IRCTC : இந்திய ரயில்வேயின் பாரத் கவுரவ் ஆன்மீக யாத்திரை ரயில் பற்றி தெரியுமா.?
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் சார்பில் சிறப்பு ரயில்கள், கல்வி சுற்றுலா, விமான பயண திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பாரத் கவுரவ் சிறப்பு சுற்றுலா ரயில் வருகிற ஜூலை 1ஆம் தேதி கொச்சுவேலியில் இருந்து நாகர்கோவில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை, எழும்பூர் ரெயில் நிலையங்களில் நின்று பயணிகளை ஏற்றிச்செல்லும்.
இந்த பயணம் ஹைதராபாத், ஆக்ரா, மதுரா, வைஷ்ணவி தேவி, அமிர்தசரஸ், புதுடெல்லி ஆகிய இடங்களை பயணிகளுக்கு சுற்றிக்காட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 11 பகல், 12 இரவுகள் ஸ்லீப்பர் வகுப்பறையில் ஒரு நபருக்கு ரூ. 23 ஆயிரத்து 350, ஏ. சி. வகுப்பறையில் ஒரு நபருக்கு ரூ. 40 ஆயிரத்து 350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
சார்தாம் யாத்திரைக்கு வருகிற 28ஆம் தேதி சென்னையிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, ரிஷிகேஷ், ஹரித்துவார் ஆகிய இடங்களுக்கு ரயில் பயணம் செல்கிறது. 13 நாட்கள் பயணத்துக்கு ரூ. 61 ஆயிரத்து 500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. காசி, கயா சிறப்பு யாத்திரைக்கு வருகிற 16ஆம் தேதி திருச்சியில் இருந்து விமானம் மூலம் கயா, காசி, அலகாபாத் அயோத்தியா செல்கிறது.
7 நாட்கள் பயணத்துக்கு ஒரு நபருக்கு கட்டணமாக ரூ. 42 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு www. irctctourism. com இணையதளத்திலோ அல்லது 9003140680/682, 8287932122, 8287932070 என்ற மொபைல் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் எனவும் ரவிக்குமார் கூறியுள்ளார். வட இந்தியாவில் உள்ள ஆன்மீக தலங்களை சுற்றிப்பார்க்க விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!