மின் கட்டணத்தை அதிகரிக்காதீங்க.? கூட்டணி கட்சியின் திடீர் முட்டுக்கட்டை - திமுக ஷாக்

ஒராண்டுக்குள் இருமுறை கட்டண உயர்வு செய்வது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று திமுவுக்கு அதன் கூட்டணி கட்சி கோரிக்கை விடுதிருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை உண்டாக்கி இருக்கிறது.

Do not increase electricity bill sudden impasse of the alliance party dmk shock

ஒராண்டுக்குள் இரு முறை கட்டண உயர்வு செய்வது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு மின் வாரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேறு வழிகள் குறித்து ஆராய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மின்வாரியம் வரும் ஜூலை முதல் மின் கட்டணத்தை 4. 70 சதவீதம் உயர்த்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மின் வாரியத்தில் நிலவும் நிதி நெருக்கடியை காரணம் காட்டிதான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கடடணங்கள் உயர்த்தப்பட்டன.

Do not increase electricity bill sudden impasse of the alliance party dmk shock

அப்போது ஆண்டுதோறும் மின் கட்டணம் உயர்த்தப்படும் என வெளியான செய்தியை அரசு தரப்பில் மறுத்து வந்தனர். ஆனால், இன்று அது உண்மையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒராண்டுக்குள் இருமுறை கட்டண உயர்வு செய்வது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு மின் வாரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேறு வழிகள் குறித்து ஆராய வேண்டும்.

இதையும் படிங்க..இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!

Do not increase electricity bill sudden impasse of the alliance party dmk shock

குறிப்பாக, தனியாரிடம் கொள்முதல் செய்யும் விலை குறைப்பு உள்ளிட்ட வழிகள் குறித்து பரிசீலிக்க வேண்டும். அதனை தவிர்த்து மின்வாரிய கட்டண உயர்வு முன்மொழிவை ஏற்கக் கூடாது, அனுமதிக்கக் கூடாது என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..iPhone 11 வெறும் ரூ.8,950க்கு கிடைக்கிறது! இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காது - முழு விபரம் !!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios