Asianet News TamilAsianet News Tamil

வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2-வது முறை உரையாற்ற உள்ள பிரதமர் மோடி!

அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி இரண்டாவது முறை உரையாற்ற உள்ளது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக அமைய உள்ளது.

A historic event.. Prime Minister Modi is going to address the US Parliament for the 2nd time!
Author
First Published Jun 6, 2023, 9:30 PM IST

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2-வது முறையாக உரையாற்றுவது இதுவே முதன்முறையாகும். உலகளவில், ஒரு ஒரு நாட்டின் அரசாங்கத்தின் தலைவராக, மூன்று முறை செய்த இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றி உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பிரதமர் மோடி இரண்டாவது இடத்தில் உள்ளார். பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட இந்த கவுரவம், அமெரிக்காவில் அவருக்கு இருதரப்பு மரியாதையையும் ஆதரவையும் காட்டுகிறது.

பிரதமர் மோடி, ஜூன் 22-ம் தேதி அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தின் போது அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் இந்த அழைப்பை மரியாதையுடன் ஏற்றுக்கொள்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

 

பாஜகவுக்கு ஆதரவு: அஸ்வினி வைஷ்ணவுக்கு தேவகவுடா புகழாரம்!

அவரின் பதிவில் “கருணையான அழைப்புக்கு நன்றி. அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் மீண்டும் ஒருமுறை உரையாற்றுவதை ஏற்றுக்கொள்வதற்கும், எதிர்நோக்குவதற்கும் நான் பெருமைப்படுகிறேன்” என்று பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் "பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள், வலுவான மக்களிடையே மக்கள் உடனான உறவுகள் மற்றும் உலகளாவிய அமைதி மற்றும் செழிப்புக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட அமெரிக்காவுடனான எங்கள் விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மை குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே அமெரிக்க காங்கிரஸ் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை மற்றும் அமெரிக்க செனட்டின் இரு கட்சித் தலைமையின் சார்பாக, ஜூன் 22 வியாழன் அன்று நடைபெறும் காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற உங்களை (பிரதமர் மோடி) அழைப்பது எங்களுக்கு மரியாதை” என்று தெரிவித்துள்ளனர். 

மேலும் அந்த அறிக்கையில் " 7 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் நீங்கள் (பிரதமர் மோடி) ஆற்றிய வரலாற்று சிறப்புமிக்க உரை நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நட்பை ஆழமாக்கியது" என்று கூறப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவது இது இரண்டாவது முறையாகும், 7 ஆண்டுகளுக்கு முன்பு, முதல் முறையாக 2016 இல் மோடி உரையாற்றினார். அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய ஐந்தாவது இந்தியப் பிரதமர் மோடி ஆவார். இதற்கு முன்பு மன்மோகன் சிங் ( 2005), அடல் பிஹாரி வாஜ்பாய் (2000), பிவி நரசிம்ம ராவ் (1994) மற்றும் ராஜீவ் காந்தி (1985) ஆகியோர் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றி உள்ளனர். வின்ஸ்டண்ட் சர்ச்சில், நெல்சன் மண்டேலா போன்ற சில தலைவர்களுக்கு பிறகு பிரதமர் மோடிக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா ரயில் விபத்தின் பலி எண்ணிக்கையை மீண்டும் திருத்திய அரசு.. மொத்தம் எத்தனை பேர் இறந்துள்ளனர்?

Follow Us:
Download App:
  • android
  • ios