Asianet News TamilAsianet News Tamil

திங்கள்கிழமையில் தான் கடுமையான மாரடைப்பு ஏற்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? புதிய ஆய்வில் தகவல்

10,528 நோயாளிகளிடமிருந்து தரவை ஆய்வு செய்ததில், வேலை வாரத்தின் தொடக்கத்தில் மிக மோசமான மாரடைப்பு ஏற்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

Did you know that the most serious heart attacks occur on Mondays? Information in a new study
Author
First Published Jun 6, 2023, 8:22 PM IST

மிகக் கடுமையான மாரடைப்பு திங்கட்கிழமையில் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பெல்ஃபாஸ்ட் ஹெல்த் அண்ட் சோஷியல் கேர் டிரஸ்ட் (Belfast Health and Social Care Trust) மற்றும் அயர்லாந்தில் உள்ள ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்களின் (the Royal College of Surgeons) மருத்துவர்களின் கூற்றுப்படி, 10,528 நோயாளிகளிடமிருந்து தரவை ஆய்வு செய்ததில், வேலை வாரத்தின் தொடக்கத்தில் மிக மோசமான மாரடைப்பு ஏற்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

ஜூன் 4 ஆம் தேதி பிரிட்டிஷ் கார்டியோவாஸ்குலர் சொசைட்டியில் ஆய்வை வழங்கிய மருத்துவர்கள், ஒரு பெரிய கரோனரி தமனி முழுவதுமாகத் தடுக்கப்படும்போது ஏற்படும் ST-பிரிவு மாரடைப்பு (STEMI) பற்றி ஆய்வு செய்தனர். 

அயர்லாந்தில் 2013 மற்றும் 2018 க்கு இடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் STEMI மாரடைப்பு விகிதங்களில் அதிகரிப்பு, வாரத்தின் தொடக்கத்தில் திங்களன்று அதிக விகிதங்களுடன் காணப்பட்டது. அதே போல் எதிர்பார்த்ததை விட அதிகமான STEMI மாரடைப்பு விகிதங்கள் ஞாயிற்றுக்கிழமையும் இருந்தன.

எனினும் இந்த " திங்கள்" நிகழ்வு ஏன் ஏற்படுகிறது என்பதை இதுவரை விஞ்ஞானிகளால் முழுமையாக விளக்க முடியவில்லை. முந்தைய ஆய்வுகள் திங்கட்கிழமை அன்று மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் அவை உடலின் தூக்கம் அல்லது விழித்திருக்கும் சுழற்சி ஆகியவற்றுடன் தொடர்புடையவை என்றும் கூறுகின்றன.

இங்கிலாந்தில், STEMI மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 30,000 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க அவர்களுக்கு அவசர மதிப்பீடு மற்றும் சிகிச்சை தேவைப்படுகிறது, மேலும் இது பொதுவாக அவசரகால ஆஞ்சியோபிளாஸ்டி மூலம் செய்யப்படுகிறது, இது தடுக்கப்பட்ட கரோனரி தமனியை மீண்டும் திறக்கும் செயல்முறையாகும்.

பிரிட்டிஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனின் (BHF) மருத்துவ இயக்குநர் பேராசிரியர் சர் நிலேஷ் சமானி, இதுகுறித்து பேசிய போது "இந்த கொடிய நிலையை மருத்துவர்களுக்கு நன்றாகப் புரிந்துகொள்ள உதவ முடியும், எனவே எதிர்காலத்தில் இன்னும் அதிகமான உயிர்களைக் காப்பாற்ற முடியும்" என்று தெரிவித்தார்.

ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய இருதயநோய் நிபுணர் டாக்டர் ஜாக் லாஃபன் பேசிய போது "வேலை வாரத்தின் தொடக்கத்திற்கும் STEMI இன் நிகழ்வுக்கும் இடையே வலுவான புள்ளிவிவர தொடர்பு இருப்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகள், மாரடைப்பிலிருந்து வேறுபட்ட கார்டியாக் அரெஸ்ட் நிகழ்வுகளும், திங்கட்கிழமையில் அதிகம் நிகழும் என்று கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios