இதெல்லாம் ஓட்டல் ரூம்ல பண்ணுங்க... கீர்த்தி சனோனை கிஸ் அடித்த ஆதிபுருஷ் இயக்குனரை வெளுத்துவாங்கிய பிரபலம்
திருப்பதி கோவில் வளாகத்தில் நடிகை கீர்த்தி சனோனை கட்டிப்பிடித்து கிஸ் அடித்த ஆதிபுருஷ் இயக்குனரை, அக்கோயிலின் தலைமை அர்ச்சகர் சாடி உள்ளார்.
பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தை ஓம் ராவத் இயக்கி உள்ளார். ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ராமனாகவும், அவருக்கு ஜோடியாக சீதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கீர்த்தி சனோனும் நடித்துள்ளார். ஆதிபுருஷ் திரைப்படம் வருகிற ஜூன் 16-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது.
ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அப்படத்தின் புரமோஷன் பணிகளும் ஒரு பக்கம் ஜோராக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் 6-ந் தேதி திருப்பதியில் அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக திருப்பதி வந்திருந்த நடிகர் பிரபாஸ் ஜூன் 6-ந் தேதி அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து ஜூன் 7-ந் தேதி ஆதிபுருஷ் படத்தின் இயக்குனர் ஓம் ராவத்தும், நடிகை கீர்த்தி சனோனும் சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படியுங்கள்... திருப்பதி கோவில் வளாகத்தில் கீர்த்தி சனோனை திடீரென கட்டிபிடித்து கிஸ் அடித்த ஆதிபுருஷ் இயக்குனர்- வைரல் வீடியோ
திருப்பதி கோவிலில் நேற்று காலை சாமி தரிசனம் செய்த பின்னர், நடிகை கீர்த்தி சனோனை வழியனுப்ப வந்த இயக்குனர் ஓம் ராவத், அவரை கட்டிப்பிடித்து கன்னத்தில் திடீரென முத்தமிட்டார். ஆதிபுருஷ் இயக்குனரின் இந்த செயல் அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏன் நடிகை கீர்த்தி சனோனே அவர் முத்தம் கொடுத்ததைப் பார்த்து சற்று ஜெர்க் ஆனார். ஓம் ராவத் முத்தம் கொடுத்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி பரவி பேசுபொருள் ஆனது.
இதைப்பார்த்த நெட்டிசன்கள், கோவில் வளாகத்தில் இப்படி செய்யலாமா என்று இயக்குனர் ஓம் ராவத்தை சாடி வந்தனர். இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து திருப்பதி கோவிலின் தலைமை அர்ச்சகர் சி.எஸ்.ரங்கராஜன் கருத்து தெரிவித்துள்ளார். ஆதி புருஷ் இயக்குனரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், இதையெல்லாம் ஓட்டல் ரூம்ல போய் பண்ணுங்க என்று சரமாரியாக சாடியதோடு, உங்களின் இந்த நடத்தை ராமாயணத்தையும் சீதா தேவியையும் அவமதிக்கும் வகையில் உள்ளதாக வெளுத்துவாங்கி உள்ளார்.
இதையும் படியுங்கள்... கீர்த்தி சனோனை அருகில் வைத்துக்கொண்டே திருமணம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிரபாஸ்