இனியும் விவசாயிகளை ஏமாற்றாமல், உடனடியாக தமிழக அரசு இதை செய்ய வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்

இனியும் விவசாயிகளை ஏமாற்றிக் கொண்டிருக்காமல் உடனடியாக தமிழக அரசு மணிமுத்தாறு அணையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

Tamil Nadu government should do this immediately instead of cheating the farmers - Annamalai insists

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கார் பருவ சாகுபடிக்காக, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் 1-ம் தேதி 40 அடி, பெருங்கால் பாசன கால்வாய் திறந்துவிடப்படும். பெருங்கால் பாசனம் மூலம் சுற்றுப்பகுதியில் உள்ள 7 கிராமங்களில் சுமார் 300 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பகுதிகள் இதனால் பாசன வசதி பெறும்.

மணிமுத்தாறு அணையின் மொத்த கொள்ளளவு 118 அடியாகும். இத்தனை ஆண்டுகளும் அணையில் 40 அடி தண்ணீர் இருந்தாலே, பாசந்த்திற்கு தண்ணீர் திறந்துவிடுவது தான் வழக்கம். ஏனெனில் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மணிமுத்தாறு அணை மட்டும் தான் விவசாயத்திற்கான நீர் ஆதாரமாக உள்ளது.

யார் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் தமிழகம் தலை சிறந்த மாநிலம்.!ஆளுநருக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்

இந்நிலையில் கடந்த ஜூன் 1-ம் தேதி திறக்கப்பட வேண்டிய மணிமுத்தாறு அணை, ஒருவார கால தாமதம் ஆகியும் திறந்துவிடாமல், தென்மேற்கு பருவமழை தொடங்கு வரை அணையை திறந்துவிடாமல் இருக்கலாம் என்ற எண்ணத்தில் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது திமுக அரசு.

பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடாமல், விவசாயிகளுக்கு சரியான தகவலும் அளிக்காமல், பிரச்சனைக்கான தீர்வையும் வழங்காமல் தள்ளிப்போட பார்க்கிறது. விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல், தமிழக அரசும் பாராமுகமாக இருப்பதால் மிகவும் வேதனையில் இருக்கும் விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்ட உள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால், தமிழக அரசோ, அதிகாரிகளோ இதுகுறித்தும் எந்த நடவடிக்கைகளும் எடுத்தாக தெரியவில்லை.

மின் கட்டண உயர்வால் சிறு குறு நிறுவனங்கள் மூடியாச்சு..! இப்போ மீண்டும் மின் கட்டண உயர்வா.? அன்புமணி ஆவேசம்

மணிமுத்தாறு மட்டுமல்ல, பாபநாசம் அணையை சுற்றியுள்ள பல கிராம விவசாயிகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ரூ.143 உயர்த்தி குவிண்டாலுக்கு ரூ.2183ஆக அறிவித்துள்ளார். ஆனால் தேர்தல் வாக்குறுதியில், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2500 ஆக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அதுகுறித்து எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதுமட்டுமல்லாது மணிமுத்தாறு – பாபநாசம் அணைகளை இணைப்போம் என்று 2021-ல் வாக்குறுதி கொடுத்த சபாநாயகர் அப்பாவு, அதற்காக எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

இனியும் விவசாயிகளை ஏமாற்றிக் கொண்டிருக்காமல் உடனடியாக தமிழக அரசு, விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுவதில் உள்ள பிரச்சனைகளுக்கான தீர்வை வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளை போராடும் நிலைக்கு தள்ள வேண்டாம் என்றும் தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி என்றாலே அது இருட்டாட்சி, காட்டாட்சி.! மின்வெட்டால் இருளில் மூழ்கிய தமிழகம் - சீறும் ஓபிஎஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios