டக்கர் முதல் கஸ்டடி வரை... இந்த வார தியேட்டர் மற்றும் ஓடிடி வெளியீடுகள் என்னென்ன? - முழு லிஸ்ட் இதோ
தமிழ் சினிமாவில் வருகிற ஜூன் 9-ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ள திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தியேட்டர் ரிலீஸ் படங்கள்
டக்கர்
சித்தார்த் நடித்துள்ள டக்கர் திரைப்படம் ஜூன் 9-ந் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் கப்பல் என்கிற திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். டக்கர் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து உள்ளார்.
போர் தொழில்
சரத்குமார் மற்றும் அசோத் செல்வன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் போர் தொழில். விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்கி உள்ளார். சமீர் நாயர், தீபக் சேகல், முகேஷ் மெஹ்தா, சாரதி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படம் ஜூன் 9-ந் தேதி திரைகாண உள்ளது. நிகிலா விமல் நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து உள்ளார்.
இதையும் படியுங்கள்... ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே! ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தித்தை சுற்றிப்பார்த்து மெர்சலான ரஜினிகாந்த்
விமானம்
சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் விமானம். தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகி உள்ள இப்படத்தை சிவபிரசாத் யானலா இயக்கி உள்ளார். அனசுயா பரத்வாஜ், மீரா ஜாஸ்மின், மொட்டை ராஜேந்திரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படமும் ஜூன் 9-ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
பெல்
ஜோக்கர் படத்தில் நடித்த குரு சோமசுந்தரம் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் பெல். இதில் அவருடன் ஸ்ரீதர் மாஸ்டரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெங்கட் புவன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்திற்கு ராபர்ட் இசையமைத்து இருக்கிறார். இப்படமும் ஜூன் 9-ந் தேதி திரைகாண உள்ளது.
டிரான்ஸ்பார்மர்ஸ்
டிரான்ஸ்பார்மர்ஸ் ரைஸ் ஆஃப் தி பீஸ்ட் என்கிற ஹாலிவுட் திரைப்படமும் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஜூன் 9-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படம் 3டி-யில் வெளியாகிறது.
ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்
ஓடிடியை பொறுத்தவரை வருகிற ஜூன் 9-ந் தேதி கஸ்டடி படம் ரிலீஸ் ஆக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி நடித்த இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இதுதவிர நெட்பிளிக்ஸில் அடைமழைக்காலம் என்கிற படமும், ஆஹா ஓடிடி தளத்தில் மாலைநேர மல்லிப்பூ என்கிற திரைப்படமும் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... டபுள் ட்ரீட் கன்பார்ம்! விஜய் பிறந்தநாளன்று சர்ப்ரைஸாக வரவுள்ள லியோ & தளபதி 68 அப்டேட்ஸ் என்னென்ன? முழு விவரம்