தூர்தர்ஷனில் பணியாற்றிய இந்தியாவின் முதல் பெண் ஆங்கில செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி ஐயர் காலமானார்
இந்தியாவின் முதல் பெண் ஆங்கில செய்தி வாசிப்பாளரான கீதாஞ்சலி ஐயர் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தூர்தர்ஷனில் பணியாற்றிய இந்தியாவின் முதல் பெண் ஆங்கில செய்தி வாசிப்பாளரான கீதாஞ்சலி ஐயர் நேற்று காலமானார். பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த கீதாஞ்சலி, நடைபயிற்சி முடித்து வீடு திரும்பிய பின் அப்படியே சரிந்து விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கொல்கத்தாவின் லொரேட்டோ கல்லூரியில் பட்டம் பெற்ற கீதாஞ்சலி ஐயர் 1971-ம் ஆண்டு தூர்தர்ஷனில் சேர்ந்தார்.
அங்கு சிறப்பாக பணியாற்றிய கீதாஞ்சலி, நான்கு முறை சிறந்த தொகுப்பாளர் விருதைப் பெற்றார். 1989 இல் சிறந்த பெண்களுக்கான இந்திரா காந்தி பிரியதர்ஷினி விருதையும் வென்றார். செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி, தேசிய நாடகப் பள்ளியில் டிப்ளமோ பட்டம் பெற்றவர் ஆவார். அதுமட்டுமின்றி பல அச்சு விளம்பரங்களிலும் பிரபலமான முகமாக இருந்தார், மேலும் ஸ்ரீதர் ஷிர்சாகரின் "கந்தான்" என்கிற தொலைக்காட்சி நாடகத்திலும் நடித்துள்ளார் கீதாஞ்சலி.
இதையும் படியுங்கள்.... ஒடிசா ரயில் சோகம்: ரூ. 17 லட்சம் இழப்பீட்டை பெற உயிருடன் இருக்கும் கணவரை இறந்துவிட்டதாக அறிவித்த பெண்..
கீதாஞ்சலி ஐயரின் மறைவுக்கு பிரபலங்கள் பலர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரின் மறைவால் அவரது குடும்பத்தினரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர். மறைந்த செய்தி வாசிப்பாளர் கீதாஞ்சலி ஐயருக்கு ஒரு மகன் மற்றும் பல்லவி ஐயர் என்கிற மகளும் உள்ளார். இவரும் ஒரு விருது பெற்ற பத்திரிகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஒடிசா ரயில் விபத்துக்கான உண்மையான காரணத்தை மூடி மறைக்க மத்திய அரசு முயற்சி.. மம்தா பகீர் குற்றச்சாட்டு