Published : Jun 06, 2023, 06:59 AM ISTUpdated : Jun 09, 2023, 10:00 AM IST

Tamil News Live highlights: தமிழகத்தின் வளர்ச்சி ஒருவருக்கு புரியவில்லை-முதல்வர் ஸ்டாலின்

சுருக்கம்

தலை நிமிர்ந்து கொள்ள தமிழ்நாட்டின் வளர்ச்சி மாநிலத்தின் உயர் பொறுப்பில் இருப்பவருக்கு தெரியவில்லை. ஆளுநர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

 Tamil News Live highlights: தமிழகத்தின் வளர்ச்சி ஒருவருக்கு புரியவில்லை-முதல்வர் ஸ்டாலின்

12:11 AM (IST) Jun 07

IRCTC : இந்திய ரயில்வேயின் பாரத் கவுரவ் ஆன்மீக யாத்திரை ரயில் பற்றி தெரியுமா.?

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் சிறப்பு ரயில்கள், கல்வி சுற்றுலா, விமான பயண திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

11:52 PM (IST) Jun 06

குறைந்த விலையில் சூப்பரான 5 ஸ்மார்ட்வாட்ச்.. அதிரடி ஆஃபரை மிஸ் பண்ணிடாதீங்க !!

முன்னணி ஸ்மார்ட்வாட்ச் பிராண்டுகளின் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் அமேசானில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

11:13 PM (IST) Jun 06

கர்நாடக சட்டமேலவை இடைத்தேர்தல்: ஜூன் 30ல் தேர்தல் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கர்நாடகாவில் காலியாக உள்ள 3 எம்எல்சி என்று அழைக்கப்படும் சட்டமேலவைக்கு ஜூன் 30ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது.

10:44 PM (IST) Jun 06

மின் கட்டணத்தை அதிகரிக்காதீங்க.? கூட்டணி கட்சியின் திடீர் முட்டுக்கட்டை - திமுக ஷாக்

ஒராண்டுக்குள் இருமுறை கட்டண உயர்வு செய்வது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று திமுவுக்கு அதன் கூட்டணி கட்சி கோரிக்கை விடுதிருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.

10:18 PM (IST) Jun 06

ராமர் கோவில், அனுமான் பற்றி அவதூறாக பேசிய காங்கிரஸ்.. கொதித்தெழுந்த பாஜக - என்ன நடந்தது?

காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவு தலைவருமான சாம் பிட்ரோடா பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

09:48 PM (IST) Jun 06

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2-வது முறை உரையாற்ற உள்ள பிரதமர் மோடி!

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக உரையாற்றுவது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அமைய உள்ளது.

09:21 PM (IST) Jun 06

90களில் ஆரம்பம்.. 2023ல் தொடர்கிறது.! ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு உள்ள தொடர்பு என்ன?

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடந்த மிக மோசமான மூன்று ரயில் விபத்தை அடுத்து, ரயில்வே துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

08:51 PM (IST) Jun 06

தமிழகத்தின் வளர்ச்சி ஒருவருக்கு புரியவில்லை.. ஆளுநர் ஆர்.என் ரவிக்கு பதிலடி கொடுத்த முதல்வர் மு.க ஸ்டாலின்

தலை நிமிர்ந்து கொள்ள தமிழ்நாட்டின் வளர்ச்சி மாநிலத்தின் உயர் பொறுப்பில் இருப்பவருக்கு தெரியவில்லை. ஆளுநர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

08:31 PM (IST) Jun 06

திங்கள்கிழமையில் தான் கடுமையான மாரடைப்பு ஏற்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? புதிய ஆய்வில் தகவல்

10,528 நோயாளிகளிடமிருந்து தரவை ஆய்வு செய்ததில், வேலை வாரத்தின் தொடக்கத்தில் மிக மோசமான மாரடைப்பு ஏற்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

07:40 PM (IST) Jun 06

இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!

பெங்களூரு - சென்னைக்கு ரயிலில் 2 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் பயணம் செய்வதற்கு ஏற்ப திட்டத்தை தெற்கு ரயில்வே உருவாக்கி உள்ளது.

07:10 PM (IST) Jun 06

மதவாத பிரச்சினையை மணிப்பூரில் கொளுத்திப் போட்ட பாஜக.. சசிகாந்த் செந்தில் சொன்ன பரபரப்பு தகவல்

பட்டியல் பழங்குடியினர் பிரிவின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற மேதி சமூகத்தின் கோரிக்கைக்கு பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் கடந்த மே 3ம் தேதி வன்முறை வெடித்தது.

07:01 PM (IST) Jun 06

காயம் இல்லை, ரத்தப்போக்கு இல்லை.. கோர ரயில் விபத்தில் 40 பேர் பலி.. கோரமண்டல் ரயிலில் என்ன நடந்தது?

யஸ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ஒடிசாவின் பாலசோரில் தடம் புரண்ட கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது மோதியதால் மேலே இருக்கும் மின்சார வயர்கள் அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

06:23 PM (IST) Jun 06

பீர் பாட்டில்களுடன் கவிழ்ந்த வேன்.. அள்ளிச்சென்ற மதுப்பிரியர்கள் - வைரல் வீடியோ !!

ஆந்திரா மாவட்டத்தில் பீர் பாட்டில்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

05:21 PM (IST) Jun 06

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. 150 கேமராக்கள்.! இனி பொது இடங்களில் குப்பையை கொட்டினால் அவ்வளவுதான்

சென்னை மாநகரில் கூவம், அடையாறு கரையோரங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க சென்னை மாநகராட்சி சூப்பரான நடவடிக்கை ஒன்றை கையில் எடுத்துள்ளது.

05:19 PM (IST) Jun 06

அடுத்த 24 மணி நேரத்தில் அரபிக்கடலில் உருவாகும் 'Biparjoy' புயல்; இந்த பெயரை வைத்தது எந்த நாடு தெரியுமா?

அரபிக்கடலில் நிலை கொண்டுள்ள, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

04:50 PM (IST) Jun 06

iPhone 11 வெறும் ரூ.8,950க்கு கிடைக்கிறது! இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காது - முழு விபரம் !!

ஆப்பிள் ஐபோன் 11 இன்னும் பல ஈ-காமர்ஸ் தளங்களில் வாங்குவதற்கு கிடைக்கிறது. ஆப்பிள் ஐபோன் 11 ரூ.32,049 தள்ளுபடிக்குப் பிறகு பிளிப்கார்ட் விற்பனையில் வெறும் ரூ.8,950க்கு கிடைக்கிறது.

04:22 PM (IST) Jun 06

100க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களில் இருந்து 10-அடுக்கு மர கட்டிடம் எப்படி தப்பித்தது? விவரம் உள்ளே

ஷேக் டேபிள் என்ற நிலநடுக்க சோதனை கருவியில் சோதனை செய்யப்பட்ட உலகின் மிக உயரமான கட்டிடம் இதுவாகும்.

03:44 PM (IST) Jun 06

தோனியின் வெறித்தனமான ரசிகனாக இருந்தும் CSK-விற்கு தீம் மியூசிக் போட மறுத்த அனிருத் - ஏன் தெரியுமா?

ஐபிஎல் தொடரில் விளையாடும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இசையமைப்பாளர் அனிருத் தீம் மியூசிக் போட மறுத்தது ஏன் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

03:32 PM (IST) Jun 06

ராணுவ கூட்டணி: தெளிவுபடுத்திய இந்தியா!

இந்தியா எந்த ராணுவக் கூட்டணியிலும் இல்லை என அமெரிக்காவுடனான உறவுகள் குறித்த சீனாவின் சந்தேகங்களுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது

03:31 PM (IST) Jun 06

ஐ.ஆர்.சி.டி.சி மறுப்பு

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக காங்கிரஸ் கூறிய தகவலை ஐஆர்சிடிசி மறுத்துள்ளது

03:31 PM (IST) Jun 06

பெண்கள் இலவச பேருந்து பயணம்: யாரெல்லாம் பயணிக்கலாம்?

கர்நாடக மாநிலத்தில் பெண்கள் இலவச பேருந்து திட்டம் தொடர்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன

03:30 PM (IST) Jun 06

மின்கட்டணம் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

கர்நாடகாவில் மின்கட்டணம் யூனிட்டுக்கு ரூ.2.89 உயர்த்தப்பட்டுள்ளது, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

01:25 PM (IST) Jun 06

watch : திரில்லர் ஸ்டோரியில் தெறி பேபி ஆக மிரட்டும் சுனைனா - வைரலாகும் ரெஜினா டிரைலர் இதோ

டொமின் டி சில்வா இயக்கத்தில் நடிகை சுனைனா கதையின் நாயகியாக நடித்துள்ள ரெஜினா திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

11:25 AM (IST) Jun 06

‘விடாமுயற்சி’யில் திடீர் டுவிஸ்ட்... அஜித்தை அடிக்க மாஸ்டர் பட வில்லனை களமிறக்கும் மகிழ் திருமேனி

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க உள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

11:16 AM (IST) Jun 06

தயக்கம் காட்டும் சசிகலா

அதிமுக பல்வேறு அணிகளாக பிரிந்து நிற்கும் நிலையில், அவர்களை ஒருங்கிணைக்கும் புள்ளியாக தஞ்சாவூர் திருமணம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது

11:11 AM (IST) Jun 06

பொறியியல் படிப்பு - ரேண்டம் எண் வெளியீடு

தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. 

11:08 AM (IST) Jun 06

வரும் 9ம் தேதி டெல்டா மாவட்டம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற 9ம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேட்டூர் அணையை வரும் 12ம் தேதி முதல்வர் திறந்து வைக்க உள்ள நிலையில் ஆய்வு  மேற்கொள்கிறார். 

11:06 AM (IST) Jun 06

Today Gold Rate in Chennai : ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

தங்கம் விலை

 

11:05 AM (IST) Jun 06

பட்டப்பகலில் திமுக நிர்வாகியும் சினிமா பட டைரக்டர் நட்சத்திர ஹோட்டலில் வைத்து வெட்டிப்படுகொலை..!

சினிமா பட இயக்குநரும், திமுக நிர்வாகியுமான செல்வராஜ் தனது பிறந்த நாளில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

படுகொலை

 

10:56 AM (IST) Jun 06

திருப்பதி கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த பிரபாஸ்... தொடர் தோல்வியில் இருந்து மீள வேண்டி பிரார்த்தனை

ஆதிபுருஷ் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அப்படத்தின் நாயகன் பிரபாஸ் இன்று அதிகாலை திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

08:48 AM (IST) Jun 06

அஜித் வீட்டு மருமகள் ஆகப்போகிறாரா யாஷிகா? மகளின் காதல் விவகாரம் குறித்து உண்மையை போட்டுடைத்த தாய்

நடிகர் அஜித்தின் மச்சினன் ரிச்சர்ட் ரிஷியை நடிகை யாஷிகா ஆனந்த் காதலித்து வருவதாக சர்ச்சை எழுந்த நிலையில், அதுகுறித்து அவரது தாய் விளக்கம் அளித்துள்ளார்.

08:30 AM (IST) Jun 06

காஷ்மீர் சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்தவர் பலி

காஷ்மீர் சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த ஜனார்த்தனம் (67) என்பவர் உயிரிழந்தார். நேற்று அவர் விடுதியில் குதிரை சவாரி சென்றபோது, பலத்த காற்று வீசியது. அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு மரம் சாய்ந்து விழுந்தது. அது குதிரையில் பயணம் செய்த ஜனார்த்தனம் மீது விழுந்தது. இதில் குதிரையுடன், சேர்த்து ஜனார்த்தனமும் நசுங்கி உயிரிழந்தார்.

08:21 AM (IST) Jun 06

நுரையீரல் அழுகி செத்தவங்க குடும்பம் மூலம் கிடைக்குற காசுல தான் அரசே இயங்குதுனு சொல்ல வெட்கபடணும்.. வேல்முருகன்

மதுவால் மது அருந்துவர்களுக்கு மட்டுமல்லாமல் அவரை சார்ந்திருப்பவர்களின் வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்படும் என்பது மாணவி விஷ்ணுபிரியாவின் மரணத்தின் வாயிலாக மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

வேல்முருகன்

07:33 AM (IST) Jun 06

ஒடிசா ரயில் விபத்து.. திமுக ஸ்டிக்கரை ஒட்ட முயற்சிக்கிறார் உதயநிதி.. நடிகை கஸ்தூரி விமர்சனம்..!

ஒடிசா ரயில் விபத்து மீட்புப்பணிகள் குறித்து ஒட்ட முடியாத தங்களது திமுக ஸ்டிக்கரை ஒட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முயற்சிக்கிறார் என நடிகை கஸ்தூரி கிண்டல் செய்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

 

07:05 AM (IST) Jun 06

முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிரான தேர்தல் வழக்கு! 7 ஆண்டுகளுக்கு பிறகு ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

மாஃபா பாண்டியராஜன்

 

07:04 AM (IST) Jun 06

சென்னையில் 381வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் 377வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 


More Trending News