Published : Jun 04, 2023, 06:49 AM ISTUpdated : Jun 06, 2023, 09:14 AM IST

Tamil News Live highlights : ஒடிசா ரயில் விபத்து - சிபிஐ விசாரிக்க பரிந்துரை

சுருக்கம்

  Tamil News Live highlights கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தார் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

  Tamil News Live highlights : ஒடிசா ரயில் விபத்து - சிபிஐ விசாரிக்க பரிந்துரை

12:12 AM (IST) Jun 05

சூப்பர் செய்தி.. ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் பிள்ளைகளின் கல்வி செலவை ஏற்கும் அதானி & சேவாக்

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் பிள்ளைகளின் கல்வி செலவை பிரபல தொழிலதிபர் அதானி மற்றும் கிரிக்கெட் வீரர் சேவாக் ஏற்பதாக அறிவித்துள்ளனர்.

11:35 PM (IST) Jun 04

தமிழ்நாட்டை சேர்ந்த 8 பயணிகளும் நலமுடன் இருக்கிறார்கள்.. குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு

தமிழ்நாட்டைச் சேர்ந்த எட்டு பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதை ரயில்வே நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

10:44 PM (IST) Jun 04

ரயில் விபத்து குறித்து உண்மையை தான் சொன்னேன்.. பாஜகவை வெளுத்து வாங்கிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

ரயில்வே அமைச்சர் என் பக்கத்தில் இருந்தார். நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன். நான் தவறாக எதுவும் சொல்லவில்லை.' ஒடிசா ரயில் விபத்து குறித்து மம்தா பானர்ஜி இன்று விளக்கம் அளித்தார்.

10:25 PM (IST) Jun 04

திமுக வாக்குறுதி என்ன ஆச்சு.. காவல்துறையில் நிர்வாக முட்டுக்கட்டை.. ஓங்கி அடித்த பாமக நிறுவனர் ராமதாஸ்

காவல்துறை சார் ஆய்வாளர் பணிக்கான பதவி உயர் காவலர்களுக்கு மறுக்கக் கூடாது என்றும், துறை சார்ந்த சிறிய தண்டனைகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

09:13 PM (IST) Jun 04

கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்தது.. பீகாரில் அதிர்ச்சி சம்பவம் - வைரல் வீடியோ

பீகாரில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி இன்று இடிந்து விழுந்தது. பாலம் இடிந்து விழும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

08:29 PM (IST) Jun 04

சென்னை வழியாக செல்லும் 16 ரயில்கள் ரத்து - எவையெல்லாம் தெரியுமா?

ஒடிசா ரயில் விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்க்கலாம்.

08:01 PM (IST) Jun 04

இந்தியாவையே உலுக்கிய ரயில் விபத்து.. சிபிஐ விசாரிக்க பரிந்துரை - ரயில்வே துறை அமைச்சர் தகவல் !!

07:03 PM (IST) Jun 04

நல்ல செய்தி வரும்.. ஒடிசாவில் இருந்து சென்னை திரும்பிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி !

'தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் பாதிக்கப்படவில்லை' என்று ஒடிசா ரயில் விபத்து குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

06:39 PM (IST) Jun 04

ஒடிசா ரயில் சோகத்திற்கு ‘முக்கிய’ காரணம் இதுதான்.! ரயில்வே ஊழியர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் | முழு பின்னணி

ஒடிசா பாலசோர் ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். எலக்ட்ரானிக் இன்டர்லாக் என்றால் என்ன, அது எப்படி பழுதடையும் என்பதை ரயில்வே நிபுணர்கள் விளக்கியுள்ளனர்.

06:10 PM (IST) Jun 04

ஒடிசா ரயில் விபத்து எப்படி நடந்தது? ரயில்வே வாரியம் விளக்கம்!

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில்கள் விபத்து தொடர்பாக செய்தியாளர் சந்திப்பை நடத்திய ரயில்வே வாரியம், சிக்னலில் சில கோளாறுகள் இருந்ததாக தெரிவித்துள்ளது

06:09 PM (IST) Jun 04

கோரமண்டல் ரயில் விபத்து: மூன்று தமிழர்கள் விவரம் தெரிந்தது!

விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த தமிழர்களில், 8 பேரின் நிலை தெரியாமல் இருந்த நிலையில், அதில் 3 பேர் பாதுகாப்பாக உள்ளதாக தமிழ்நாடு அரசு தகவல் 

05:40 PM (IST) Jun 04

கோவையை பெருமைப்படுத்தும் வகையில் மகனின் காதணி விழாவை நடத்திய பெற்றோர் !!

கோவையை பெருமைப்படுத்தும் விதமாக காதணி விழாவிற்கு கோவையின் அடையாள சின்னங்களை சீர்வரிசையாக எடுத்துக் கொண்டு, சாரட்டு வண்டியில் சிறுவன் அழைத்துவரப்பட்டது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

05:26 PM (IST) Jun 04

பெருமாள் கோவிலில் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதா? அன்று தஞ்சாவூர்! இன்று சென்னையா? கொதிக்கும் ஆர்வலர்கள்

இந்து மத கோவிலில் சிக்கன் பிரியாணி சாப்பிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

04:44 PM (IST) Jun 04

அடிக்குற வெயிலுக்கு ஜில்லுனு ஒரு அப்டேட் கொடுத்த வானிலை மையம் - 11 மாவட்டங்களில் கனமழை.!!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

03:47 PM (IST) Jun 04

புதுவையில் லால் சலாம் ஷூட்டிங்... ரஜினியை பார்க்க படையெடுத்து வந்த ரசிகர்கள் - ஸ்தம்பித்து போன பாண்டிச்சேரி

பாண்டிச்சேரியில் உள்ள ரேடியர் மில் பகுதியில் லால் சலாம் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதை அறிந்த ரசிகர்கள் அங்கு ரஜினியை காண ஆவலோடு குவிந்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று இரவு ரஜினி ஷூட்டிங் முடிந்து வெளியே வந்தபோது அவரது காரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.

02:54 PM (IST) Jun 04

திருமணம் ஆகாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்துவந்த பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்

39 வயதாகியும் திருமணம் ஆகாமல் வாழ்ந்து வந்த பிரபல கன்னட நடிகர் நிதின் கோபி மாரடைப்பால் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

01:43 PM (IST) Jun 04

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கோர விபத்து... 20 ஆண்டுகளுக்கு முன்பே திரையில் காட்டிய கமலின் ‘அன்பே சிவம்’

ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயில் குறித்து 20 ஆண்டுகளுக்கு முன்பே கமலின் அன்பே சிவம் படத்தில் காட்சி இடம்பெற்றுள்ளது வைரலாகி வருகிறது. 

01:04 PM (IST) Jun 04

ஒடிசா ரயில் விபத்தில் காணாமல் போன தமிழர்கள் 8 பேர் யார்..? விவரங்களை வெளியிட்ட தமிழக அரசு

கோரமண்டல் ரயிலில் பயணம் செய்த தமிழக பயணிகளின் இதுவரை தயாரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள 127 நபர்களை மாநில அவசரகால கொள்ளப்பட்டதில் 119 நபர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரியவந்துள்ளது. மீதமுள்ள 8 நபர்களின் விவரங்கள் கிடைத்திருந்த நிலையில் அவர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லையென தமிழக அரசு தெரிவித்துள்ளது .

12:59 PM (IST) Jun 04

கவச் இயந்திரம்... பாதுகாப்பில் அலட்சியம்: சு.வெங்கடேசன் எம்.பி., காட்டம்!

இந்திய ரயில்வேயில் 13,000 இன்ஜின்களில் வெறும் 65 க்கும் மட்டுமே கவச் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மதுரை எம்.பி., சு.வெங்கடேசன், இந்த ஓராண்டில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்

12:58 PM (IST) Jun 04

உளவுத்துறை தலைவர்கள் ரகசிய சந்திப்பு

உலகின் முக்கிய உளவுத்துறை தலைவர்கள் ரகசிய சந்திப்பு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூரில் நடைபெற்ற ஷங்கிரி-லா பாதுகாப்புக் கூட்டத்திற்கு இடையே இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரியவந்துள்ளது

12:38 PM (IST) Jun 04

ஒரு நாளைக்கு ரூ.4 லட்சம் வாங்குவேன்... ஆனா சொந்த வீடு இல்ல - நடிகை ஷகீலா சொன்ன ஷாக்கிங் தகவல்

மலையாள படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்து புகழ்பெற்ற ஷகீலா, ஒரு நாளைக்கு ரூ.4 லட்சம் சம்பளம் வாங்கியதாக பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். 

11:36 AM (IST) Jun 04

எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர் லிப்லாக் காட்சி உடன்... வெளியானது பொம்மை டிரைலர்

ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் பொம்மை படத்தின் டிரைலரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.

10:59 AM (IST) Jun 04

1 ரூபாய் சம்பளம் கொடுத்த என்.எஸ்.கே... ஒரே நொடியில் அதை 10 ஆயிரமாக மாற்றிய கலைஞர்

என்.எஸ்.கே கொடுத்த 1 ரூபாய் சம்பளத்தை கலைஞர் கருணாநிதி ஒரே நொடியில் ரூ.10 ஆயிரமாக மாற்றிய சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

10:15 AM (IST) Jun 04

பிள்ளையார் சிலை அகற்றமா.? பொய் செய்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை- ஆட்சியர் எச்சரிக்கை

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பிள்ளையார் சிலையை  அகற்றியதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார். மேலும் தவறான தகவல் பரப்புவர்கள் மீது  சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 

10:09 AM (IST) Jun 04

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... பாடும் நிலாவுக்கு பர்த்டே- பாடகர் எஸ்.பி.பி பற்றிய 15 டக்கரான தகவல்

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், அவரைப்பாற்றிய 15 சுவாரஸ்ய தகவல்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

08:59 AM (IST) Jun 04

ஐபிஎல் முடிந்த கையோடு குக் வித் கோமாளி ஷோவில் எண்ட்ரி கொடுத்த கிரிக்கெட் வீரர்கள் - செம்ம டுவிஸ்ட் வெயிட்டிங்

ஐபிஎல் தொடரில் கலக்கிய இந்திய வீரர்கள் இருவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ள சம்பவம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

08:15 AM (IST) Jun 04

ஓடிசா ரயில் விபத்தில் தமிழர்கள் உயிரிழக்கவில்லை..! அமைச்சர்களை ஒடிசாவில் தங்கியிருக்க முதலமைச்சர் உத்தரவு

ஒடிசா ரயில் விபத்தில் தற்போது வரை அடையாளம் காணப்பட்ட உயிரிழந்தோர், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோருள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை எனத் தெரிய வந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

07:09 AM (IST) Jun 04

ஒடிசா விபத்து களத்தில் தமிழக அமைச்சர்கள்.. திடீரென ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் சந்தி​ப்பு !!

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் சந்தித்து பேசினர்.

07:08 AM (IST) Jun 04

ரயில் விபத்துக்கு பாஜக மட்டுமே பொறுப்பு.! இந்தியாவை காப்பாற்ற கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின் - ஆ.ராசா பேச்சு

ரயில் விபத்தில் மத்திய அரசு ஸ்தம்பித்துள்ளது. மத்திய அரசு விளம்பரம் செய்வதிலேயே குறியாக உள்ளது. கவாச் விவகாரத்தில் ஏன் பிரதமர் கவனம் செலுத்தவில்லை ? ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்