Asianet News TamilAsianet News Tamil

சவுதியின் பட்டத்து இளவரசருடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி.. உலகளாவிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார்.

Prime Minister Modi had a telephone conversation with the Crown Prince of Saudi Arabia.. Consultation on global issues
Author
First Published Jun 8, 2023, 11:03 PM IST

பிரதமர் நரேந்திர மோடி இன்று சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் முகமது பின் சல்மான் பின் அல் சவுத் உடன் தொலைபேசியில் உரையாடினார். இரு தலைவர்களும் இருதரப்பு ஒத்துழைப்பின் பல விஷயங்களை மதிப்பாய்வு செய்தனர் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு பலதரப்பு மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை இரு நாட்டு தலைவர்களும் பரிமாறிக் கொண்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார மந்த நிலையில் தவிக்கும் யூரோ மண்டலம்.. ஐரோப்பிய நாடுகளின் நிலைக்கு என்ன காரணம்?

மேலும் “ ஏப்ரல் 2023-ல் போரினால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து ஜித்தா வழியாக இந்திய நாட்டு குடிமக்களை வெளியேற்றும் போது சவுதி அரேபியா சிறந்த முறை ஆதரவு அளித்ததற்காக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். வரவிருக்கும் ஹஜ் யாத்திரைக்கு அவர் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், தற்போதைய ஜி 20 தலைமையின் ஒரு பகுதியாக இந்தியாவின் முயற்சிகளுக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்தார். மேலும் தனது இந்தியா வருகையை ஆர்வமுடன் எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் முகமது பின் சல்மான் தெரிவித்தார். இதை தொடர்ந்து  இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்” என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபர்ஜோய் புயல் மேலும் தீவிரமடைந்து, அடுத்த 3 நாட்களுக்கு அதிதீவிரமாக இருக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை..

Follow Us:
Download App:
  • android
  • ios