ஒடிசா ரயில் விபத்தில் காணாமல் போன தமிழர்கள் 8 பேர் யார்..? விவரங்களை வெளியிட்ட தமிழக அரசு

கோரமண்டல் ரயிலில் பயணம் செய்த தமிழக பயணிகளின் இதுவரை தயாரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள 127 நபர்களை மாநில அவசரகால கொள்ளப்பட்டதில் 119 நபர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரியவந்துள்ளது. மீதமுள்ள 8 நபர்களின் விவரங்கள் கிடைத்திருந்த நிலையில் அவர்களை தொடர்பு கொள்ளமுடியவில்லையென தமிழக அரசு தெரிவித்துள்ளது .

The Tamil Nadu government has released the details of the 8 tamilis who went missing in the odisha train accident

கோரமண்டல் ரயில் விபத்து

கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கோரமண்டல் ரயில் ஒடிசாவின், பாலசோர் அருகே சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி 294 பேர் பலியானர்கள்.  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீட்பு பணியின் தமிழக அமைச்சர்களை ஒடிசாவிற்கு அனுப்பியது. இந்தநிலையில் கோரமண்டல் ரயிலில் தமிழகத்தை சேர்ந்த 127 பயணம் செய்தது தெரியவந்தது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ஒடிஷா மாநிலம் பாலசூரில் ஏற்பட்ட பெரும் இரயில் விபத்தில் காயமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு தேவையான மருத்துவம் மற்றும் இதர உதவிகளை செய்திடவும், உயிரிழந்தவர்களை கண்டறிந்து அவர்களது குடும்பத்தினருக்கு உதவிடவும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் மீட்புக் குழு அமைக்கப்பட்டது. 

The Tamil Nadu government has released the details of the 8 tamilis who went missing in the odisha train accident

விபத்தில் சிக்கிய 127 தமிழக பயணிகள்

மேலும், மீட்புப் பணிகள் குறித்த விபரங்களை பெறுவதற்காகவும். பயணிகளின் உறவினர்கள் பயணிகளைப் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு ஏதுவாக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு முழு வீச்சில் சென்னை எழிலகத்தில் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு இரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகளது பட்டியல் தென்னக இரயில்வேயிலிருந்து பெறப்பட்டு அதில் தமிழ்ப் பெயர் கொண்டவர்களையும், தமிழ்நாட்டில் இருப்பிட முகவரி அளித்துள்ள 127 நபர்களது பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை தயாரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள 127 நபர்களை மாநில அவசரகால கொள்ளப்பட்டதில் இருந்து தொடர்பு கொள்ளப்பட்டதில், 119 நபர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரியவந்துள்ளது. 

The Tamil Nadu government has released the details of the 8 tamilis who went missing in the odisha train accident

தமிழர்கள் உயிரிழக்கவில்லை

எஞ்சிய 8 நபர்களது செல்பேசி மற்றும் முகவரி இல்லாத நிலையில் அவர்களை தொடர்புகொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒடிஷாவில் முகாமிட்டுள்ள மீட்புக் குழுவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டு அறையும் இணைந்து தொடர்பு கொள்ள இயலாத நபர்களுடைய விபரங்களை சேகரிக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த இரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களது விவரங்கள் ஒடிசாவில் இதுவரை சேகரிக்கப்பட்டதில் தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் இந்த இரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை என்பது தெரியவருகிறது. மேலும், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்றுவரும் நபர்களது விபரங்களை இதுவரை பரிசீலனை செய்ததில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் காயமுற்று சிகிச்சை பெறவில்லை என்ற விவரமும் தெரியவந்துள்ளது.

காணமல் போன 8 பேர்கள் யார்.?

இந்நிலையில், சேகரிக்கப்பட்ட விபரத்தின் அடிப்படையில் தொடர்புகொள்ள இயலாத நிலையில் உள்ள  8 நபர்களது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர், இவர்கள் குறித்த தகவல் அறிந்திருப்பின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு கட்டணமில்லா தொலைபேசி - 1070, செல்பேசி - 9445869843எண்களில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, 
1. நாரகணிகோபி, ஆண், வயது -34

2. கார்த்திக், ஆண், வயது -19

3. ரகுநாத், ஆண். வயது - 21

4. மீனா, பெண், வயது - 66

5. எ. ஜெகதீசன், ஆண், வயது 47

6. கமல், ஆண், வயது -26

7. கல்பனா, பெண், வயது 19

8. அருண். ஆண், வயது -21

இதையும் படியுங்கள்

ஜூலை மாதம் முதல் தமிழகத்தில் மீண்டும் மின் கட்டண உயர்வா.? அலறி துடிக்கும் அன்புமணி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios