புதுவையில் லால் சலாம் ஷூட்டிங்... ரஜினியை பார்க்க படையெடுத்து வந்த ரசிகர்கள் - ஸ்தம்பித்து போன பாண்டிச்சேரி
பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் ரஜினியை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு நிலவியது.
ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் லால் சலாம். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்து வருகின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் மொய்தீன் பாய் என்கிற முஸ்லீம் கேரக்டரில் ரஜினி நடிக்கிறார்.
லால் சலாம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையிலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மும்பையிலும் நடைபெற்றது. இதில் மும்பையில் நடைபெற்ற ஷூட்டிங் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. இதையடுத்து சென்னைக்கு பறந்து வந்த படக்குழு, சில நாட்கள் ஓய்வுக்கு பின்னர் மீண்டும் ஷூட்டிங்கை தொடங்கி உள்ளது. தற்போது பாண்டிச்சேரியில் லால் சலாம் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகின்றது.
இதையும் படியுங்கள்... கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கோர விபத்து... 20 ஆண்டுகளுக்கு முன்பே திரையில் காட்டிய கமலின் ‘அன்பே சிவம்’
பாண்டிச்சேரியில் உள்ள ரேடியர் மில் பகுதியில் இந்த ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதை அறிந்த ரசிகர்கள் அங்கு ரஜினியை காண ஆவலோடு குவிந்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று இரவு ரஜினி ஷூட்டிங் முடிந்து வெளியே வந்தபோது அவரது காரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.
இதையடுத்து ரூஃப் டாப் வழியாக ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார் ரஜினி. நடிகர் ரஜினிகாந்தின் காரை ரசிகர்கள் வெள்ளத்தில் மெதுவாக நகர்ந்து வந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை ஐஸ்வர்யா படமாக்கி முடித்துவிடுவார் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... திருமணம் ஆகாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்துவந்த பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்