MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரீ-எண்ட்ரி கொடுத்த மணிமேகலை... ஆனா கோமாளியா இல்ல!

மீண்டும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரீ-எண்ட்ரி கொடுத்த மணிமேகலை... ஆனா கோமாளியா இல்ல!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன் விலகிய மணிமேகலை தற்போது மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்து இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 08 2023, 12:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பேமஸ் ஆனது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல் 10 குக்குகளுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. டாப் 5 இடத்தை பிடிக்க போட்டியாளர்கள் கடுமையாக போட்டி போட்டு வரும் நிலையில், கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் வெற்றிபெற்று முதல் ஆளாக டாப் 5-க்குள் நுழைந்தார் சிவாங்கி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

கடந்த சீசன் வரை சமையல்னா என்னவென்றே தெரியாமல் கோமாளியாக இருந்து வந்த சிவாங்கி, கடந்த ஆறு மாதங்களில் கடுமையாக பயிற்சி எடுத்து இந்த சீசனில் குக் ஆக களமிறங்கினார். ஆரம்பம் முதலே சமையலில் அசத்தி வந்த சிவாங்கி, தற்போது பைனல் வரை முன்னேறி உள்ளது நடுவர்களுக்கே வியப்பாக இருந்தது. இப்படி பல்வேறு ஆச்சர்யங்கள் அடங்கிய இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசனில் சில அதிர்ச்சி தரக்கூடிய விஷயங்களும் நடந்துள்ளன.

இதையும் படியுங்கள்... டக்கர் முதல் கஸ்டடி வரை... இந்த வார தியேட்டர் மற்றும் ஓடிடி வெளியீடுகள் என்னென்ன? - முழு லிஸ்ட் இதோ

35

அப்படி ஒரு விஷயம் தான் மணிமேகலை பாதியிலேயே வெளியேறியது. குக் வித் கோமாளியில் ரசிகர்களின் மனம்கவர்ந்த கோமாளியாக வலம் வந்தவர் மணிமேகலை. கடந்த மூன்று சீசன்களாக கலக்கி வந்த மணிமேகலை, இந்த சீசனிலும் முதல் சில வாரங்கள் கோமாளியாக கலந்துகொண்டார். ஆனால் திடீரென இடையே இந்நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி அளித்தார் மணிமேகலை. அவர் எதற்காக விலகினார் என்பது புரியாத புதிராகவே இருந்தது.

45

விலகியதற்கான காரணத்தை அவர் தெரிவிக்காததால், அவர் கர்ப்பமாக இருப்பதனால் விலகினார் என்றும், அவருக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் விலகினார் என்றும் பலவிதமான செய்திகள் உலா வரத் தொடங்கின. இந்நிலையில்,  தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சிக்கு திடீரென ரீ-எண்ட்ரி கொடுத்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார் மணிமேகலை.

55

அவர் இந்த வார குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது எடுத்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதன்மூலம் மணிமேகலை இந்த வாரம் கோமாளியாக அல்லாமல் தொகுப்பாளராக களமிறங்கி உள்ளார் என்பது தெரிகிறது. போர் தொழில் படக்குழு சார்பில் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இந்த வார எபிசோடில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டுள்ளனர். இந்த எபிசோடு ஒளிபரப்பாகும்போதாவது தான் திடீரென விலகியதற்கான காரணத்தை மணிமேகலை வெளியிடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே! ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தித்தை சுற்றிப்பார்த்து மெர்சலான ரஜினிகாந்த்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Recommended image2
Siragadikka Aasai : சிந்தாமணியின் முகத்திரையை கிழித்த பைனான்சியர்.... முத்துவின் பிளான் சக்சஸ்
Recommended image3
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved