திருமணம் ஆகாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்துவந்த பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்

39 வயதாகியும் திருமணம் ஆகாமல் வாழ்ந்து வந்த பிரபல கன்னட நடிகர் நிதின் கோபி மாரடைப்பால் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

kannada actor nithin gopi passed away due to heart attack

இளம் கன்னட நடிகர் நிதின் கோபி மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 39. இதனால் கன்னட திரையுலகமே சோகத்தில் மூழ்கி உள்ளது. வீட்டில் இருந்தபோது தான் நிதின் கோபிக்கு மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். 

நிதினின் மறைவிற்கு கன்னட திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்து வருவதாக பதிவிட்டு வருகின்றனர். நடிகர் நிதினுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனது பெற்றோருடன் பெங்களூரில் வசித்து வந்தார். நிதின் குழந்தை நட்சத்திரமாக இருந்ததில் இருந்து நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கோர விபத்து... 20 ஆண்டுகளுக்கு முன்பே திரையில் காட்டிய கமலின் ‘அன்பே சிவம்’

இவர் கன்னடத்தில் முத்தினந்த ஹேமென்டி, கேரளிடா கேசரி, நிசப்தா, சிரபந்தவ்யா போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலம் பிரபலமானார். 'ஹர ஹர மகாதேவ்' பக்தி சீரியலின் சில எபிசோடுகளிலும் நிதின் நடித்துள்ளார். அதேபோல் தமிழில் சில சீரியல்களிலும் நடித்தார். விரைவில் நிதின் சீரியல் இயக்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.

ஆனால் அவர் இயக்க உள்ள அந்த சீரியலில் படப்பிடிப்பு தொடங்கும் முன்னே நிதின் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். நடிகர் நிதினின் மறைவுக்கு கன்னட திரையுலக பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன. இச்சம்பவம் கன்னட திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

இதையும் படியுங்கள்... வசூலில் ஆர்யாவின் காதர்பாட்சா படத்தை அடிச்சு தூக்கிய ஹிப்ஹாப் ஆதியின் வீரன் - 2ம் நாள் வசூல் நிலவரம் இதோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios