1 ரூபாய் சம்பளம் கொடுத்த என்.எஸ்.கே... ஒரே நொடியில் அதை 10 ஆயிரமாக மாற்றிய கலைஞர்
என்.எஸ்.கே கொடுத்த 1 ரூபாய் சம்பளத்தை கலைஞர் கருணாநிதி ஒரே நொடியில் ரூ.10 ஆயிரமாக மாற்றிய சம்பவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அரசியலில் மிகப்பெரிய ஆளுமையாக விளங்கியவர் கலைஞர் கருணாநிதி. அரசியலைப் போல் சினிமாவில் கருணாநிதி சிறந்த பங்களிப்பை ஆற்றி வந்தார். இவர் கதை, வசனம், திரைக்கதை எழுதிய படங்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. அந்த அளவுக்கு பவர்புல்லான வசனங்களை எழுதி இருப்பார் கலைஞர். சினிமாவில் கலைஞர் கருணாநிதி பற்றி பலரும் அறிந்திடாத சில சுவாரஸ்ய சம்பவங்கள் உண்டு. அப்படி ஒரு சம்பவத்தை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
எம்.ஜி.ஆரின் ராஜகுமாரி திரைப்படத்தின் மூலம் கலைஞர் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும், அவருக்கு முறையாக சம்பளத்தை பெற்றுத்தந்த படம் என்றால் அது என்.எஸ்.கிருஷ்ணன் எடுத்த மணமகள் படம் தான். இப்படத்திற்காக தான் என்.எஸ்.கே. கொடுத்த 1 ரூபாய் சம்பளத்தை 10 ஆயிரமாக மாற்றி இருக்கிறார். அதுவும் இந்த சம்பளத்தை ஒரே நொடியில் மாற்றி இருக்கிறார் கருணாநிதி.
இதையும் படியுங்கள்... இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்... பாடும் நிலாவுக்கு பர்த்டே- பாடகர் எஸ்.பி.பி பற்றிய 15 டக்கரான தகவல்
மணமகள் படத்துக்கு கருணாநிதி தான் கதை, வசனம் எழுத வேண்டும் என விரும்பி அவரை அணுகி இருக்கிறார் என்.எஸ்.கே. இருவருமே கொள்கை கூட்டாளிகள் என்பதால், இப்படத்திற்காக சம்பளம் பேசுவதில் இருவருக்கும் இடையே சில இழுபறியும் இருந்துள்ளது. கருணாநிதி வசனம் எழுத ஓகே சொன்னதும், சம்பளம் எவ்வளவு என என்.எஸ்.கே கேட்க, இதற்கு சிரித்துள்ளார் கலைஞர். உடனே விளையாட்டாக ஒரு வெள்ளை பேப்பரை எடுத்து 00001 என எழுதி நீட்டினாராம் என்.எஸ்.கே.
அதை வாங்கி பார்த்த கலைஞர் கருணாநிதி, சாதுரியமாக யோசித்து, அந்த காகித்தை திருப்பிக் காட்டி இருக்கிறார். அது 10 ஆயிரம் என காட்டியதை பார்த்து ஷாக் ஆன என்.எஸ்.கே, வேறு வழியின்றி அந்த தொகையையே கருணாநிதிக்கு சம்பளமாக கொடுத்திருக்கிறார். இப்படித்தான் நொடிப்பொழுதில் 1 ரூபாய்யை ரூ.10 ஆயிரமாக மாற்றி இருக்கிறார் கலைஞர்.
இதையும் படியுங்கள்... ஐபிஎல் முடிந்த கையோடு குக் வித் கோமாளி ஷோவில் எண்ட்ரி கொடுத்த கிரிக்கெட் வீரர்கள் - செம்ம டுவிஸ்ட் வெயிட்டிங்