ஒடிசா ரயில் விபத்து.. திமுக ஸ்டிக்கரை ஒட்ட முயற்சிக்கிறார் உதயநிதி.. நடிகை கஸ்தூரி விமர்சனம்..!
அமைச்சர் உதயநிதி, தங்களுக்கு முன்பாகவே ஒடிசா அரசு தமிழர்களை மீட்டு விமான மூலம் அனுப்பி வைத்து விட்டது என்று கூறியிருந்தார். இந்நிலையில், ஒட்டமுடியாத தங்களது கட்சியின் ஸ்டிக்கரை உதயநிதி ஸ்டாலின் ஒட்ட முயற்சிக்கிறார் என கஸ்தூரி கூறியுள்ளார்.
ஒடிசா ரயில் விபத்து மீட்புப்பணிகள் குறித்து ஒட்ட முடியாத தங்களது திமுக ஸ்டிக்கரை ஒட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முயற்சிக்கிறார் என நடிகை கஸ்தூரி கிண்டல் செய்துள்ளார்.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் ரயில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால், சுமார் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் சரிந்து அடுத்திருந்த ரயில் தடத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது வந்த அதிவிரைவு ரயிலான யஷ்வந்த்பூர் - ஹவுரா ரயில் கவிழ்ந்து கிடந்த கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது மோதியது. இதில் ஹவுரா ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு சரிந்தன. இந்த 2 பயணிகள் ரயிலுடன், மூன்றாவதாக வந்த சரக்கு ரயில் ஒன்றும் விபத்துக்குள்ளானது.
இதையும் படிங்க;- தஞ்சையில் 7ஆம் தேதி ஒன்று கூடும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன்..! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி
இந்த விபத்தில் 275-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும்,1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் சிக்கியவர்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களை அடையாளம் காணவும், அவர்களை தமிழகம் அழைத்து வரவும், முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றனர். ஆனால், பிரதமர் வருகையைக் காரணம்காட்டி அதிகாரிகள் மறுப்பு தெரிவித்ததால் அந்த பகுதிகளைப் பார்வையிட முடியவில்லை. இதனையடுத்து, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை மட்டும் சந்தித்து விட்டு தமிழகம் திரும்பினார்.
இதையும் படிங்க;- ஒடிசா ரயில் விபத்து.! அமைச்சர் உடனடியாக பதவி விலகனும்... பிரதமர் மோடிக்கு எதிராக சீறும் சுப்பிரமணியசாமி
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி, தங்களுக்கு முன்பாகவே ஒடிசா அரசு தமிழர்களை மீட்டு விமான மூலம் அனுப்பி வைத்து விட்டது என்று கூறியிருந்தார். இந்நிலையில், ஒட்டமுடியாத தங்களது கட்சியின் ஸ்டிக்கரை உதயநிதி ஸ்டாலின் ஒட்ட முயற்சிக்கிறார் என கஸ்தூரி கூறியுள்ளார்.
இதுகுறித்து நடிகை கஸ்தூரி டுவிட்டர் பக்கத்தில்;- சூழ்நிலைகளுக்கு ஏற்ப அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னை மாற்றிக் கொள்கிறார். ரயில் விபத்து மீட்புப்பணிகள் குறித்து ஒட்டமுடியாத தங்களது கட்சியின் ஸ்டிக்கரை ஒட்ட முயற்சிக்கிறார் என அவர் விமர்சனம் செய்துள்ளார்.