வசூலில் ஆர்யாவின் காதர்பாட்சா படத்தை அடிச்சு தூக்கிய ஹிப்ஹாப் ஆதியின் வீரன் - 2ம் நாள் வசூல் நிலவரம் இதோ
ஆர்யா நடிப்பில் வெளியான காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் மற்றும் ஹிப்ஹாப் ஆதியின் வீரன் ஆகிய இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் ஆர்யா நடிப்பில் கடந்த ஜூன் 2-ந் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். ஆர்யா நாயகனாக நடித்திருந்த இப்படத்தை கொம்பன், மருது, விருமன் போன்ற படங்களை இயக்கிய முத்தையா இயக்கி இருந்தார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார்.
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் ரூ.3 கோடி வசூலித்திருந்த நிலையில், இரண்டாம் நாள் முடிவில் அப்படம் உலகளவில் ரூ.4.5 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்.... கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கோர விபத்து... 20 ஆண்டுகளுக்கு முன்பே திரையில் காட்டிய கமலின் ‘அன்பே சிவம்’
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்துக்கு போட்டியாக ஹிப்ஹாப் ஆதி நடித்த வீரன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தியாகராஜன் தயாரித்து இருந்தார். இப்படத்தை மரக நாணயம் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.கே, சர்வன் இயக்கி இருந்தார். சூப்பர் ஹீரோ கதையம்சம் கொண்ட பேண்டஸி படமான இதற்கு ஹிப்ஹாப் ஆதியே இசையமைத்து இருந்தார்.
வீரன் திரைப்படம் முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி ரூ.3.5 கோடிக்கு மேல் வசூலித்து இருந்த நிலையில், தற்போது இரண்டாம் நாள் வசூல் நிலவரத்தின் படி இப்படம் 2 நாள் முடிவில் உலகளவில் ரூ.5.5 கோடி வசூலித்து உள்ளது. காதர் பாட்சா படத்தை விட ரூ,1 கோடி அதிகம் வசூலித்துள்ள வீரன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதையும் படியுங்கள்.... ஒரு நாளைக்கு ரூ.4 லட்சம் வாங்குவேன்... ஆனா சொந்த வீடு இல்ல - நடிகை ஷகீலா சொன்ன ஷாக்கிங் தகவல்