவருக்குத்தான் தற்போது எளிய முறையில் ப்ரதீக் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. வாங்மயி தற்போது ஒரு தேசிய செய்தித்தாளின் மூத்த நிருபராக பணிபுரிவதாக தெரிகிறது. கலை, வாழ்க்கை முறை தொழில்நுட்பம் மற்றும் புத்தகங்கள் பற்றி அவர் எழுதுவதாகவும், அவர் இந்தியாவிலும் வெளிநாட்டில் உள்ள பல செய்தி நிறுவனங்களுக்கும் அவர் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.

டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்ற வாங்மயி, பின்னர், அமெரிக்காவில் இதழியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios